மீன் ஆகுது கருவாடு? ஓபிஎஸ்ஸின் இனிப்பு தகவல்.. ஆமா, இது பாஜகவுக்கு தெரியுமா? ஷாக் எடப்பாடி பழனிசாமி
சென்னை : தன்னுடைய எதிர்கால அரசியல் சூனியமாகிவிடக்கூடுமோ? என்ற கலக்கம் ஓபிஎஸ் தரப்புக்கு எழுந்துள்ள நிலையில், மிக முக்கிய முடிவு ஒன்றை தற்போது எடுக்க நினைப்பதாக தெரிகிறது.
2 மாதங்களுக்கு முன்பு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தனிக்கட்சி துவங்க போவதாக தகவல்கள் பரபரத்தன.. ஆனால், இதற்கு பாஜக மேலிடம் முட்டுக்கட்டை போட்டுவிட்டதாம்.

தனிக்கட்சி: அதாவது, "இப்போதைக்கு தனிக்கட்சி வேண்டாம், டிசம்பர் மாதம் வரை பொறுத்திருங்கள். தேவைப்பட்டால், தாமரை சின்னத்தில் போட்டியிடலாம்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தரப்பிலிருந்தே பேச்சு நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.. ஆனாலும், ஓபிஎஸ் தரப்பு இதற்கு ஓகே சொல்லவில்லையாம்.
"இனியும் பாஜகவை நம்பி அரசியல் பண்ணி கொண்டிருப்பது வேஸ்ட்.. நம்பி நம்பி மோசம் போகியிருக்கிறோம்... சட்டரீதியாக அதிமுகவுக்கு உரிமை கோரும் அனைத்து வழிகளும் நமக்கு அடைக்கப்பட்டதற்கு காரணமே பாஜகதான்.
எப்படியும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே, டெல்லி நடந்து கொள்ளும்.. தேர்தல் வரை நாம் எந்த முடிவையும் எடுக்க விடாமல் தடுத்துக் கொண்டே வந்து, கடைசி நேரத்தில் நம்மை கழட்டிவிட்டுவிட்டு, எடப்பாடியிடம் கைக்கோர்ப்பார்கள்.. அதனால், பாஜகவை நம்பி வீணாக வேண்டாம் என்று ஓபிஎஸ்ஸுக்கு, சில சீனியர்கள் சொன்னார்களாம்.
ஈரோடு தேர்தல் : ஏற்கனவே, ஈரோடு இடைத்தேர்தலின்போதும், கடைசிவரை பாஜகவுக்காக காத்து கிடந்து, வேட்பாளரையே வாபஸ் பெற வைத்ததை பார்த்து, கொங்குவின் ஓபிஎஸ் ஆதரவாளர்களே கடுப்பாகிவிட்டார்கள்.. அப்படியே சூட்டோடு சூடாக கிளம்பி, எடப்பாடியை சந்தித்து அதிமுகவிலும் இணைந்துவிட்டார்கள். அந்தவகையில், கடைசிவரை பாஜகவுக்காகவே ஓபிஎஸ் வளைந்து கொடுத்து கொண்டிருக்கிறாரே என்ற ஆதங்கம் இப்போதுவரை இருக்கத்தான் செய்கிறது.
இப்போது விஷயம் என்னவென்றால், ஓபிஎஸ் புது கட்சி துவங்க போகிறாராம்.. வரும் தை மாதம் இந்த கட்சியை துவங்க போவதாக தகவல்கள் வட்டமடிக்கின்றன.
பொதுக்குழு: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிராக ஓபிஎஸ் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு, ஜனவரி 11-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டல் மற்ற வழக்குகளில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு கிடைத்துள்ள நிலையில், இந்த வழக்கிலும் தங்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என்று நம்புகிறார்கள்..
அப்படி ஒருவேளை, தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமானால், அது மீண்டும் ஓபிஎஸ்ஸூக்கு கடும் பின்னடைவாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. அதுபோன்று ஒரு தீர்ப்பு வெளியானால் தன்னுடைய அரசியல் எதிர்காலம் பற்றி புத்தாண்டில் முக்கிய முடிவுகளை எடுக்க திட்டமிட்டுள்ளாராம் ஓபிஎஸ்..
ஆதரவாளர்கள்: இதற்காக புது வருடத்தில், தன்னுடைய ஆதரவாளர்களை திரட்டி கூட்டம் நடத்த போகிறாராம். மாவட்ட வாரியாக நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு, புதிய கட்சிதொடங்குவது தொடர்பாக முக்கிய முடிவுகளை அறிவிக்க போவதாகவும் சொல்கிறார்கள். ஆனால், இதெல்லாம் எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. ஓபிஎஸ் தனிக்கட்சி துவங்க, பாஜக அனுமதிக்குமா? என்றும் தெரியவில்லை.
காரணம், தென்மண்டலங்களில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு இருக்கிறது என்பதைவிட, தினகரனுக்கு இருக்கும் ஓட்டு வங்கியை மிஸ் செய்துவிட கூடாது என்பதில் பாஜக மேலிடம் உறுதியாக இருக்கிறதாம். கடந்த முறை தினகரன் பிரித்த ஓட்டுக்கள், பெரும்பாலும், அதிமுக + திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் என்பதை மறுத்துவிட முடியாது. 160 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக, 10,85,985 வாக்குகளை பெற்றிருந்தது.. திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை பிரித்ததே தினகரன்தான்..
முக்குலத்தோர்: அந்தவகையில் முக்குலத்தோர் ஆதரவு வாக்குகளை அவ்வளவு லேசில் இழந்துவிட பாஜக விரும்பவில்லை.. அதுவும் இந்த முறை, தென் தமிழகத்தில் போட்டியிட முனைப்பு காட்டி வரும்சூழலில், அமமுகவின் ஓட்டுக்களை முழுமையாக ஒதுக்கி தள்ளவும் முடியாது.
ஒருவேளை, ஓபிஎஸ் தனியாக கட்சி துவங்கி, தினகரனுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால், தென்மண்டலங்களில் கிட்டத்தட்ட 15 தொகுதிகளில், அதிமுக சறுக்கலை சந்திக்கும் என்றும், அந்த 15 இடங்களிலும் திமுகவுக்கு களம் சாதகமாகிவிடும் என்றும் பாஜக கணக்கு போடுகிறது. அதுமட்டுமல்ல, பிளவுபட்ட அதிமுகவே ஒன்றிணைந்தாலும்கூட, அதிமுகவின் பழைய வாக்கு வங்கி வருமா? என்பதும் சந்தேகம் தானாம். அதனால், ஓபிஎஸ் விஷயத்தில் எந்த முடிவையும் பாஜக உடனே எடுக்காது என்கிறார்கள்.
பண்ருட்டியார்: மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை பொறுத்தவரை, பாஜகவின் காலில் விழுவதை அவர் ஏற்கவில்லை என்றே தெரிகிறது. பாஜகவின் காலில் விழுந்து கிடப்பதைவிட, மக்களின் ஆதரவை நேரடியாகவே பெறலாம் என்பதுதான், பண்ருட்டியாரின் நம்பிக்கையாகும்.. அதனாதான், கடந்த 6 மாதங்களில், பல போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும், மாநாடுகளையும் ஓபிஎஸ் முன்னெடுத்து வருகிறார் என்றால், இதற்குபின்னால், பண்ருட்டியாரின் பங்கு இருப்பதை மறுக்க முடியாது.
புரட்சி பயணத்தை ஓபிஎஸ் கடந்த மாதம் துவங்கியபோது, "நாங்கள் தனித்து நிற்போம், திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றிபெறும்" என்று குண்டை தூக்கி போட்டிருந்தார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
அப்படியிருக்கும்போது, ஓபிஎஸ் தனிக்கட்சி ஆரம்பித்தால், அதற்கு பாஜக முழுமையாக ஆதரவு தருமா? ஒத்துழைப்பு தருமா? முட்டுக்கட்டை போடுமா? திமுகவின் B டீம் என்று ஓபிஎஸ்ஸை, அதிமுக தொடர்ந்து விமர்சித்துவரும் நிலையில், ஓபிஎஸ்ஸின் அரசியல் இனி எப்படி நகர போகிறது என்றெல்லாம் தெரியவில்லை..
ஆனால், தன்னை ஒரு அரசியல்தலைவராக நிலைநிறுத்தி கொள்ள வேண்டிய நெருக்கடியும், கட்டாயமும், நிர்ப்பந்தமும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்று ஏற்பட்டுள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications