சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

25 சீட் ஓகேன்னா, "அவர்" கிட்ட போகலாம்.. சீமானும் இல்லை.. ரஜினியும் டவுட்டு.. கமல் யாருடன் சேருவார்!

கமல் திமுக கூட்டணியுடன் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தபடியே உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: சீமானும் கூட்டணியில் சேர வாய்ப்பில்லை.. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதே டவுட்டாக இருக்கிறது. எனவே கமல் யாருடன் கூட்டணி வைப்பார்? திமுகவா? ரஜினியா? என்ற அடுத்த சந்தேகம் எழுகிறது.

ரஜினியை பொறுத்தவரை இன்னும் எதுவும் தெளிவாக தெரியவில்லை.. உடம்பும் சரியில்லாமல் உள்ளது.. ஒருவேளை திட்டமிட்டபடியே கட்சி ஆரம்பித்தாலும் அவருக்கு எந்த மாதிரியான நெருக்கடிகள் வந்து சேருமோ தெரியாது..

எனவே அவர் வரும்போது வரட்டும், பேசிக் கொள்ளலாம் என்ற ரீதியில்தான் கமலும் அதை இப்போதைக்கு பெரிதாக எடுக்கவில்லையாம்.

அருணாச்சலம் இப்படி பண்ணிட்டாரே.. கமல் அருணாச்சலம் இப்படி பண்ணிட்டாரே.. கமல் "ரகசியம்" எல்லாம் போய்ருமே.. பாஜக ஆபரேஷன் சக்சஸ்..!

சீமான்

சீமான்

முதலில், சீமானுடன்தான் கமல் கூட்டணி சேருவதாக இருந்தது.. அப்படித்தான் சில தகவல்களும் வந்தன.. முதல்கட்ட பணிகளை கமலும் - சீமானும் துவக்கி விட்டதாகவும் கூறினார்கள்.. ஆனால், அது ரஜினியால் கெட்டுப் போய் விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தற்போது திமுகவுடன் கூட்டணி சேர பேச்சு நடக்கிறது என்கிறார்கள்.

 கொள்கை

கொள்கை

கிறிஸ்தவர், இஸ்லாமியர் நலனில் அதிக அளவு அக்கறை கொண்டும், இந்துத்துவா கொள்கைக்கு எதிராகவும், தமிழக அரசியல் களத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாட்டில் திமுக, தேசிய அளவில் காங்கிரஸ்தான்.. எனவேதான், சிறுபான்மையினரில் பெரும்பாலானோர், தேர்தலின்போது இந்த 2 கட்சிகளுக்கும், விடாமல் வாக்களித்து வருகின்றனர்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

இந்த சிறுபான்மையினர் வாக்குகளைத்தான் கமல் பிரிக்கக்கூடும் என்பது திமுகவின் கணக்கு.. மேலும் காங்கிரஸை காட்டிவிட்டு, கமலை உள்ளே இழுத்து போடும் அடுத்த முயற்சி என்றும் சொல்லப்படுகிறது.. அந்த வகையில் 25 சீட்டுக்கள் கமலுக்கு திமுக வழங்க தயாராக இருப்பதாகவும், அதற்காக கமலை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் இறங்கி வருவதாகவும் தகவல்கள் கசிந்து வந்தபடியே உள்ளன.

திமுக

திமுக

ஆனால் 45 சீட் கேட்ட கமல், இந்த 25 சீட்டுக்கு ஒப்புக் கொள்வாரா என்பது சந்தேகம்தான்.. ஒருவேளை ஒப்புக் கொள்வாரானால், 5 சதவீத ஓட்டுக்களை மநீம அசால்ட்டாக பெறக்கூடும் என்கிறார்கள். அல்லது ரஜினி கமலுடன் இணைவரானால், அதில் ஓவைசியும் இணையலாம், இவர்கள் அனைவரும் சேர்ந்து 10 சதவீத ஓட்டுக்களை பெறக்கூடும் என்கிறார்கள்.

 ஆப்ஷன்கள்

ஆப்ஷன்கள்

எனவே கமலுக்கு 2 ஆப்ஷன்கள் இருக்கின்றன.. ஒன்று, 25 சீட் என்பது உண்மையானால், திமுக கூட்டணியில் இணைந்து கமல் தேர்தலை சந்திப்பது.. அல்லது 3வது அணியாக உருவெடுத்து ரஜினி, ஓவைசியுடன் இணைந்து தேர்ந்தலை சந்திப்பது.. இந்த இரண்டில் ஒன்றையே கமல் தேர்ந்தெடுப்பார்கள் என்கிறார்கள்.

English summary
Will MNM Kamalhasan join in DMK Alliance soon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X