Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜாதி பல்லாயிரம் ஆண்டு “அழுக்கு”.. சில பத்தாண்டுகளில் அதை சரிசெய்ய முடியாது! ஆனால்.. ஸ்டாலின் அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுயமரியாதைச் சமதர்மச் சமூகத்தை உருவாக்குவதற்கு இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்லாயிரமாண்டு அழுக்கை சில பத்தாண்டுகளில் சரிசெய்திட முடியாது என்பது உண்மைதான் எனவும், சமூக வளர்ச்சி - சிந்தனை வளர்ச்சியை உருவாக்கும் நமது விழிப்புணர்வு பயணம் என்பது தொய்வில்லாமல் தொடர வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

சென்னையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அதில், “ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் உன்னிக்குச்சியில் 1 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் தளவாடப் பொருட்கள் உற்பத்திக்கான தொழிற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என்னும் புதிய திட்டம் 100 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

will-not-eradicate-caste-in-few-decades-tn-cm-mk-stalin-speech

நகர்ப்புரப் பகுதிகளிலும், ஊரகப்பகுதிகளிலும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதிசெய்து, முழுமையான சமூக பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த “அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்” நடைமுறைப்படுத்தப்படும். இந்தத் திட்டம் வரும் ஐந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படவுள்ளது.

பழங்குடியின கிராமங்களுக்கு இணைப்புச் சாலைகள், தெரு விளக்குகள், சோலார் விளக்குகள் மற்றும் குடிநீர் வசதிகள் வழங்கும் சிறப்புத் திட்டத்தின்கீழ், கடந்த ஆண்டு 135 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. வீடற்ற இருளர் உள்ளிட்ட பழங்குடியினருக்கு 4,324 வீடுகள் 420 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகின்றன.

பழங்குடியினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் (CTDP), இந்த விரிவான ஆண்டு 94 கோடியே 99 லட்சம் செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழங்குடியினர் மற்றும் பிற மரபு வழியாக வனங்களில் குடியிருப்போர் (வன உரிமைகள் அங்கீகரித்தல்) சட்டம். 2006-இன் கீழ் இதுவரை 10,410 தனிநபர் உரிமைகளும், 528 சமூக உரிமைகளும் உறுதி செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

will-not-eradicate-caste-in-few-decades-tn-cm-mk-stalin-speech

மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், அவர்களின் முக்கியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும், “தமிழ்நாடு மாநில பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான ஆணையம் உருவாக்கப்பட்டு இயங்கி வருகிறது. பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழ்களின் மெய்த்தன்மையினை கூர்ந்தாய்வு செய்து இறுதி ஆணை பிறப்பிக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலாளர் / கூடுதல் செயலாளர்கள் தலைமையில் மாநில அளவில் மூன்று கூர்நோக்குக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதிரை வண்ணார் நல வாரியத்திற்கு புத்துயிர் அளித்து, வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த நிதியாண்டில் 10 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. சிறப்புக் கூறுகள் திட்டம் என அழைக்கப்பட்டு வந்த ஆதிதிராவிடர் துணைத் திட்டத்தின்கீழ் இந்த நிதியாண்டில் மாநில திட்ட ஒதுக்கீடான 77,930 கோடி ரூபாயில், ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்காக 17,075 கோடி ரூபாய் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டத்திற்காக 1,595 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத்திட்டம் செவ்வனே செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய தனிச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. உரிய ஆலோசனைக்குப் பின்னர், அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடரில் இதற்கான சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி புகட்டுதல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், அதிகாரம் பொருந்திய பொறுப்புகளில் அமர வைத்தல், இடஒதுக்கீடுகள், பொருளாதார உதவிகள், மனைகள் தருதல், வீடுகள் வழங்குதல் இவை அனைத்தும் கண்ணும் கருத்துமாக கவனித்து வழங்கப்பட்டு வருகிறது.

will-not-eradicate-caste-in-few-decades-tn-cm-mk-stalin-speech

இத்தோடு அரசின் கடமை முடிந்துவிட்டதாக நான் கருதவில்லை. சுயமரியாதைச் சமதர்மச் சமூகத்தை உருவாக்குவதற்கு இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். நிதி ஒதுக்கீடுகளால், தொலைநோக்குப் பார்வையால், கண்காணிப்பால் மற்ற வளர்ச்சிகளை நாம் எட்டிவிடலாம். ஆனால் சமூக வளர்ச்சியும், சிந்தனை வளர்ச்சியும் அப்படிப்பட்டது அல்ல. அது மக்கள் மனங்களில் உருவாக வேண்டும்.

மக்கள் மனதில் மனமாற்றங்கள் ஏற்பட வேண்டும். இது மிகச் சீக்கிரமாக ஏற்பட்டுவிடாது என்பது உண்மைதான். பல்லாயிரமாண்டு அழுக்கை சில பத்தாண்டுகளில் சரிசெய்திட முடியாது என்பது உண்மைதான். அதே நேரத்தில் சமூக வளர்ச்சி - சிந்தனை வளர்ச்சியை உருவாக்கும் நமது விழிப்புணர்வு பயணம் என்பது தொய்வில்லாமல் தொடர வேண்டும்.” என்று தெரிவித்து உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+