சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2 விஷயம் சொன்னார்.. ஒன்றை கச்சிதமா முடிச்சிட்டார்.. இன்னொன்னு பாக்கி.. தெறிக்கவிடும் சீமான்.. பளீர்!

Google Oneindia Tamil News

சென்னை: 2021 சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சொன்ன இரண்டு விஷயங்கள் அதிக கவனத்தை பெற்றுள்ளன.. அதில் ஒரு விஷயத்தை ஏற்கனவே சீமான் நிறைவேற்றிவிட்ட நிலையில் இன்னொரு விஷயம் தமிழக அரசியலில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

2021 சட்டசபை தேர்தலில் புதிய கேம் சேஞ்சராக நாம் தமிழர் கட்சி உருவெடுத்து வருகிறது.. கடந்த லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் சிறப்பாக செயல்பட்ட நிலையில் தற்போது சட்டசபை தேர்தலுக்கான திட்டங்களை வகுத்து வருகிறது.

இந்த நிலையில் இன்று நாம் தமிழர் கட்சி தங்கள் வேட்பாளர்களை அறிமுகம் செய்ய உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சி இன்று அறிவிக்க உள்ளது.

குட்டி செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை.. கூடவே வைத்துக் கொண்டு.. வலம் வரும் கமல்ஹாசன்! குட்டி செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை.. கூடவே வைத்துக் கொண்டு.. வலம் வரும் கமல்ஹாசன்!

ஒரே மேடை

ஒரே மேடை

ஒரே மேடையில் 234 வேட்பாளர்களையும் இன்று அறிவிக்கிறார் சீமான். ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பு செயயப்படுகிறது. இன்று நாம் தமிழர் யாரை எல்லாம் வேட்பாளராக அறிவிக்க போகிறது என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த அறிவிப்பு விழா பெரிய அளவில் நடக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

லோக்சபா தேர்தல்

லோக்சபா தேர்தல்

இந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக இரண்டு விஷயங்களை சீமான் குறிப்பிட்டு இருந்தார். அதன்படி லோக்சபா தேர்தல் போலவே 50% பெண் வேட்பாளர்களை சட்டசபை தேர்தலிலும் களமிறக்குவேன் என்று குறிப்பிட்டு இருந்தார். தொகுதி ஒதுக்கீட்டில் 50% ஒதுக்கீடு பெண்களுக்கு கொடுக்கப்படும் என்று சீமான் குறிப்பிட்டு இருந்தார். தற்போது அவர் சொன்னபடி செய்ய போகிறார்.

அறிவிப்பு

அறிவிப்பு

அதன்படி இன்று 234 வேட்பாளர்களில் 117 ஆண் வேட்பாளர்கள் ,117 பெண் வேட்பாளர்கள் நாம் தமிழர் சார்பாக சீமான் களமிறக்க உள்ளார். இதற்கான தேர்வும் முடிந்துவிட்டது. பெண்களுக்கு சம உரிமை கொடுத்து களமிறக்க உள்ளார். இந்த முதல் விஷயத்தை சீமான் நிறைவேற்ற உள்ள நிலையில் இன்னொரு பக்கம் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவேன் என்று சீமான் குறிப்பிட்டு இருந்தார்.

கொளத்தூர்

கொளத்தூர்

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட ரெடி என்று சீமான் குறிப்பிட்டு இருந்தார். இன்று சீமான் போட்டியிட போகும் தொகுதியும் அறிவிக்கப்படும். இதனால் அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதை மட்டும் சீமான் நிறைவேற்றினால் அது தமிழக அரசியலில் பெரிய திருப்பமாக இருக்கும்.

திருப்பம்

திருப்பம்

சீமான் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டால் அது தமிழக அரசியலில் மிகப்பெரிய துணிச்சலான முடிவாக இருக்கும். பெரிய சவாலாக அது இருக்கும். நாம் தமிழர் கட்சி தேர்தல் களத்தில் தற்போது வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. மற்ற கட்சிகளை விட நாம் தமிழர் வேகமாக வேட்பாளர்களை அறிவிக்க உள்ள நிலையில் சீமானின் ஒவ்வொறு மூவும் அதிக கவனத்திற்கு உள்ளாகி உள்ளது.

English summary
Will Naam Tamilar Seeman contest in Kolathur against DMK Chief M K Stalin?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X