"குறியீடு".. இதுக்கு வாய்ப்பிருக்கா.. திமுக + தேமுதிக + பாமக + நாம்தமிழர்?.. திடீரென கிளம்பிய "டாக்"
சீமான் திமுகவுடன் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியே வித்தியாசமாக இருக்க போவதாகவும், அந்த கூட்டணி, கண்டிப்பாக அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தரும் என்றும் ஒரு டாக் ஓடிக் கொண்டிருக்கிறது.
Recommended Video
நடந்து முடிந்த தேர்தலை பொறுத்தவரை திமுக, அபார வெற்றியை பெறவில்லை.. அதேபோல அதிமுக மோசமான தோல்வியையும் பெறவில்லை..
இனி, உள்ளாட்சி தேர்தல், எம்பி தேர்தல்கள் அடுத்தடுத்து நடைபெற உள்ள நிலையில், இந்த 2 கட்சிகளும் தங்கள் பலத்தை எப்படி பெருக்கி கொள்ள போகின்றன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி
இதற்காக ஸ்டாலின் வைத்துள்ள முதல் குறியே எடப்பாடி பழனிசாமிதான்.. மறைந்த கருணாநிதியின் அரசியலை "ராஜதந்திரம்" என்பார்கள்.. ஆளுமையுடன், அனுபவமும், நுணுக்கங்களையும் கையாண்டதாலேயே ராஜதந்திரியாகவே இருந்தார் கருணாநிதி. இப்போது அதுபோலவே ஒரு மூவ் எடுத்து வருகிறார் முதல்வர்.

எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது கிட்டத்தட்ட கேபினட் பதவி போன்றது.. அதிகாரம் மிக்கது.. தற்போதை நிலையிலும், பலம் பொருந்திய எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தை தவிடுபொடியாக்கி, அதன்மூலம் அவரது செல்வாக்கையும் குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளாராம் ஸ்டாலின். இதற்காகவே ஓபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம் தந்துவிட்டு, எடப்பாடி பழனிசாமியை கண்டுகொள்ளாமல் இருப்பது என்ற வியூகத்தை நடத்தி வருகிறாராம்.

மாஜிக்கள்
அதாவது அதிமுக தலைமைகளுக்குள் மேலும் மோதல் போக்கு ஏற்பட்டால், அது திமுகவை மேலும் பலப்படுத்தும் என்று கணக்கு போடுகிறாராம். இன்னொரு பக்கம், ஊழல் புகாரில் சிக்கிய மாஜி அமைச்சர்கள் லிஸ்ட் ரெடியாகி கொண்டிருக்கிறது.. இதில் புகார்கள் நிரூபணமாகும் பட்சத்தில், அதிமுகவை மேலும் பலவீனப்படுத்தும் ஐடியாவும் திமுக மேலிடத்துக்கு உள்ளது...

கூட்டணி
இதற்கு அடுத்தபடியாக கூட்டணி விஷயத்திலும் முழு கவனத்தை ஸ்டாலின் செலுத்தக்கூடும் என்று தெரிகிறது.. நடந்து முடிந்த தேர்தலில் திமுகவுக்கு பெரிதும் பலம் தந்தது கூட்டணிகள்.. ஆனால் காங்கிரஸ் தவிர, அவ்வளவாக வாக்கு வங்கியை சில கட்சிகள் பெற்றிருக்கவில்லை.. இந்த முறை வாக்கு வங்கியை ஓரளவு பெற்றுள்ள கட்சிகளை தங்களுடன் இணைத்து கொண்டால் மாஸ் வெற்றியை எளிதாக பெற முடியும் என்று திமுக நம்புகிறது.

சீமான்
அதில் முதல் நபராக இருப்பவர் சீமான்தான்.. நடந்து முடிந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.7 சதவீத வாக்குகளுடன் சுமார் 30 லட்சம் ஓட்டுகளை பெற்றிருப்பது, திமுகவின் கவனத்தை ஈர்த்திருக்கிறது... 2016 தேர்தலில் 4 லட்சம் ஓட்டுகளை வாங்கிய இந்த கட்சிதான், 2019 எம்பி தேர்தலில் சுமார் 17 லட்சம் ஓட்டுகளை பெற்றது... இதுவே 2016-ல் ஒரு சதவீதமாக இருந்த ஓட்டு விகிதமானது 2019-ல் 4 சதவீதமாக அதிகரித்தது...

பஞ்சாயத்து தேர்தல்
இந்த முறை, 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 10 ஆயிரம் ஓட்டுகளுக்கும் அதிகமாக நாம் தமிழர் பெற்றிருப்பது, திமுக வட்டாரத்தை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. ஒருவேளை நாம் தமிழர் கட்சி, வரப்போகும் பஞ்சாயத்து தேர்தலில் கணிசமான ஓட்டுகளை பிரித்துவிட்டால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி தேர்தல்களில் ஓரளவு கவுரவமிக்க இடங்களை அக்கட்சி கைப்பற்றுவதற்கு வாய்ப்பு உருவாகிவிடும் என்றும் திமுக கணக்கு போடுகிறது.. அதனால், சீமானை தங்களுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ராமதாஸ்
அதேபோல, பாமவை பொறுத்தவரை, இன்றுவரை தமிழ்நாட்டில் தங்கள் செல்வாக்கை ஓரளவு தக்க வைத்து கொண்டே வருகிறது.. பதவியேற்ற மறுநாளே, ராமதாஸுக்கு போனை போட்ட ஸ்டாலின், "ஐயா, மதுக்கடைகள் மூடுவது உட்பட பல ஆலோசனைகளை இதுபோன்றே எங்களுக்கு கொடுங்க.. முடிஞ்சவரைக்கும் செயல்படுத்துறோம்.. உடம்பை பார்த்துக்குங்க" என்று பேசியதும் கவனிக்கத்தக்கது. அதற்கேற்றபடி ராமதாஸும், அன்புமணியும் தொடர்ச்சியாக ஸ்டாலினின் நிர்வாகத்தை பாராட்டியே வருகிறார்கள்.. போற போக்கை பார்த்தால், பாமக மறுடிபயும் திமுக பக்கம் சாயக்கூடும் என்ற பேச்சு எழுந்துள்ளது.

தேமுதிக
இதேதான் தேமுதிகவும்.. விஜயகாந்த்தை எப்போதுமே ஸ்டாலினுக்கு பிடிக்கும்.. அதுவும் இந்த முறை பதவியேற்றதில் இருந்தே 2, 3 முறை போன் போட்டு பேசியுள்ளார்.. உடல் நலம் குறித்து விசாரித்தும் உள்ளார்.. தேமுதிகவினர் திமுக பக்கம் தாவ உள்ளதை மா.செ.க்கள் மூலம் கேள்விப்பட்டு, விஜயகாந்த் மனம் நோகும்படி செய்யாதீங்க என்று உத்தரவு போட்டுள்ளார்.. இதெல்லாம் நிச்சயம் தேமுதிக தரப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது..

அச்சாரமா?
ஆக, ராமதாஸ், சீமான், விஜயகாந்த் போன்ற எதிர்க்கட்சி தலைவர்களிடம் ஸ்டாலின் பேசிவருவது வெறும் அரசியல் நாகரீகமா? அல்லது மரியாதைக்குரிய நட்பா? அல்லது கூட்டணிக்கான அச்சாரமா? தெரியவில்லை.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications