சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சைலன்ட்"டாக சர்வே எடுத்து பார்த்த எடப்பாடியார்.. சாதகமாக எதுவும் இல்லையாமே.. "அந்த" ஓட்டாவது வருமா?

ரஜினி வருகையால் அதிமுக வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படுமா?

Google Oneindia Tamil News

சென்னை: சைலண்ட்டாக அதேசமயம் திடீரென ஒரு சர்வே எடுத்து பார்த்தாராம் முதல்வர் எடப்பாடியார்.. அதுகுறித்த செய்திதான் அரசியல் களத்தில் கசிந்து வருகிறது.

ரஜினியின் வருகையானது பல தரப்பினருக்கு கலக்கத்தை தந்து வருவதாக சொல்லப்பட்டு வருகிறது.. குறிப்பாக திமுகதான் முக்கிய டார்கெட் என்ற பிம்பம் சோஷியல் மீடியாவில் ஏற்பட்டுள்ளது.

ரஜினியின் அரசியலை மையப்படுத்தி நடத்தப்படும் விவாதங்களும் திமுகவின் வாக்கு சதவீதத்தையே முன்னிறுத்தியே பேசப்பட்டு வருகின்றன.

"இல்லீங்க.. ரஜினி பக்கா இந்து.. ஆனால் பாஜக இந்துத்வா.. கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை".. சொல்வது கராத்தே

வருகை

வருகை

ஆனால், இதில் சத்தமில்லாமல் கலக்கம் அடைந்துள்ளது அதிமுகவும்தான்.. ரஜினி வருகையை அதிமுகவும்தான் விரும்பவில்லை.. தன் அதிருப்தியை திமுக பகிரங்கமாக காட்டிக் கொண்டது, அதிமுக காட்டிக் கொள்ளவில்லை... அதேசமயம், ரஜினியின் வருகையில் அதிமுகவின் வாக்கு வங்கி பிரிக்கப்படுமா? ஓட்டுக்கள் சிதறடிக்கப்படுமோ என்ற பீதியும் எழவே செய்கிறது.

 கருத்து

கருத்து

ரஜினி கட்சி ஆரம்பிப்பது குறித்து முதல்வர் முதல் அமைச்சர் ஜெயக்குமார் வரை பட்டும் படாமல் கருத்துக்களை சொல்லினாலும், வெளிப்படையான கருத்து சொல்வதை முதல்வர் எடப்பாடியார் தவிர்த்தே வந்தார்.. அதேசமயம், முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளிடம் ரஜினியை பற்றி விவாதித்தபடியே இருக்கிறாராம்.

 ஆன்மீக அரசியல்

ஆன்மீக அரசியல்

அதில் பிரதானமாக எழுந்தது ஆன்மீக அரசியல் என்ற விவாதம்தான்.. ஆரம்பத்தில், ஆன்மீக அரசியல் என்று சொன்னபோது, இது திமுகவுக்கு எதிரான ஒரு வாசகமாகவே பார்க்கப்பட்டது.. பிறகுதான், ஒட்டுமொத்த திராவிட கட்சிகளுக்கும் அதாவது திராவிட அரசியலுக்கு எதிரானது ஆன்மீக அரசியல் என்ற அர்த்தம் புரிந்துள்ளது.. இதை லேட்டாகத்தான் அதிமுக தரப்பும் உணர்ந்ததாம்.. அதனாலேயே முதல்வரின் ஆலோசனையில் இந்த பேச்சு பலமாக அடிபட்டதாம்.

 ஓபிஎஸ்

ஓபிஎஸ்

அதுமட்டுமல்ல, எம்ஜிஆருக்கு துணை நின்றவர்கள் ரஜினிக்கு பின்னால் வருவார்கள் என்று அன்று தமிழருவிமணியன் சொன்னதும் அதிமுக தலையை சற்று யோசிக்க வைத்துள்ளது.. ஒருபக்கம் ஓபிஎஸ், ரஜினி சம்பந்தமாக எதையாவது பேசி கிலியை தந்து கொண்டிருக்கும் நிலையில், உண்மையிலேயே அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் யாராவது ரஜினி பக்கம் செல்ல வாய்ப்பிருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

 சிறுபான்மை ஓட்டுக்கள்

சிறுபான்மை ஓட்டுக்கள்

அதனால்தான், ரஜினி வருகையானது அதிமுகவை பாதிக்குமா? இப்போதைய நிலையில் ரஜினி எத்தனை சதவிகித வாக்குகள் வாங்குவார்? என்ற சர்வே ஒன்றை சைலன்ட்டாக எடுத்தாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.. அதில், இப்போதைக்கு ரஜினிக்கு 3% ஆதரவுதான் இருக்கிறது என்று ரிப்போர்ட் வந்தாலும், அதிமுகவுக்கு சாதகமான விஷயம் அவ்வளவாக இல்லை என்று முடிவு வந்துள்ளதாம். இதனால் எடப்பாடியார் தரப்பு அதிர்ச்சி அடைந்ததுடன், மேலும் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ரஜினி வந்ததால் சிறுபான்மை வாக்குகள் சிதறுமா என்பதுதான் அடுத்த கவலையாக உள்ளதால், அடுத்தக்கட்ட சர்வே எடுக்கவும் தெரிவித்துள்ளாராம்.

English summary
Will Rajinikanth split AIADMK Vote Bank
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X