சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நீரும் நெருப்பும்" ஒன்றாக போகிறதா.. ஸ்டாலினும் சீமானும் கை கோர்க்கிறார்களா.. திடீரென பரவும் "டாக்"!

திமுகவுடன் சீமான் கூட்டணி வைப்பாரா என்ற பேச்சு கிளம்பி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஸ்டாலினை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துவிட்டு வந்ததில் இருந்தே பல்வேறு யூகங்களும், அனுமானங்களும் தமிழக அரசியலில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

Recommended Video

    திமுக கூட்டணில் இணைகிறதா Seemanன் நாம் தமிழர் கட்சி?

    சீமானை பொறுத்தவரை திமுக என்றாலே அலர்ஜி.. ஸ்டாலின் என்றாலே ஆகாது.. மேடைக்கு மேடை ஸ்டாலினை விமர்சித்து கொண்டே இருப்பார்.. கிண்டலடிப்பார்.. பாட்டு பாடுவார்.. ஸ்டாலின் பேசியதுபோலவே பேசி காட்டுவார்.. தன்னுடன் மோத ரெடியா என்று சவால் விடுவார்..

    இதெல்லாம் திமுகவின் மீதான அதிருப்திதானே தவிர, ஸ்டாலின் என்ற தனிப்பட்ட நபர் மீது கிடையாது.. அதனால்தான், ஸ்டாலின் பதவியேற்றதும் தன்னுடைய வாழ்த்தை சொன்னார் சீமான்.

    'தி பேமிலி மேன் 2’.. அமேசான் பிரைமுக்கு சீமான் கடும் எச்சரிக்கை.. தலைமை அதிகாரிக்கு பரபர கடிதம் 'தி பேமிலி மேன் 2’.. அமேசான் பிரைமுக்கு சீமான் கடும் எச்சரிக்கை.. தலைமை அதிகாரிக்கு பரபர கடிதம்

    பாராட்டு

    பாராட்டு

    ஆனால், இந்த முறை திமுக பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நட்பு பாராட்டி வருகிறது.. அந்த வகையில் சீமானும் ஒருவர் என்பதுதான் இன்ப அதிர்ச்சியான தகவல்.. சீமானின் அப்பா இறந்தபோது, சீமானுக்கு போன் செய்து ஆறுதல் சொன்னார்.. பிறகு ஒரு இரங்கல் அறிக்கையும் விடுத்தார் ஸ்டாலின். இந்த சம்பவம் சீமானை ரொம்பவே நெகிழ வைத்துவிட்டது போலும்.. அதனால்தான், 2 நாளைக்கு முன்பு ஸ்டாலினை சந்தித்து, நன்றி சொன்னதுடன் கொரோனா தடுப்பு பணிக்காக 5 லட்ச ரூபாயையும் வழங்கினார்.

    சந்திப்பு

    சந்திப்பு

    ஆனால் 10 வருஷமாக ஸ்டாலினை திட்டிவிட்டு, திடீரென அவரை சந்திக்க சீமானுக்கு ஒரு தயக்கம் இருந்துள்ளதுபோலும்.. அதனால்தான், பாரதிராஜாவின் துணையுடன் அந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்புக்கு பிறகு, சீமானின் பேச்சில் நிறைய மாறுதல் தென்பட்டது.. ஸ்டாலினால் தான் நெகிழ்ந்தேன் என்றார், ஆட்சி சிறப்பாக நடக்கிறது என்றார்.. கொரோனா தடுப்பு பணி வேகமாக நடக்கிறது என்றார்.. இதுதான் பல வியூகங்களை தட்டிவிட்டுள்ளது..

    கமல்

    கமல்

    ஒருவேளை அடுத்த தேர்தலை குறிவைத்து, இப்போதே திமுகவுடன் இணக்கமான போக்கை சீமான் கையில் எடுப்பதாக கூறப்படுகிறது.. திமுகவுடன் கமல் கூட்டணி வைக்க போகிறார் என்பதை கேள்விப்பட்டே, கமலை ஒதுக்கிவிட்டு தனித்து போட்டியிட்டவர் சீமான்.., அப்படி இருக்கும்போது சீமான், திமுகவுடன் இணைவாரா என்ற மறுகேள்வியும் எழுகிறது.

    பலம்

    பலம்

    சீமான் இந்த முறை தோற்று போனாலும், 3வது இடத்தை பிடித்ததையும் 6.7 சதவீத வாக்குகளுடன் சுமார் 30 லட்சம் ஓட்டுகளை பெற்றதையும் திமுகவின் கவனத்தை ஈர்த்துள்ளது.. அதிலும் சசிகலாவை சென்று சந்தித்துவிட்டுதன் பலனாக, தென்மாவட்டங்களில் சீமான் பெற்ற வாக்கு சதவீதத்தையும் திமுக உற்றுநோக்குகிறது. இது தினகரனுக்கே கூட கிடைக்காத பிளஸ்.

     உள்ளாட்சி தேர்தல்

    உள்ளாட்சி தேர்தல்

    மேலும், வரப்போகும் உள்ளாட்சி தேர்தலில் சீமானின் பலம் மேலும் கூட செய்யும்.. 2வது இடத்தில் உள்ள அதிமுகவின் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், 3வது இடத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி முனைப்புடன் செயல்பட்டு, திமுகவின் ஓட்டுக்களையும் பிரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. அப்படி வாக்குகளை பிரித்துவிட்டால், ஓரளவு இடங்களையும் நாம் தமிழர் வென்றுவிடக்கூடும்.

    கூட்டணி

    கூட்டணி

    இதுதிமுகவின் அபார வெற்றிக்கு இடைஞ்சலாக இருக்கும்.. அதனால்தான், சீமானுடன் திமுக இணக்கத்தை கடைப்பிடித்து வருவதாகவும், இதன் பலனாய், சீமானை கூட்டணிக்குள் கொண்டு வரவும் திமுக கணக்கு போடுகிறது.. இதெல்லாம் உண்மையா? நடக்குமா? சாத்தியமா? என்றெல்லாம் தெரியவில்லை.. ஆனால், 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஸ்டாலின் எடுக்க போகும் முடிவை வைத்தே சீமானின் பிளான் இருக்கும் என்கிறார்கள்.

    காங்கிரஸ்

    காங்கிரஸ்

    ஒருவேளை 7 பேர் விவகாரத்தில் ஸ்டாலின் சாதகமான முடிவை எடுத்தால், காங்கிரஸ் கொந்தளித்துவிடும் போல தெரிகிறது.. போதாக்குறைக்கு சீமான் திமுகவுடன் வந்தால், கூட்டணியைவிட்டே காங்கிரஸ் வெளியேறினாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. இந்த 10 வருட காலத்தில் நா தமிழர் கட்சி வளர்ச்சிக்காக உழைத்தவர்கள் ஏராளம்.. ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்போதெல்லாம் கூட்டணி வைத்து போட்டியிடலாம், சட்டமன்றத்திற்குள் நாமும் நுழையலாம் என்று நாம் தமிழர் நிர்வாகிகள் சிலர் சீமானை வலியுறுத்தபடியே வந்தனர்..

    சிங்கிள்

    சிங்கிள்

    ஆனாலும் சீமான் "சிங்கம் சிங்கிளாகத்தான் வரும்" என்று சொல்லி பிடிவாதமாகவே இருந்து தனித்து போட்டியிட்டு வருகிறார். இந்த முறை கூட்டணி என்ற விஷயத்தில் நுழைய வாய்ப்புள்ளதா? அதுவும் திமுகவுடன் இணைவாரா? நீரும் நெருப்பும் ஒன்றாக போகிறதா? தெரியவில்லை.. பார்ப்போம்..!

    English summary
    Will Seeman alliance with DMK in Local Body Election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X