ஆசிரியர்கள் போராட்டம் எதிரொலி! இன்று தமிழகம் முழுக்க பள்ளிகள் இயங்குமா? வந்த பரபர விளக்கம்
சென்னை: சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி இன்று பள்ளிகள் நடைபெறுமா என்பதில் பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக முக்கிய விளக்கம் வந்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31இல் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதே ஆண்டு ஜூன் 1ஆம் தேதி நியமனம் செய்யப்பட்ட மற்றொரு ஊதியமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஒரே வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு இரு வேறு ஊதியம் செல்கிறது. இதனால் பெரியளவில் ஊதிய முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக இடைநிலை ஆசிரியர்கள் கூறும் நிலையில், இதனால் சுமார் 20 ஆயிரம் பேர் பதிக்கப்பட்டுள்ளன. சம வேலை செய்யும் ஆசிரியர்களுக்குச் சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போராட்டம்: இதற்கிடையே ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இடைநிலை ஆசிரியர்கள் ஒரு வாரமாக தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகிறீர்கள். பள்ளிகளில் தற்போது தேர்வு காலமாகும். குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு போராட்டத்திலிருந்து விலகி பணிக்குத் திரும்ப வேண்டும்.
வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்காக ரூ.44,042 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட 50,000 ஆசிரியர்களுக்குக் கால முறை ஊதியம் வழங்கியுள்ளோம். ஆசிரியர்களின் கோரிக்கைகளை பல்வேறு நிலையில் தீர்த்து வைத்து உங்கள் நலனுக்காகச் செயல்படும் அரசாக திமுக ஆட்சி இருக்கிறது.
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் 3 கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தியுள்ளது. மற்ற சங்கங்களுடன் கருத்துக் கேட்பு நடத்த வேண்டியுள்ளது. அதன்பின்னர் இது சார்ந்து அறிக்கையைப் பெற்று முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்.
கோரிக்கை: மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஆயத்தப்படுத்த வேண்டிய கடமை நமக்குள்ளது. எனவே, கற்றல், கற்பித்தல் மற்றும் தேர்வுப் பணியில் கவனம் செலுத்தி மாணவர்களின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக பணிபுரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதனால் குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், தங்கள் பிரச்சினைக்குத் தீர்வு இல்லாமல் போராட்டத்தை வாபஸ் வாங்க முடியாது என்று இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். மேலும், இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். ஆசிரியர்களின் இந்த போராட்ட அறிவிப்பால் இன்று தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் இயங்குமா என்ற கேள்வி எழுந்தது. குறிப்பாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்குமா என்ற கேள்வி எழுந்தது.
பள்ளிகள் இயங்குமா: இந்நிலையில் இது தொடர்பாக முக்கியமான விளக்கம் வந்துள்ளது. அதாவது தேர்வு மற்றும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதால் மாநிலம் முழுக்க உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் இன்று வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications