ஏன் வந்தார் கேசிஆர்.. ஸ்டாலினுடன் என்னதான் பேசினார்.. திமுகவின் வியூகம்தான் என்ன?
3-வது அணி அமைக்க முக ஸ்டாலின் ஆதரவு தருவாரா என்பது சந்தேகமாக உள்ளது
Recommended Video
சென்னை: என்னதான் செய்ய போகிறார் முக ஸ்டாலின்? ஒரு பக்கம் பகிரங்க காங்கிரஸ் ஆதரவு.. இன்னொரு பக்கம் மறைமுக பாஜக ஆதரவு.. இதற்கு நடுவில் 3-வது அணிக்கு ஆதரவா? இதில் என்ன முடிவில்தான் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை!
எவ்வளவுதான் முட்டு கொடுத்து காங்கிரசை தூக்கி பிடித்தாலும், வலுவாக நிற்கவில்லையே என்ற எண்ணம் கூட்டணி கட்சிகளுக்கு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக திமுகவுக்கு!
பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்று ஸ்டாலின் அறிவித்ததுமே, கூடவே இருந்த கூட்டணி தரப்பினர் கப்-சிப் ஆகிவிட்டனர்.

முதல் அடி
சந்திரபாபு நாயுடு, மம்தா, கம்யூனிஸ்ட் கட்சிகள் என யாருமே ஸ்டாலின் கருத்தை பெரிதாக எடுத்து கொள்ளவும் இல்லை.
அதை ஆதரிக்கவும் இல்லை. ராகுலை பிரதமர் வேட்பாளர் என்று சொன்னது அவரது சொந்த கருத்து என்று சொல்லி விட்டு, ஒதுங்கி கொண்டதே மிச்சம்! இதுதான் ஸ்டாலினுக்கு முதல் அடி!

ராகுல்காந்தி
இதன்பிறகு மம்தா மாநாட்டுக்கு போனவர், அந்த மேடையில் ராகுல்காந்தி பற்றி வாயே திறக்கவில்லை. கேரளா பக்கம் போனபோதும், ராகுல்காந்தி பற்றி ஸ்டாலின் வாய் திறக்கவில்லை. ஏனெனில் சந்திரபாபு நாயுடு முதல், மம்தா வரை எல்லாருக்குமே பிரதமர் பதவி ஆசை உள்ளது!

மென்மை போக்கு
இந்நிலையில், காங்கிரசை உயர்த்தி பிடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தினார் ஸ்டாலின். இந்த சூழ்நிலையில்தான் பாஜகவுடன் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது திமுக என்றும், சில விஷயங்களை பகிரங்கமாக கண்டிக்காமல் ஆதரவு தருவது போல நடந்து கொள்கிறது என்றும் தகவல்கள் கசிந்தன. குறிப்பாக பாஜகவில் ஒரு மென்போக்கை கடைபிடிப்பதாக பரவலாக பேசப்பட்டது.

சந்திரசேகரராவ்
இதற்கு நடுவில்தான், காங்கிரஸ், பாஜக அல்லாத ஆட்சியை உருவாக்க 3-வது அணியை உருவாக்க சந்திரசேகரராவ் வியூகம் அமைக்க ஆரம்பித்தார். சந்திரபாபு நாயுடு எப்படி எல்லோரையும் சந்தித்து ஆதரவு கேட்டு வந்தாரோ, அப்படியே கேசிஆரும் பிளான் போட்டு ஆரம்பித்துள்ளார், ஸ்டாலினையும் சந்திக்க விருப்பப்பட்டுள்ளார்.

சலசலப்பு
இப்போது ஸ்டாலின் என்ன முடிவு எடுக்க போகிறார்? காங்கிரசை பகிரங்கமாக ஆதரித்தவர் என்பது ஒரு பக்கம், பாஜகவுடன் மறைமுக கூட்டு என்பது மறுபக்கம், 3-வது அணி அமைக்க துடிக்கும் சந்திரசேகரராவை நேரில் சந்தித்து பேசுவது என்பது மற்றொரு பக்கம் என்ற சலசலப்புக்கு ஆளாகி உள்ளார்.

சந்திரசேகரராவ் மகள்
சந்திரசேகரராவ் உடனான சந்திப்பு என்பதை வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சொல்லி விட முடியாது. ஏனெனில், முதலாவதாக, அவருடனான சந்திப்பை ஸ்டாலின் தவிர்க்கிறார் என்று திமுக தரப்பிலேயே சொல்லப்பட்டது. இரண்டாவதாக, ஸ்டாலினை சந்திக்க எப்போதும் நேரம் கேட்கவில்லை என்று சந்திரசேகரராவ் மகளே தெரிவித்தும் இருந்தார்.

பாஜக தூது?
மூன்றாவதாக, "மூன்றாவது அணி அமைக்க சந்திரசேகரராவ் முயற்சிக்கவில்லை என்றும், மாறாக இவரை பாஜகதான் பின்னால் இருந்து இயக்குகிறது, மறைமுகமாக பாஜக கூட்டணி குறித்து பேச சந்திரசேகரராவை அனுப்பி வைத்துள்ளது" என்றும் ஒரு சாரார் கூறுகிறார்கள். சுருக்கமாக சொல்லபோனால் தேர்தலுக்கு பின் கூட்டணி அமைக்கவே இந்த தூது என்றே சொல்லப்படுகிறது. அதனால் இது எல்லாவற்றையுமே இன்றைய சந்திப்பு என்பது தவிடு பொடியாக்கிவிட்டது என்றே சொல்லலாம்.

என்னதான் ஆகும்?
ஏனெனில் மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து 3-வதுஅணி அமைப்பது குறித்து இருதரப்பும் இன்று பேசுவார்களா? அப்படி ஒருவேளை 3-வதுஅணி அமைக்க ஸ்டாலின் ஆதரவு என்றால் கூடவே இருக்கும் கூட்டணி கட்சிகளின் நிலை என்ன? அதிலும் அதிமுக எடுக்க போகும் முடிவு என்றெல்லாம் சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் இப்போது சந்திப்பு முடிந்தும் இரு தரப்புமே மவுனமாக உள்ளது காங்கிரசை கழட்டி விடப்பட திமுக தயாராகிவிட்டதோ என்றுதான் எண்ண தோன்றுகிறது
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications