சகோதரரை அழைத்து பேசுவாரா சசிகலா...? அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் திவாகரன்..!
சென்னை: சசிகலா தன்னை அழைத்து பேசாவிட்டால் தாம் நடத்தும் கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் இணையவும் தயாராகிவிட்டார் மன்னார்குடி திவாகரன்.
தினகரன் -திவாகரன் இடையே இருந்து வரும் பிரச்சனை தினகரனின் மகள் திருமணத்தில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது மேலும் முற்றியுள்ளது.
முன்னாள் அமைச்சர் காமராஜ், தனது அரசியல் குருவான திவாகரனை அதிமுகவில் ஐக்கியமாக்குவதற்கு எடப்பாடி பழனிசாமியிடம் காய் நகர்த்த திட்டமிட்டுள்ளார்.

சசிகலா தம்பி
சசிகலாவின் கடைசி சகோதரரான திவாகரன் மன்னார்குடியில் வசித்து வருகிறார். ஆரம்பக்காலத்தில் ஜெயலலிதாவுக்கு காவல் அரணாக விளங்கிய அவர், ஜெ.ஜெ. செல்லும் இடங்களுக்கெல்லாம் சென்று வந்தார். ஒரு கட்டத்தில் நேரடி அரசியல் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி கோயில் -கும்பாபிஷேகம், கல்லூரி என நிம்மதியான வாழ்க்கையில் ஈடுபடத் தொடங்கினார். அக்கா சசிகலா மீது மிகுந்த மரியாதை வைத்திருந்த அவர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவருக்கு முழு ஆதரவாக நின்றார்.

பாச வட்டம்
மகன் ஜெயானந்தை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்கு அனுப்பி அக்காவிடம் உடல்நலம் குறித்தெல்லாம் கேட்டறிந்து வந்தார் திவாகரன். இப்படிப்பட்ட சூழலில் கடந்த 2018-ம் ஆண்டு தினகரனுக்கும் திவாகரனுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. சசிகலா யார் பக்கம் நிற்பார் என மன்னார்குடி உறவுகள் ஆவலோடு எதிர்நோக்கியது. சசிகலாவோ தனது அக்காள் மகனான தினகரன் பக்கமே நின்றார். தம்பி திவாகரன் மீது சினம் கொண்டு அவரை தனது பாச வட்டத்தில் இருந்து சற்று ஒதுக்கி வைத்தார்.

போட்டியாக
தனது அக்காவிடமிருந்து தன்னை தினகரன் தான் பிரித்தார் என எண்ணிய திவாகரன், தினகரனுக்கு போட்டியாக அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அவர் எதிர்பார்த்தப்படி அந்தக் கட்சியால் தமிழக அரசியலில் சோபிக்க முடியவில்லை. இதனிடையே சசிகலா விடுதலைக்கு பிறகு எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துவிடும் குடும்ப உறவுகள் மீண்டும் ஒன்று சேர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

சாடல்
அதற்கேற்ப தினகரனின் மகள் திருமணத்தில் திவாகரன் பங்கேற்பார் எனக் கூறப்பட்டது. ஆனால் செப்டம்பர் 16-ம் தேதி தினகரன் மகள் திருமணம் நடந்த அன்று அதில் கலந்துகொள்ளாமல், அன்றைய தினமே மன்னார்குடி அருகே உள்ள கோயில் விழா ஒன்றில் முன்னாள் அமைச்சர் காமராஜுடன் திவாகரன் கலந்துகொண்டார். அப்போது காமராஜுடன் மனம் விட்டு பேசிய திவாகரன், தினகரனின் செயல்பாடுகள் பற்றி சாடியிருக்கிறார்.

அடுத்தக்கட்டம்
இதையடுத்து திவாகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்க விரும்பிய முன்னாள் அமைச்சர் காமராஜ் எடப்பாடி பழனிசாமியிடம் காய் நகர்த்துவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே இன்னும் ஒரு மாதத்திற்குள் சசிகலா தன்னை அழைத்து எப்படியும் பேசுவார் என்று நம்பும் திவாகரன், ஒரு வேளை அக்கா அழைக்காவிட்டால், தனது அடுத்தக் கட்ட நடவடிக்கையை அதிர்ச்சியளிக்கும் வகையில் முன்னெடுப்பார் எனத் தெரிகிறது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications