மெஜாரிட்டி கிடைக்கலைன்னா.. திமுக உதவியை கூட மோடி நாட ரெடி? தூது போகும் அந்த புள்ளி.. வேலைக்கு ஆகாது
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் பாஜகவின் பிளான் பி எப்படி இருக்கும் என்ற விவாதம் எழுந்துள்ளது. இதற்காக தேர்தல் ஆலோசகர் ஒருவரின் உதவியை நாடகூட பாஜக தயாராக உள்ளதாம்.
பாரதிய ஜனதா கட்சி 2024 லோக்சபா தேர்தலில் 370 இடங்களை வெல்வதை லட்சிய இலக்காக நிர்ணயித்துள்ளது. 2019 ஐ விட 67 இடங்கள் அதிகம் வெல்வோம் என்று பாஜக தலைவர்கள் மேடைக்கு மேடை அறிவித்து வருகின்றனர். ஆனால் பாஜகவால் இந்த இலக்கை அடைய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜக தனியாக 370 இடங்களை வெல்வதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) 400 இடங்கள் கடக்க வாய்ப்பாக அமையும் என்பதால் பாஜக இந்த மாபெரும் இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. . மக்களவையில் 543 இடங்கள் உள்ளன, பாஜக 2014 மற்றும் 2019 இல் முறையே 282 மற்றும் 303 இடங்களை வென்றது.
பாஜக இலக்கு: 370 என்ற இலக்கை.. ஜம்மு காஷ்மீரின் 370 நீக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவினர் இணைத்து பேசி வருகின்றனர்.ஆனால் கடந்த முறை வென்றதில் இருந்து கூடுதலாக 67 இடங்களை சேர்ப்பது என்பது பாஜகவிற்கு மிகவும் கடினமான பணியாக இருக்கலாம்.
பாஜகவிற்கு இலக்கு கஷ்டம்: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று சில அரசியல் ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டாலும், 370 இடங்கள் என்பது அக்கட்சிக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். 2019ல் பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் எல்லாம் அதே மாதிரி வெற்றியை மீண்டும் பாஜக பதிவு செய்ய வேண்டும்.
கடந்த முறை குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற இடங்களிலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அதோடு இல்லாமல் புதிதாக 67 இடங்களை வெல்ல வேண்டும். கடந்த முறை வென்ற இடங்களில் சில தொகுதிகளை இழக்கும் பட்சத்தில் கூடுதலாக புதிய இடங்களில் வெல்ல வேண்டும்.
சிக்கல் மேல் சிக்கல்: அதே சமயம் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லை என்று இன்னும் சில கருத்து கணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர் . இன்னும் சிலர் என்டிஏ கூட்டணிக்கே கூட மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
தற்போது லோக்சபா தேர்தலில் பாஜக 443 மக்களவைத் தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 100 இடங்களிலும் போட்டியிடுகிறது. இதுவரை வெளியான கருத்து கணிப்புகளில் பாஜகவிற்கே பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறப்பட்டாலும் 3 கட்ட தேர்தலுக்கு பின் பாஜக பெரிய அளவில் சறுக்கலை சந்தித்து உள்ளதாகவே கணிப்புகள் கூறுகின்றன.
பாஜக பிளான் பி: 2024 லோக்சபா தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் பாஜகவின் பிளான் பி எப்படி இருக்கும் என்ற விவாதம் எழுந்துள்ளது. இதற்காக தேர்தல் ஆலோசகர் ஒருவரின் உதவியை நாடகூட பாஜக தயாராக உள்ளதாம். பிரஷாந்த் கிஷோர் மூலம் திமுகவை நாட கூட பாஜக ரெடியாக உள்ளதாம்.
அதன்படி பாஜக கூட்டணியில் இல்லாத பிஜு ஜனதா தளம், அதிமுக போன்ற கட்சிகளின் உதவிகளை ஆட்சி அமைக்க பாஜக நாடும் வாய்ப்புகள் உள்ளன. அதிமுகவிற்கு தமிழ்நாட்டில் பெரிய அளவில் எம்பிக்கள் இல்லையென்றால் சமயத்தில் திமுகவின் உதவியை கூட பாஜக நாடலாம். உதாரணமாக சமீபத்தில் காங்கிரஸ் நிர்வாகி சாம் பிட்ராடோ தென்னிந்தியர்களை ஆப்ரிக்கர்களுடன் ஒப்பிட்ட நிலையில் பிரதமர் மோடி திமுக - காங்கிரஸ் கூட்டணியை முறிக்குமா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதுவும் கூட காங்கிரஸ் - திமுக கூட்டணியை உடைக்க மோடி விடுத்த அழைப்பாக இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் காங்கிரஸ் - திமுக கூட்டணி எல்லாம் உடைய வாய்ப்பே இல்லை. கண்டிப்பாக தேர்தலுக்கு பின்பாக இவர்களுக்கு இடையே கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்றுதான் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனால் திமுக தவிர்த்து மற்ற கட்சிகளின் உதவியை பாஜக ஆட்சி அமைக்க நாடலாம் என்றே கூறப்படுகிறது. திரிணாமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் உதவிகளை கூட பாஜக நாடும் வாய்ப்புகள் உள்ளதாகவே பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications