"ஐயா.. விட்ராதீங்கய்யா".. ஓபிஎஸ்ஸை பார்த்ததுமே ஒரே ஆவேசம்.. விழித்த சீனியர்கள்.. என்னாச்சு?
ஓபிஎஸ்ஸூக்கு ஆதரவாக சென்னையில் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
சென்னை: ஓபிஎஸ் தரப்பில் இன்றைய தினம் 2 பரபரப்பு சம்பவங்கள் நடந்துள்ளதுடன், அதிமுகவில் சலசலப்பை மேலும் கூட்டி வருகிறது.
வருகிற ஜுன் 23 -ம் தேதி அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடக்க போகிறது..
இதையொட்டி நடந்த ஒற்றை கட்சி விவகாரம் குறித்து தொண்டர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.. மற்றொருபக்கம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவரும் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கைகலப்பு
இப்படிப்பட்ட சூழலில், இரு தரப்பின் ஆதரவாளர்களும் இன்றைய தினம் மோதிக் கொண்டனர்.. கைகலப்பில் இறங்கிவிட்டனர்.. அப்போது, ஏற்பட்ட மோதலில் ரத்த காயமும் ஏற்பட்டுள்ளது.. பெரம்பூர் முன்னாள் செயலாளர் மாரிமுத்து என்பவரை அடித்துதாக்கி உள்ளதாக தெரிகிறது.. இவர் எடப்பாடியின் ஆதரவாளர் ஆவார்.. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும்வழியில், மாரிமுத்து பேட்டி தந்தார்.

ரத்தகாயம்
அவர் சொல்லும்போது, "முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் வந்தேன்... அவரை மேலே விட்டு விட்டு கீழே வந்தபோது, எடப்பாடி ஆதரவாளரா? என்று என்னை கேட்டு தாக்கினார்கள்... அலுவலகத்துக்குள்ளே ரவுடிகள் தான் இருக்கிறார்கள்.. தொண்டர்கள் இல்லை" என்று வேதனையுடன் தெரிவித்தார்.. இதனிடையே, ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ஆதரவு மாவட்ட செயலார்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.. அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் சென்னைக்கு வர வேண்டும் என்று ஏற்கனவே ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருந்தார்.

ஸ்டார் ஹோட்டல்
அதன்படி, சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.. ஓபிஎஸ் இப்படி ஆலோசனை நடத்துகிறார் என்று தெரிந்ததுமே, ஏராளமான தொண்டர்கள் அங்கே வாயிலில் கூடிவிட்டனர்.. இதுகுறித்த வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி உள்ளது.. கூடியிருந்த தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என்று தெரிகிறது.. கூட்டம் முடித்துவிட்டு, மூத்த தலைவர்கள் ஒவ்வொருவராக அங்கே வெளியேறி வந்தனர்.. மைத்ரேன், வைத்திலிங்கம் என ஒவ்வொருவராக வரும்போதும், தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர்..

ஐயா.. விட்ராதீங்கய்யா
இவர்களுக்கு பின்னால் ஓபிஎஸ் வந்தார்.. ஓபிஎஸ்ஸை பார்த்ததுமே ஒரு இளைஞர், "ஐயா, விட்ராதீங்கய்யா? என்று ஆவேசமாக கூறினார்.. அந்த தொண்டரை ஓபிஎஸ் அமைதிப்படுத்தினார்.. முழக்கமிட்ட அனைவரையும், பொறுமை காக்கும்படி ஓபிஎஸ் சமாதானப்படுத்தினார்.. இதனால் அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது.. இதனிடையே, இன்னொரு பரபரப்பு ராமநாதபுரம் அருகே நடந்துள்ளது.. அங்கே ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

நிசப்தம்
இதுநாள் வரை, ஓபிஎஸ், எடப்பாடி தரப்பில் மட்டுமே போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்த நிலையில், இந்த போஸ்டரில் ஜெயலலிதா, சசிகலா, ஓபிஎஸ் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.. ஒற்றை தலைமைக்கு ஆதரவாக இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதுடன், சசிகலாவுடன் சேர்த்து முதல்முறையாக போஸ்டர்கள் வெளியாகி உள்ளது பரபரப்பை கிளப்பி வட்டு வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications