பயிர்க்கடன்! ரூ.10000 கோடி நபார்டு வங்கி ஒதுக்குமா? விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொல்லுமா தமிழக அரசு?
சென்னை: கூட்டுறவு வங்கிகள், கிராம வங்கிகள் மற்றும் தேசிய வங்கிகளுக்கு பணம் கொடுத்து, அந்த வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு கடன் கிடைக்க உதவ செய்கின்றன நபார்டு வங்கிகள்.. இந்த கடன்கள் விதை, உரம் வாங்குவது, பம்ப் செட், கிணறு, டிராக்டர் போன்ற விவசாய தேவைகளுக்காக வழங்கப்படுகிறது.. இப்படிப்பட்ட சூழலில், விவசாயிகளின் நன்மைக்காக தமிழக அரசு நபார்டு வங்கியிடம் விடுத்துள்ளது.
விவசாயிகளின் நலனுக்காக நம்முடைய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முக்கியமாக மழைக்காலங்கள், வறட்சி போன்ற காரணங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு விடுகிறார்கள்.. எனவேதான், பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டம். இந்த திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்படுகிறது.

இயற்கை சீற்றத்தில் பயிர்கள் பாதிக்கப்படும்போது, காப்பீடு மூலம் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது அவசியம். விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.432 பிரிமீயம் செலுத்தினால், அவர்களுக்கு ரூ.32,160 வரை கிடைக்கும்.
20000 கோடி பயிர் கடன் இலக்கு
பயிர் காப்பீடு செய்ய முதலில் நவம்பர் 1ம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், அந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, நவம்பர் 30ம் தேதி கடைசி நாளாக அறிவித்தது. எனினும், பல விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யாமல் இருக்கிறார்களாம். அதனால்தான், அவர்களை நலனை கருத்தில் கொண்டு டிசம்பர் 1ம் தேதி வரை பயிர் காப்பீடு செய்ய அவகாசத்தை நீடித்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக விவசாயிகளுக்கு, கூட்டுறவு வங்கிகளில் இந்த வருடம் 20,000 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்குவதற்கான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், குறுகிய கால பயிர்க் கடனுக்கான நிதியாக, நபார்டு வங்கி, 3,730 கோடி ரூபாய் வழங்கியுள்ள நிலையில், இதனை 10,000 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் கோரிக்கை விடுத்துள்ளார்.
50 ஆயிரம் கோடி வியாபாரம்
தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டு சார்பில் கூட்டுறவு மாநாடு, சென்னையில் நேற்று நடைபெற்றது.. இந்த மாநாட்டில் அமைச்சர் பெரிய கருப்பன் பேசும்போது, ஐக்கிய நாடுகள் சபை இந்த வருடத்தை, சர்வதேச கூட்டுறவு ஆண்டாக அறிவித்து உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த வருடம் தேசிய வங்கியின் தமிழ்நாடு மண்டலம் ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேலாக வியாபார பரிவர்த்தனை செய்து அகில இந்திய அளவில் முதலிடத்தில் வகித்தது. நடப்பு ஆண்டிலும் இதே முனைப்புடன் செயல்படும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு.
50 சதவீதம் உயர்வு கோரிக்கை
இந்த ஆண்டு பயிர்கடன் இலக்காக ரூ.20,000 கோடி தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. குறுகிய கால பயிர்க் கடனுக்கான நிதியாக நபார்டு 18.65 சதவீதம் அதாவது, 3,730 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. இதனை 50% அளவிற்கு உயர்த்தி வழங்கினால், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் பயன்பெறும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கணினிமயமாக்கல் திட்டத்தில் 4532 சங்கங்கள் ரூ.180 கோடி செலவில் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன என்று கேட்டுக் கொண்டார்.
இந்த மாநாட்டில் நபார்டு வங்கியின் தமிழக மண்டல அலுவலக முதன்மை பொது மேலாளர் ஆனந்த், தமிழக கூட்டுறவு துறை செயலர் சத்யபிரதா சாஹு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications