3 சீட் தானாம்.. சூரியனில் நின்றால் கூட கிடைக்குமாம்.. நாம ஒன்னு நினைத்தால் தெய்வம் ஒன்னு நினைக்கும்!
திமுக கூட்டணியில் மதிமுக, விசிக நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: நாம ஒன்னு நினைத்தால் தெய்வம் ஒன்னு நினைக்கும் என்பார்களே.. அது மாதிரி திமுக கூட்டணி கட்சிகளின் நிலைமை ஆகிவிடுமோ என்ற கவலை அந்த கட்சி தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ளது.
திமுகவுக்கு இப்போது ஒரே குறி, 10 வருடம் இல்லாத ஆட்சியை எட்டிப்பிடிப்பதுதான்.. அந்த மாஸ் வெற்றியுடன் பாஜகவுக்கு ஒரு செக் வைக்க வேண்டும் என்பதுதான்.
அதனால், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இந்த தேர்தல் மிக மிக முக்கியமானது... ஆனால், அதிமுக மெகா கூட்டணி தொடர்வது, பாஜக தொடர்ந்து நெருக்கடி தருவது, சீமான் ஒரு பக்கம், கமல் ஒரு பக்கம் களம் இறங்குவது, புகையும் உட்கட்சி பூசல், நெருக்கும் கூட்டணி கட்சிகள் என பல்வேறு பிரச்சனைகளில் திமுக சிக்கி விழித்து வருகிறது.

இதையெல்லாம் சமாளித்துதான் திமுக வெற்றி பெற வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது... அதனால்தான் 200 தொகுதிகளிலாவது போட்டியிட்டு, மெஜாரிட்டியை கையில் வைத்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது. கூட்டணி கட்சிகளும் இதற்கு ஒத்துழைப்பு தந்தால், அனைத்துமே சுமூகமாக முடியும் என்பது திமுக தலைமையின் கணக்கு.. ஆனால் கூட்டணி கட்சிகளின் கணக்கோ வேறு மாதிரியாக உள்ளது.
அவர்களுக்கு எல்லாம் சின்னம் பிரச்சனையும், தனித்தன்மையை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமுமே மேலெழுந்து உள்ளது.. வைகோ, 20 சீட்டுகள் கேட்டு கொண்டிருக்கிறார் .. ஆனால், இன்னும் திமுக சாதகமான பதிலை சொல்லவில்லை.. அதேசமயம் வேறு கணக்கு போட்டு வருகிறதாம். மதிமுக தனிச் சின்னத்தில் நிற்க விரும்பினால் நிற்கட்டும்..
ஆனால் 3 சீட் மட்டுமே ஒதுக்கப்படும்.. உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே அந்த தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.. இதுதான் வைகோ தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி, இறுதியில் வெங்கய்ய நாயுடுவை சந்திக்கும் அளவுக்கு சென்றுவிட்டதாக காரணம் கூறுகிறார்கள்..
இதே ஒற்றை இலக்க சீட்டுதான் விசிகவுக்குமாம்.. 3 சீட்டுகளிலேயே திமுக நிற்கிறது.. இதை வைகோ ஏற்க முன்வருவாரா? அல்லது வழக்கம்போல உணர்ச்சிவயப்பட்டு ஏதாவது ஒரு முடிவை எடுத்துவிடுவாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications