சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இவர்" மட்டும் திமுக வந்தால் போதும்.. சசிகலாவை சமாளிக்கலாம்.. ஸ்டாலின் செய்வாரா?

திமுகவில் அழகிரியை இணைக்கும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் இந்த விஷயத்தை பரிசீலிக்க வேண்டும்.. இல்லாவிட்டால் நமக்கு வெற்றி வாய்ப்பு சற்று சிரமம் ஆகிவிடும் என்று உடன்பிறப்புகள் முக அழகிரி விஷயத்தை முன்வைத்து பேசுகிறார்கள்.

ரஜினி சொன்னாரே அதுமாதிரிதான், திமுகவுக்கு இந்த முறை வாழ்வா, சாவா? என்ற பிரச்சனை உள்ளது.. 10 வருட கால ஆட்சியை இழுத்துபிடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது.

அதனால், பார்த்து பார்த்து காய் நகர்த்தி வருகிறது.. சொந்த கூட்டணி கட்சிகளிடம்கூட, அளவுக்கு மிஞ்சி நெருக்கம் காட்டாமல் சீட் விஷயத்தில் கறார் தன்மையை கடைப்பிடித்து வருகிறது.

 அய்யோ.. அடிமடியிலேயே கை வைத்த அய்யோ.. அடிமடியிலேயே கை வைத்த "டீம்".. தயாராகும் லிஸ்ட்.. ஸ்டாலின் எடுக்க போகும் புது அதிரடி!

 தனிக்கட்சி

தனிக்கட்சி

இப்படிப்பட்ட சூழலில்தான் அழகிரியை மறுபடியும் கட்சிக்குள் இணைத்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.. இதற்கு 2 காரணம்தான்.. ஒன்று ஏராளமான ஆதரவாளர்களை தனிப்பட்ட முறையில் பெற்றுள்ள அழகிரி, தனிக்கட்சி எதையாவது தொடங்கி விடக்கூடும்.. மற்றொன்று தனிக்கட்சி தொடங்காவிட்டாலும் பாஜகவுக்கு ஆதரவு அல்லது ஸ்டாலின் பெயரை டேமேஜ் செய்வது என்ற அஸ்திரத்தை கையில் எடுக்க கூடும் என்பதால்தான்.

பாஜக

பாஜக

ஒருகட்டத்தில் பாஜக, அழகிரியை தன் பிடிக்குள் கொண்டு வர எப்படி எப்படியோ முயன்று பார்த்தது.. பதவி ஆசை காட்டியது.. தனிக்கட்சிக்கு ஆதரவு தந்தது.. ஆனால், ஒரு விஷயத்தில் மட்டும் அழகிரி அன்றும் சரி, இன்றும் சரி தெளிவாக இருக்கிறார்.. அது கலைஞருக்கும், அவர் கட்டிக்காத்த திமுகவுக்கும் எந்த வகையிலும் பங்கம் வந்துவிடக்கூடாது என்பதே... இல்லாவிட்டால் அழகிரி என்றோ பாஜக பக்கம் சென்று, திமுகவின் செல்வாக்கை சரிய விட்டிருக்க கூடும்.

 தென் மாவட்டம்

தென் மாவட்டம்

இப்போது தேர்தல் நெருங்கி வருவதால், தென் மாவட்டங்களில் திமுகவின் வாக்குகளை அப்படியே அள்ளிக் கொண்டு வர அழகிரியால் முடியும்.. ஒருவேளை சசிகலாவும், அதிமுகவும் இணைந்துவிட்டால், அல்லது அமமுகவே தனித்து களம் கண்டால் சமுதாய ஓட்டுக்களை பெற்றுவிடக்கூடும்.. அவர்களுக்கு பலமே இந்த தென்மாவட்டங்கள்தான்.. அப்படி இருக்கும்போது, அழகிரியை திமுகவில் சேர்த்து கொள்வது என்பதை ஸ்டாலின் அவ்வளவு சீக்கிரம் தவிர்த்துவிடக்கூடாது என்பதுதான் பெரும்பாலானோர் எண்ணம்.

 2 கண்டிஷன்

2 கண்டிஷன்


இப்படி ஒரு பேச்சு 10 நாளைக்கு முன்புகூட எழுந்தது.. அழகிரியை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் குடும்பத்தில் சிலர் இறங்கினர்... அப்போது அழகிரி 2 கண்டிஷன்களை முன்வைத்தாராம்.. ஒன்று, தனக்கு இல்லாவிட்டாலும், மகனுக்கு கட்சியில் நல்ல பதவி வேண்டும், இன்னொன்று, திமுக அறக்கட்டளையில் தன்னை உறுப்பினராக்க வேண்டும் என்றாராம்..

எதிர்ப்பு

எதிர்ப்பு

இதற்கு திமுக தலைமையும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்பட்டது.. முன்பு இதே அறக்கட்டளையில் உறுப்பினராக்க வேண்டும் என்று அழகிரி கேட்டிருந்தார்.. ஆனால் ஸ்டாலின் மறுத்திருந்தார்.. பிறகு ஓகே சொல்லி இருந்ததை பார்த்தால் எல்லாம் சுபம் என்றே கணிக்கப்பட்டது.. ஆனால், அறக்கட்டளை விஷயத்தில் மட்டும் பொறுப்பை தர ஸ்டாலின் குடும்பத்தில் ஒருசிலர் விரும்பவில்லையாம்.. மகனுக்கு பதவி தருவதில் எந்த பிரச்சனை இல்லை என்று சொல்லிவிட்ட நிலையில், அறக்கட்டளை கண்டிஷனுக்குமட்டும் பிடிவாதம் காட்டி வருவதாக தெரிகிறது.

சசிகலா

சசிகலா

இதனால், கருணாநிதி குடும்பத்தினர் மறுபடியும் சமாதான பேச்சுவார்த்தையில் இறங்கி உள்ளனராம்.. அழகிரியை விரைவில் இணைத்து கொள்ள ஸ்டாலினிடம் பேச்சு நடப்பதாகவும் தெரிகிறது.. இதேதான் பெரும்பாலான உடன்பிறப்புகளின் விருப்பமாகவும் உள்ளது.. அழகிரி வருகையால் சசிகலாவின் சமூக வாக்குகள் உடையும், திமுகவின் வாக்கு உயரும்.. பாஜகவின் கனவும் நொறுங்கும் என்கிறார்கள்.

English summary
Will MK Stalin consider MK Azhagiris DMK entrys
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X