தலைக்கு மேல் சீமானுக்கு கேஸ் தொங்குது.. நிர்மலா, குருமூர்த்தி, ரஜினி.. உருவாகிறது கூட்டணி: பிரபலம்
சென்னை: வரும் 2026-ல் வலிமையான கூட்டணி அமைப்போம் என்று சட்டமன்றத்துக்கு வெளியே ஒவ்வொரு முறையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொல்லி கொண்டே வருகிறார். பாமக, தேமுதிக ஏற்கனவே கூட்டணியில் இருக்கும்போது, வலிமையான கூட்டணி வைப்போம் என்று எடப்பாடி சொல்வது யாரை? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ்.
Oneindia யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள நக்கீரன் பிரகாஷ், "சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. சீமான் ஆட்டத்தை பார்க்க போறீங்க என்கிறார் சீமான்.. நிர்மலா சீதாராமனை ஏன் சீமான் சந்தித்தார்? 8.15-யிலிருந்து 8.45 வரைக்கும் நிர்மலா சீதாராமனை சந்தித்ததற்கான ஓட்டல் சிசிடிவி பதிவு உள்ளதா? கூட்டணி வைக்காதவர் எதுக்காக ஆடணும்?

அரசியல்வாதியாக சீமானை பார்த்தால், மறைக்க வேண்டிய விஷயம் அவரிடம் ஒன்றுமே இருக்காது.. இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்பார்.. சசிகலாவை போய் பார்ப்பார்.. பிறகு எடப்பாடியிடம் பேசி சமரசம் செய்யட்டுமா? என்று கேட்பார்.. சங்கி என்றால் சக நண்பன் என்பார்.. பார்ப்பான் என்றால் அனைவரையும் சமமாக பார்ப்பான் என்பார்.. பெரியாரை மோசமாக எதிர்ப்பார்.. ரஜினிகாந்த்தை போய் பார்ப்பார்.. இதெல்லாம் சங்கி கூட்டத்தில் சீமான் இருக்கிறார் என்பற்கான விஷயம்தானே?
காளியம்மாள் - விஜய்
முன்னாடியெல்லாம் கொளத்தூர் மணி உள்ளிட்டோரை சீமான் சந்தித்து கொண்டிருந்தவர், இப்போது திராவிட இயக்கத்தினரை போய் சந்திக்கிறார்.. காங்கிரஸ் அறிவுஜீவிகளை சந்திக்கிறாரா? கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்திப்பது என ஏதாவது செய்துள்ளாரா? சீமானின் உறவு முழுக்க பாஜகவுடன்தான் உள்ளது..
நடுரோட்டில் நின்று லாரியில் அடிபட்டுடுவே என்று விஜய்யை சாடிவிட்டு, இன்று என்னுடைய தம்பி கட்சியில் போய் சேருங்க என்று சீமான் சொல்கிறார்.. ஏன் காளியம்மாளை விஜய் சேர்க்கவில்லை? ஏனென்றால், ஆதவ் அர்ஜூன் ரெட்டியை சந்தித்து பேசியதுமே, உடனே விஷயம் அவருக்கு போயவிட்டது.. இதுபோல அரசியலில் சீமானுக்கு எதுவுமே மறைக்க தெரியாது.
குருமூர்த்தியுடன் தினமும் தொடர்பில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்றுதானே, சீமானின் தம்பிகள் கட்சியைவிட்டு வெளியேறி கொண்டிருக்கிறார்கள்?
விஜயலட்சுமி கேஸ்
சீமானுக்கு ஒரே மைனஸ் விஜயலட்சுமி கேஸ் மட்டும்தான்.. அடுத்த மாதம் நாகரத்தினம் வழக்கை விசாரிக்க போகிறார்.. ஆனால், இதுவரை எந்த நஷ்ட ஈடும் விஜயலட்சுமிக்கு தரவில்லை.. சமாதான பேச்சுவார்த்தையும் விஜயலட்சுமியுடம் நடத்தப்படவில்லை. தலைக்கு மேல் அந்த கேஸ் தொங்குகிறது.. அதில் சிக்கினால் ஆறரை வருடம் சிறை தண்டனை கிடைக்கும்.. 3 வருடம் சிறைதண்டனை என்றாலே தேர்தலில் போட்டியிட முடியாது. இப்போ ஆறரை வருடம் என்றால், இதிலென்ன உங்களுக்கு தாண்டவம் இருக்கு?
ஏற்கனவே ராஜீவ்காந்தியை கொன்றது நாங்கதான் என்று வெளிப்படையாக சொன்னவர் சீமான்.. அதேபோல, தேசிய பாதுகாப் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.. அதேபோல திரள்நிதி வசூலித்ததில் மத்திய நிதித்துறையிடம் ஃபைல்கள் உள்ளன.. இவைகளை வைத்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தால் சீமான் எங்கே செல்வார்?
அதிமுக - பாஜக ஒற்றுமையின்மை
இதையடுத்து, கூட்டணி விவகாரம் பரபரக்கிறது.. அதிமுக பாஜக கூட்டணிக்கு நட்சத்திர பேச்சாளர்கள் யாருமே கிடையாது.. ஆனால், அதிமுக-பாஜக இணைந்து ஒரு காரியத்தை செய்தததாக சரித்திரமும் கிடையாது. இப்போது கூட்டணி அமைத்தும்கூட, பூத் லெவலில் பாஜக - அதிமுகவினர் ஒற்றுமை காணப்படவில்லை.
இதுபோக இரு கட்சிகளிலும் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார்கள்.. கூட்டணி அரசு என அமித்ஷா அறிவிக்கவில்லை என்கிறார் எடப்பாடி பழனிசாமி.. கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று தம்பிதுரை சொல்கிறார்.. தம்பிதுரை போன்ற ஆட்களெல்லாம் கூட்டணி பற்றி பேசக்கூடாது என்று எடப்பாடி சொல்றாரு.. அப்படியெல்லாம் பேசவே கூடாது என்று நயினார் நாகேந்திரன் சொல்றாரு.. இப்படி இதுவரை அதிமுக-பாஜக ஒத்துழைப்புடன் போகவில்லை..
சீமான் - அதிமுக - பாஜக
அப்படியானால் இவர்களுக்குள் ஏதோ நடந்துள்ளது.. வரும் 2026-ல் வலிமையான கூட்டணி அமைப்போம் என்று சட்டமன்றத்துக்கு வெளியே எடப்பாடி பழனிசாமி சொல்லி கொண்டே வருகிறார். பாமக, தேமுதிக ஏற்கனவே கூட்டணியில் இருக்கும்போது, வலிமையான கூட்டணி வைப்போம் என்றால் அது யார்?
சீமான் சொல்லும் தாண்டவம் என்பதன் அர்த்தம் வேறு. பாஜகவுடன் இணைய சீமான் தயாராகிவிட்டார்.. அதைத்தான் தாண்டவம் என்கிறார்.. அதனால்தான் நிர்மலா சீதாராமனிடம் பேசியிருக்கிறார்" என்றெல்லாம் அதில் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications