தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின்! ரூ 1000+ ரூ 6000= ரூ 7000! பரபரப்பு அறிவிப்பு இன்று வெளியாகிறதா?
சென்னை: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 பொங்கல் பரிசு தொகைக்கான அறிவிப்பு இன்றைய தினம் வெளியாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனுடன் தென் மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரண நிதி ரூ 6000 வழங்குவதற்கான அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் பெய்த அதீத மழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் மக்களை தொடர்பு கொள்ளவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அது போல் மருத்துவமனைகளில் எல்லாம் வெள்ள நீர் சூழ்ந்து கொண்ட நிலையில் அங்கிருந்த நோயாளிகளை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் சேர்த்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னையில் மிக்ஜாம் புயலால் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து ரூ 6000 வெள்ள நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இதை போல் தென் மாவட்டங்களில் எப்போது அறிவிக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டை போல் ரூ 1000 ரொக்கம், கரும்பு, பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் தூத்துக்குடிக்கு ஆய்வு மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் செல்கிறார். அவர் இன்றைய தினம் தென் மாவட்ட மக்களுக்கான வெள்ள நிவாரணத்தையும் பொங்கல் பரிசு தொகுப்பையும் அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications