36 ஆண்டு பயணம்! கோடம்பாக்கம் ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபம் இடிக்கப்படுகிறதா? சௌந்தர்யா தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிகாந்தின் ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தின் பயணம் முடிந்துவிட்டது என ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்த லவ் என்ற வெப் சீரிஸ் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த சீரிஸில் அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

rajinikanth raghavendra kalyana mandapam

இந்த நிலையில் இந்த வெப் சீரிஸ் குறித்து சௌந்தர்யா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராகவேந்திரா திருமண மண்டபம் இடிக்கப்படும் தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

36 ஆண்டுகள் பயணம்

அதற்கு பதில் அளித்த சௌந்தர்யா ரஜினிகாந்த், " ராகவேந்திரா திருமண மண்டபம் சென்னையின் மிகப் பெரிய அடையாளம். 36 ஆண்டுகளாக எங்கள் குடும்பத்துடன் இருக்கிறது. அதற்கான காலம் முடியும் போது, அது அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும்.

காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும் என அப்பா எப்போதும் நினைப்பார். அந்த வகையில் ராகவேந்திரா மண்டபத்தின் பயணம் முடிந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து என்ன செய்வது என்ற பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. ராகவேந்திர திருமண மண்டபம் இடிக்கப்பட போவதாக வெளியான தகவல் உண்மைதான்" என சௌந்தர்யா தெரிவித்தார்.

1990 களில் கட்டப்பட்டது

ராகவேந்திரா திருமண மண்டபம் கடந்த 1990 களில் கட்டப்பட்டது. இங்கு ரஜினி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகலை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். கோடம்பாக்கம் என்றாலே சினிமா என்று பார்க்கப்பட்ட நிலையில் அங்கு இந்த மண்டபம் முக்கிய இடத்தை பிடித்திருந்தது.

ஷூட்டிங்

இங்கு சில ஷூட்டிங் கூட நடந்ததாக சொல்லப்படுகிறது. வீரா படத்தில் இடம்பெற்ற "மாடத்திலே கன்னி மாடத்திலே" என்ற பாடல் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில்தான் படமாக்கப்பட்டது. ரஜினி அரசியலுக்கு வருவதாக சொல்லப்பட்ட போது கூட இந்த திருமண மண்டபத்தில் ரசிகர்கள் சந்திப்பை நடத்தினார். அரசியலுக்கு வருவதாவுகம் சிஸ்டம் சரியில்லை என்றும் 234 தொகுதிகளிலும் போட்டி போடுவதாகவும் ரஜினி தெரிவித்திருந்தார். இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்தது.

கொரோனா பெருந்தொற்று

அது போல் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் ரசிகர்கள் பாதிக்கப்படக் கூடாது, தனது உடல்நிலை குறித்தும் குடும்பத்தினர் கவலைப்படுவதாகவும் கூறி அரசியலுக்கு வர போவதில்லை என்பதை ரஜினி திட்டவட்டமாக அறிவித்திருந்தார். இது ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது.

மகள் வரவேற்பு

இந்த மண்டபத்திற்கு வந்த ரசிகர்களுக்கு மனம் குளிர புகைப்படம் எடுத்துக் கொண்டு வயிறார சாப்பாடு போட்டு அனுப்பினார் ரஜினி. கடந்த 2019 ஆம் ஆண்டு சௌந்தர்யா- விசாகன் திருமண வரவேற்பு நடந்தது. அது போல் 2015 ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்திற்கு பிறகு வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள் தங்கிக் கொள்ள இந்த மண்டபத்தை ரஜினி கொடுத்திருந்தார்.

போன் செய்தால் ரஜினி பேசுவார்

இந்த ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரஜினி சில சமயங்களில் வருவார் என சொல்லப்படுகிறது. அவ்வாறு வரும் போதெல்லாம் ரசிகர்கள் போன் செய்தால் அவரே எடுத்து பேசி, ரசிகர்களை திக்குமுக்காடச் செய்ததாகவும் தகவல்கள் வந்தன.

ஸ்டார் ஓட்டல்

இந்த நிலையில் இந்த திருமண மண்டபத்தை ரஜினி இடித்துவிட்டு நட்சத்திர ஓட்டல் கட்ட போவதாக சொல்லப்படுகின்றன. இல்லை வேறு ஏதேனும் கட்டுமானங்கள் நடைபெற போகிறதா என்பது தெரியவில்லை. எது எப்படியானாலும் ராகவேந்திரா திருமண மண்டபம் இடிக்கப்படுவதற்கு ரஜினி ரசிகர்கள் வேதனை தருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+