கிளைமேட் மாறுதே! சசிகலாவிற்கு போனை போட்ட முக்கிய "புள்ளி".. இங்க பார்த்தா திடீர் மீட்டிங்! என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று தேனி சென்ற டிடிவி தினகரன் அங்கு ஓ பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான நிர்வாகிகளை சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டே வருகிறது. அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதோடு அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது அதிமுகவை எடப்பாடி கிட்டத்தட்ட முழுமையாக கைப்பற்றிவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.

தேர்தல் ஆணையத்தில் பொதுக்குழுவிற்கு எதிராக இருக்கும் வழக்கில் மட்டும் சாதகமாக தீர்ப்பு வந்தால், எடப்பாடி அதிமுகவில் அசைக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.

ஆனால் எடப்பாடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் ஓ பன்னீர்செல்வம் அடுத்தடுத்து முறையிட்டு வருகிறார்.

சந்திப்பு

சந்திப்பு

அதிமுகவில் அடுத்தடுத்து பல திருப்பங்களும், சட்ட போராட்டங்களும் நடந்து வரும் நிலையில்தான் இன்று தேனி சென்ற டிடிவி தினகரன் அங்கு ஓ பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான நிர்வாகிகளை சந்தித்தார். தேனி மாவட்ட அமமுக செயல்வீரர்கள்- வீராங்கனைகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக டிடிவி தினகரன் அங்கு சென்றார். இவரை ஓபிஎஸ் ஆதரவாளர் சையது கான் வரவேற்றார். ஓ பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான இவர்தான் முன்பு சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தேனியில் தீர்மானம் நிறைவேற்ற முக்கிய காரணமாக இருந்தார்.

சையது கான்

சையது கான்

இந்த நிலையில்தான் சையது கான் டிடிவி தினகரனை சந்தித்து வரவேற்றார். அதோடு தினகரனிடம் நலம் விசாரித்து, அவரிடம் நட்பாக பேசினார். கூட்டத்திற்கு முன்பாக இவர்கள் இருவரும் சில நிமிடம் அதிமுக அரசியல் சூழ்நிலைகள் பற்றி பேசினார்கள். இந்த திடீர் சந்திப்பால் டிடிவி தினகரன் - ஓ பன்னீர்செல்வம் தரப்பு கைகோர்க்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே சசிகலா - டிடிவி தினகரன் - ஓ பன்னீர்செல்வம் மூவரும் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்தன.

ஆனால் சசிகலா

ஆனால் சசிகலா

இந்த நிலையில்தான் இவர்கள் இருவரின் சந்திப்பு அதிக கவனம் பெறுகிறது. இவர்கள் இருவரும் சந்தித்த நிலையிலும் கூட சசிகலா இன்னும் அமைதியாகவே இருக்கிறார். அவர் சமீபத்தில் ஓ பி ரவீந்திரநாத்திற்கு ஆதரவாக பேசினார். ஓ பன்னீர்செல்வத்தின் மகன் எம்பி ஓ பி ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக கருத கூடாது என்று எடப்பாடி பழனிசாமி லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் எழுதினார். இந்த நிலையில் ஓபிஆர் நீக்கத்திற்கு சசிகலா நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தார். கட்சியின் ஒரே ஒரு லோக்சபா எம்பியை கட்சியில் இருந்து நீக்கியது தவறு. சுயலாபத்திற்காக இப்படி செய்கிறார்கள் சசிகலா கண்டனம் தெரிவித்தார்.

அமைதி ஏன்?

அமைதி ஏன்?

ஆனால் அதன்பின் சசிகலா பெரிதாக எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் டிடிவி தினகரன் - சையது கான் சந்திப்பு நடைபெற்று உள்ளது. இது டிடிவி - சசி - ஓபிஎஸ் என்ற புதிய அணி உருவாகும் வாய்ப்பை உருவாக்குமா என்று கேள்வியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் சசிகலா அதிமுகவிற்கு வெளியே தனியாக அணி சேர்ப்பதை விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. அமமுகவை எப்படி சசிகாள் விரும்பவில்லையா அப்படித்தான் அதிமுகவிற்கு தனியாக இயங்குவதை சசிகலா விரும்பவில்லையாம்.

தி நகர் வீடு

தி நகர் வீடு

அப்படி செய்தால் அது அதிமுக தொண்டர்கள் இடையே எதிர்ப்பை சம்பாதிக்க காரணமாக அமைந்துவிடும். அதிமுகவைத்தான் கைப்பற்ற வேண்டும். வெளியே புதிய அணி திரட்ட கூடாது என்று சசிகலா நினைக்கிறாராம். இதனால்தான் ஓபிஎஸ் நெருங்கி வந்தும் கூட சசிகலா எதுவும் பேசாமல் சைலண்ட்டாக இருக்கிறார் என்கிறார்கள். தற்போது சசிகலாவிடம் இதற்காக டிடிவி - ஓபிஎஸ் தரப்பு தூதுவிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அவரின் தி நகர் வீட்டில் இதற்கான ஆலோசனைகளுக்கும் நடந்து வருகின்றதாம்.

கவனித்து வருகிறார்

கவனித்து வருகிறார்

அதாவது அதிமுகவிற்கு வெளியே ஒரு அணியாக நாம் செயல்படுவோம். கட்சியை மீட்க அதுதான் ஒரே வழி. நம் சமுதாய வாக்குகளை ஒன்று இணைத்தால்,. அதிமுக தானாக நம் கைக்கு வந்துவிடும் என்று சசிகலாவிடம் தூது போகும் ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் பேசி வருகிறார்களாம். ஆனால் சசிகலாவோ சட்ட ரீதியாக போராடலாம், பொதுச்செயலாளர் வழக்கு மேல்முறையீடு செய்து உள்ளேன், ஓபிஎஸ் வழக்கும் விசாரணைக்கு வர போகிறது அதில் முடிவு வரட்டும் என்று நினைப்பதாக கூறப்படுகிறது.

Recommended Video

    தேனியில் டிடிவி தினகரன் செய்வீர்கள் கூட்டத்தில் பேச்சு - வீடியோ
     முக்கிய புள்ளி

    முக்கிய புள்ளி

    அதிலும் முக்கியமான அரசியல் புள்ளி ஒருவர் சசிகலாவிடம் இது சார்பாக பேசியதாக கூறப்படுகிறது. 3 பேரும் இணைந்து செயல்படுங்கள். நீங்கள் இணைந்தால் எட்டப்படியால் ஒன்னும் செய்ய முடியாது என்று ஓபிஎஸ் தரப்பில் இருந்து முக்கியமான நிர்வாகி ஒருவர் சசிகலாவிடம் போனில் பேசி இருக்கிறாராம். ஆனால் சசிகலாவோ இணைவதில் பிரச்சனை இல்லை. இருந்தாலும் சில நாட்கள் பொறுத்து இருக்கலாம். வழக்கில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்று "வெயிட்டிங் மோடில்" இருக்க சொல்லி உள்ளாராம்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+