திமுகவில் ஓபிஎஸ்? அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல்!
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் திமுகவில் இணைய உள்ளாரா? அல்லது வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளாரா என்ற கேள்வி அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
முதலமைச்சர் மு.க ஸ்டாலினை முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் தமிழக சட்டசபையில் நேரில் சந்தித்துப் பேசினார். ஸ்டாலின் - ஓபிஎஸ் சந்திப்பை அடுத்து ஓபிஎஸ் திமுகவில் இணையப்போகிறாரா? என்ற கேள்வி எழுந்தது.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக அவரை விட்டு விலகியதால் ஓபிஎஸ் முக்கிய முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிகார யுத்தம் நடத்திய நிலையில், சட்ட ரீதியாகவும், கட்சியிலும் அவர் பின்னடைவைச் சந்தித்தார். எனினும், பாஜகவை முழுமையாக நம்பி இருந்தார். எப்படியும் அதிமுகவில் இணைந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் பாஜக, எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்து, ஓபிஎஸ்ஸை கைவிட்டது.
சட்டசபை தேர்தல் தேதி நெருங்க நெருங்க, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் திமுகவுக்கு சென்றனர். கு.ப.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் தவெகவுக்கு சென்றனர். தர்மர் எம்.பி எடப்பாடி பழனிசாமியுடனே சென்று சேர்ந்துவிட்டார். பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வத்தின் அத்தியாயம் முடிந்துவிட்டது எனக் கூறி புதுக்கட்சி தொடங்கிவிட்டார்.
இந்நிலையில் தான் வேறு வழியின்றி, ஓ.பன்னீர்செல்வம் திமுகவுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதனை உறுதி செய்யும் வகையில் அண்மையில், முதலமைசர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை தனது மகன் ரவீந்திரநாத் உடன் சென்று சந்தித்துப் பேசினார் ஓபிஎஸ். ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ அய்யப்பன், சட்டசபையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பேசினார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயம் செல்ல உள்ளதாக தகவல்கள் பரபரத்து வருகின்றன. ஓபிஎஸ் திமுகவில் இணைய உள்ளாரா? அல்லது வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளாரா என்ற கேள்வி அரசியல் களத்தில் தீவிரமாக எழுந்துள்ளது.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications