சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தனிமைப்படுத்திகிட்டா என்ன? அதான் டெக்னாலஜி இருக்கே.. டிச.31-இல் வீடியோ காலில் வருவாரா ரஜினி?

Google Oneindia Tamil News

சென்னை: அண்ணாத்த படப்பிடிப்புக் குழுவினர் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட ரஜினிகாந்த் வரும் 31ஆம் தேதி எவ்வாறு கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரஜினிகாந்த் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி தனது அரசியல் வருகை குறித்து ரசிகர்கள் முன்பு அறிவித்திருந்தார். அத்தோடு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்தார்.

Recommended Video

    சென்னை: ரஜினி கட்சி தொடங்குவரா…? கடைசி நேர சஸ்பென்ஸ்… வெளியான புதிய தகவல்..!

    இந்த நிலையில் ஜனவரியில் கட்சியை தொடங்கும் ரஜினி அதற்கான அறிவிப்பை வரும் டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.

    அண்ணாத்த

    அண்ணாத்த

    மேலும் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் அண்ணாத்த படத்தை முடித்துக் கொடுப்பது தனது கடமை என கூறிய ரஜினி, அதற்கு முன்பு படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்தார். இந்த நிலையில் அண்ணாத்த படக்குழுவில் சிலருக்கு கொரோனா உறுதியானது.

    திருமண மண்டபம்

    திருமண மண்டபம்

    எனினும் ரஜினிக்கு எந்தவித அறிகுறியும் இல்லை. இந்த நிலையில் கொரோனா தடுப்பு விதிகளுக்கேற்ப ரஜினி தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதாவது அவர் இந்த 14 நாட்களுக்கு அவர் மனைவி, மக்களை கூட பார்க்கக் கூடாது. இந்த நிலையில் பொதுவாக எல்லா அறிவிப்பையும் தனது கோடம்பாக்கம் திருமண மண்டபத்தில் அறிவிக்கும் ரஜினி, வரும் டிசம்பர் 31-ஆம் தேதி எப்படி கட்சியை அறிவிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    மக்களை சந்திக்க

    மக்களை சந்திக்க

    ஏற்கெனவே கொரோனா காலத்தில் தான் மக்களை சந்தித்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது என எல்லாருக்கும் இருக்கும் நியாயமான பயம் ரஜினிக்கு இருந்தது. இதை சாக்காக வைத்து ரஜினி கட்சி அறிவிப்பை இன்னும் ஓராண்டுக்கு தள்ளி வைக்கலாம் என சிலர் கருதுகிறார்கள்.

    இரு வாய்ப்புகள்

    இரு வாய்ப்புகள்

    தற்போது ரஜினிக்கு இரு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று வரும் டிசம்பர் 31-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் வீட்டிலிருந்த படியே அதாவது தனிமைப்படுத்திக் கொண்ட இடத்தில் இருந்து அவர் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடலாம். வீடியோ கால் மூலம் அனைத்தையும் அறிவிக்கலாம்.

    வீடியோ கால்

    வீடியோ கால்

    ஜனவரி மாதம் எந்த தேதியில் கட்சியை தொடங்க போகிறார்?, கட்சியின் பெயர், சின்னம் உள்ளிட்டவை குறித்து அறிவிக்க அவர் திட்டமிடுவதாக தெரிகிறது. அதை வீடியோ காலிலேயே அறிவிக்கலாம். இல்லாவிட்டால் அவர் ஜனவரி மாதமே ஒரேடியாக கட்சியை தொடங்கி அதற்கான அறிவிப்பையும் வெளியிடுவார்.

    தனித்து போட்டி

    தனித்து போட்டி

    ஜனவரி மாதம் கூட்டணி வைப்பாரா, தனித்து போட்டியிடுவாரா, தான் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் உள்ளிட்ட தகவல்களை வெளியிடலாம் என தெரிகிறது. எப்போதும் எதையும் யூகிக்க முடியாத நபர் ரஜினி, அவர் என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    Will Rajinikanth announce his party details through Video conference? Fans are expecting this.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X