சல்லி சல்லியா நொறுக்கிய "கரு.நாகராஜன்".. மொத்த கட்சியையும் பதற வைத்த "கமலாலயம்".. இது லிஸ்ட்லயே இல்ல
திமுகவுடன் பாமக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
சென்னை: பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக - திமுக குறித்து முக்கிய கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்ததும், அதற்கு பாஜக எதிர்வினையாற்றி உள்ளதும், அரசியல் களத்தில் கவனத்தை பெற்று வருகிறது.
பாஜக கூட்டணியில் சேர்ந்த ஆரம்ப காலத்தில் இருந்தே பாமக ஒட்டியும் ஒட்டாமலும் இருந்து வருகிறது.. ஒருமுறை நடந்த எம்பி தேர்தல் பிரசாரத்தின்போது ராமதாஸ், பாஜகவுக்கு ஆதரவாக ஒரு மேடையில் கூட பிரசாரம் செய்யவே இல்லை..
இந்த விவகாரம் அப்போதே மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.. எனினும், பாஜக இதை பெரிதுபடுத்தவில்லை..

அன்புமணி தோல்வி
இதையடுத்து, தேசம் முழுவதும் வீசிய மோடி அலை தமிழகத்தில் வீசாமல் போனதாலும், சொந்த தர்மபுரி தொகுதியிலேயே அன்புமணி வெற்றி பெற்றதாலும் கூட்டணியில் பெருத்த விரிசல் அன்று உண்டானது. காரணம், பாஜகவுடன் கூட்டணி வைக்க டாக்டர் ராமதாசுக்கு அந்த சமயத்தில் விருப்பமில்லை என்றும், அன்புமணியின் வற்புறுத்தல் காரணமாகவே வேறு வழியின்றி கூட்டணியில் இணைந்ததாகவும் செய்திகளில் சலசலக்கப்பட்டது.. அதற்கேற்றபடி, தேர்தல்களின்போதும், தேர்தல் வெற்றிக்கு பிறகும் பாஜக தலைவர்களை சந்திப்பதை ராமதாஸ் தவிர்த்தே வந்தார்..

பாஜக - பாமக
இதற்கு நடுவில் அன்புமணிக்கு எம்பி சீட் பெறும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.. இதற்காக நேரிலேயே டெல்லிக்கு சென்று முகாமிடும் சூழலும் அன்புமணிக்கு ஏற்பட்டது... எனினும் கடந்த சில வருடங்களாகவே, பாஜகவுடன் நெருக்கம் இல்லாமலும், மோதல் போக்கு இல்லாமலும் பாமக கடைப்பிடித்து வருகிறது.. அதேசமயம், தமிழக நலனை பாதிக்கக்கூடிய இந்தி மொழி திணிப்பு உட்பட விஷயங்கள் எது நடந்தாலும், அதை கண்டித்து ராமதாசும் குரல் கொடுக்க தவறியதே இல்லை.

தலைவர் அன்புமணி
இந்நிலையில், எம்பி தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதற்கு பாமக தன்னை தயார் படுத்தி வருகிறது.. வடமாவட்டங்களில் கூட சொந்த செல்வாக்கை இழந்து வரும் நிலையில், கட்சியை பலப்படுத்தும் முயற்சியும் எடுக்கப்பட்டு, அதற்காகவே, அன்புமணி கட்சியின் தலைவராக நியமனம் ஆகியுள்ளார்.. டாக்டர் ஐயாவும் முதல்முறையாக நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக குறித்த தன் அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

ஆர்எஸ்எஸ்கள்
நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, " பாமகவை பொறுத்தவரை, களத்தில் பாஜகதான் எதிரி.. பாமகவில் இருந்தோ, வன்னியர் சங்கத்தில் இருந்தோ, வேறு கட்சிகளுக்கு சென்றால்கூட, ஒருநாள் அவர்கள் பாமகவை நோக்கி வருவார்கள் என்று நம்பலாம்.. ஆனால், ஆர்எஸ்எஸ் - பாஜக என்பது ஒருவழிப்பாதை.. அங்கு சென்றால் இளைஞர்கள் மறுபடியும் திரும்ப மாட்டார்கள்.. வன்னியர் சங்கமும், பாமகவும் உள்ள கிராமங்களில் இளைஞர்கள் ஆர்எஸ்எஸ் மற்றும், பாஜகவில் சேருவதை தடுக்க, நிர்வாகிகள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒன்வே பாதை
அதேபோல தலைவரான பிறகு, அன்புமணி, முதல்முறையாக பாஜகவை வெளிப்படையாகவே விமர்சித்தார்.. செய்தியாளர்களிடம் பேசியபோது, "தமிழக அரசு இதுவரை என்ன செய்து கொண்டு இருக்கின்றது.. தமிழகத்தில் திமுகவிற்கு இணையான கட்சி பாஜக என்று சில மீடியாக்கள் சொல்லி வருகின்றன... ஆனால் உண்மையில் தமிழகத்தில் திமுக மட்டுமே பெரிய கட்சி... பாஜக என்பது சிறிய கட்சி... அதாவது, பாஜக வளர்ந்துவரும் கட்சி.. ஆனால் தேசிய அளவில் மிகப்பெரிய கட்சி.. தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய அளவில் இன்னும் வளர்ச்சி அடையவில்லை.. இருக்கிற கட்சிகளிலேயே பாஜக சிறிய கட்சி" என்றார்..

கரு.நாகராஜன்
அன்புமணியின் இந்த கருத்துக்கு பாஜகவின் மாநில பொதுச் செயலாளர்களில் ஒருவரான கரு. நாகராஜன் ஊடகம் ஒன்றுக்கு பதிலடி தந்துள்ளார்.. "உங்கள் கூட்டணியில்தானே பாமகவும் இருக்கிறது.. ஆனால், அன்புமணி, பாஜக தமிழ்நாட்டில் சிறிய கட்சி என கூறியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கரு.நாகராஜன், அன்புமணி ராமதாஸ் சொல்வதெல்லாம் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.. தமிழ்நாட்டில் சிறிய கட்சி பெரிய கட்சி என்ற பிம்பத்தை எல்லாம் உள்ளாட்சி தேர்தலில் 3-ம் இடத்திற்கு வந்த பாஜக நொறுக்கி தள்ளிட்டது. அவ்வளவு ஏன்? சில இடங்களில் அதிமுகவையை பாஜக பின்னுக்குத்தள்ளி 2வது இடத்திற்கு வந்தது.

நாம் தமிழர் - சீமான்
தமிழ்நாட்டில் காங்கிரஸ் vs கம்யூனிஸ்ட், காங்கிரஸ் vs திமுக, திமுக vs அதிமுக என்று அரசியல் களம் அடுத்தடுத்து மாறி கொண்டே உள்ளது.. அந்த மாற்றம் விரைவில் திமுக Vs பாஜக என்ற நிலைக்கு வரும், பாஜகவுக்கு அடுத்துதான் பாமக உள்ளது.. நாம்தமிழர் உள்ளது.. மற்ற எல்லாமே அடுத்தடுத்து வரும்.. தேர்தலில் அந்த எழுச்சியை எல்லாரும் பார்க்கத்தானே போறீங்க" என்று பதிலளித்தார் கரு நாகராஜன்.

நாகராஜன்
டாக்டர் ராமதாஸ், தன்னுடைய நிர்வாகிகளிடம் பாஜக பற்றி அப்படி சொல்லியிருக்கிறாரே என்ற கேள்வி கடந்த வாரம் கரு.நாகராஜனிடம் எழுப்பப்பட்டிருந்தது.. அதற்கு அவர், "தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதாக சொல்லும் பாமக நிறுவனரும் அப்படி பேசியது வேதனையாக இருக்கு.. இருந்தாலும், இதெல்லாம் எங்களுக்கு பிளஸ்தான்.. பாஜக வளர்ந்து கொண்டிருக்கிற" என்று கூறியிருந்த நிலையில், இன்று அன்புமணிக்கு பதிலடியை இவ்வாறு தந்துள்ளார்.

சீமான் ஷாக்
கூட்டணியில், பாமக தனக்கு அடுத்துள்ள கட்சி என்று சொல்லிய நிலையில், அதிமுகவே, பாஜகவுக்கு பின்னாடிதான் என்று சொல்லி ஷாக் தந்துள்ளார் கரு.நாகராஜன்.. இது பாமகவுக்கும் ஷாக்.. அதிமுகவுக்கும் ஷாக்.. எல்லாவற்றுக்கும் மேலாக, "நாங்கள்தான் திமுகவுக்கு பாஜகவுக்கு மாற்று" என்று சொல்லி கொண்டிருக்கும் சீமானுக்கும் ஷாக்..!












Click it and Unblock the Notifications