ஸ்டாலினுக்கு சான்ஸ்? தேசிய அளவில் சட்டென மாறிய கிளைமேட்! ராகுல் மட்டும் அப்படி செய்யலைன்னா அவ்ளோதான்
சென்னை: தேசிய அளவில் தற்போது நடக்கும் அரசியல் மாற்றங்களால் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திமுக என்ன மாதிரியான முடிவுகளை எடுக்கும், 2024 தேர்தலில் என்ன மாதிரியான அரசியல் நிலைப்பாட்டை எடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
காங்கிரஸ் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன. கர்நாடகாவில் 2019 தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி மோடி என்ற பெயரை பயன்படுத்தி அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.
இதையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ராகுல் காந்தி தனது எம்பி பதவியை இழந்துள்ளார். இனி அவர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் முடியாது. அவரின் எம்பி பதவி பறிக்கப்பட்டதாகவும், வயநாடு தொகுதி காலி ஆகிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

எதிர்கட்சிகளை இணைத்துள்ளது
இந்த சம்பவம் தற்போது எதிர்கட்சிகளை ஒரு கூடைக்கு கீழ் கொண்டு வந்துள்ளது. எதிர்க்கட்சிகள் பலர் ராகுல் காந்திக்கு இந்த விவகாரத்தில் ஆதரவு கொடுத்துள்ளனர். நேரடியாக அவரை ஆதரித்து பேசி உள்ளனர். சீமான் போன்ற தீவிர காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள் கூட இதில் ராகுலை ஆதரித்து உள்ளனர். சிபிஐ, சிபிஎம் கட்சிகள் ராகுலை ஆதரித்து உள்ளன. அதேபோல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ராகுலை ஆதரித்து பேசினார். அரவிந்த் கெஜ்ரிவால் ராகுல் காந்தியை ஆதரித்து பேசி உள்ளார். இப்படி எதிர்க்கட்சிகள் ஒரு கூடைக்கு கீழ் வந்துள்ளன.

மேல்முறையீடு
இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி உடனே ஜெயிலுக்கு போக வாய்ப்பு இல்லை. அவருக்கு மேல்முறையீடு செய்ய நேரம் கொடுக்கப்பட்டு உள்ளது. வழக்கில் மேல்முறையீடு செய்து குஜராத் உயர் நீதிமன்றம் , உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்யலாம். பெரும்பாலும் மேல் கோர்ட்டில் இந்த தீர்ப்பு நிற்க வாய்ப்பு இல்லை. அதனால் ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்கம் மீண்டும் திரும்ப பெறப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒருவேளை இதில் ராகுல் மேல்முறையீடு செய்யவில்லை என்றால் சிக்கல் ஆகும்.

ராகுல் மட்டும் அப்படி செய்யவில்லை என்றால்?
ராகுல் காந்தி மட்டும் மேல்முறையீடு செய்யவில்லை என்றால் ராகுலின் தகுதி நீக்கம் செல்லுபடி ஆகும். தற்போது இந்த தீர்ப்பு, தகுதி நீக்கம், 2 வருட ஜெயில் எல்லாம் ராகுலுக்கு மிகப்பெரிய அரசியல் இமேஜ் ஒன்றை கொடுத்து உள்ளது. முக்கியமாக வடஇந்தியாவில் இவர் மீதான பார்வை மாற தொடங்கி உள்ளது, அப்படி இருக்க.. சிறையை எதிர்க்கொண்டு.. இன்னும் வலிமையோடு வெளியே வர ராகுல் காந்தி நினைக்கலாம். இந்த தண்டனை தனக்கு சாதகமாக மாறும் என்றும், அரசியல் ரீதியாக தனக்கு இது உதவும் என்றும் ராகுல் காந்தி நினைக்கலாம். அப்படி நினைத்து மேல்முறையீடு செய்யாமல் கூட ராகுல் காந்தி இருக்க வாய்ப்புகள் உள்ளன.

எதிர்க்கட்சி முகம் யார்? - 4 பேர்
அப்படி ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யாத பட்சத்தில் எதிர்க்கட்சிகளின் முகமாக 2024 தேர்தலில் யார் இருப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் ராகுல் காந்தி 10 வருடம் தேர்தலில் போட்டியிட முடியாது. அப்படி இருக்க எதிர்க்கட்சிகளுக்கு முகமாக ஒருவர் இருக்க வேண்டும். இந்த ரேஸில்.. மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், மு க ஸ்டாலின் ஆகியோர் இருக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் பிரதமர் முகமாக கார்கே கூட நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. மன்மோகன் சிங்கை கொண்டு வந்தது போல கார்கேவை காங்கிரஸ் முன்னிறுத்த வாய்ப்புகள் உள்ளன.

ஸ்டாலின் சான்ஸ்
இந்தநிலையில்தான் கார்கேவை அல்லது மற்ற காங்கிரஸ் தலைவர்களை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் ஸ்டாலினுக்கு தேசிய அளவில் சான்ஸ் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. : தேசிய அளவில் தற்போது நடக்கும் அரசியல் மாற்றங்களால் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திமுக என்ன மாதிரியான முடிவுகளை எடுக்கும், 2024 தேர்தலில் என்ன மாதிரியான அரசியல் நிலைப்பாட்டை எடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் சென்னையில் முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் அவர் தன்னுடைய தேசிய அளவிலான திட்டம் குறித்து பேசினார். இந்த நிகழ்விற்கு முன் பேசிய பரூக் அப்துல்லா.. முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கிறார். பாஜகவை கட்டுப்படுத்த அவரை போன்ற ஒருவர் தேசிய அரசியலுக்கு தேவை.

தேசிய அரசியல்
தேசிய அரசியலில் அவர் இருந்தால் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இதனால் ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என்று பரூக் அப்துல்லா பேசி இருந்தார். இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்.. தான் ஏற்கனவே தேசிய அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், தேசிய அரசியலில்தான் தான் இருப்பதாகவும் பேசி இருந்தார். மேலும் பிறந்தநாள் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகாலமாக வெற்றிபெற்றதற்கு ஒற்றுமை தான் காரணம். இந்த ஒற்றுமை தேசிய அளவில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டை போல் ஒற்றுமையான கூட்டணியை தேசிய அளவில் அமைக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டாலே வெற்றி நிச்சயம். அதுதான் இப்போது முக்கியம். காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் விட்டுக்கொடுத்து பாஜகவுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டும். காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி அமைக்க கூடாது. அப்படியே அமைத்தாலும் அது கரை சேராது. தேர்தலுக்கு பின் கூட்டணி என்பதும் நடைமுறைக்கு சரியாக இருக்காது, என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஏற்றுக்கொள்வார்களா?
இந்த விழாவில் ஸ்டாலின் பிரதமர் ஆக வேண்டும் என்றும் கூட பரூக் அப்துல்லா கூறி இருந்தார். இதற்கான திட்டங்களை திமுகவும் வைத்து உள்ளதாக கூறப்படுகிறது. 2024ல் தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் பட்சத்தில்.. முக்கியமாக ராகுல் காந்தி இல்லாத பட்சத்தில் காங்கிரசை பல்வேறு கட்சிகள் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை. உதாரணமாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, திரிணாமுல் காங்கிரஸ் போன்றவை காங்கிரசை ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கும் போது இந்த கட்சிகளுக்கு நட்பாக இருக்கும் ஒருவர்தான் பிரதமர் ஆக முடியும். அதாவது தொங்கு நாடாளுமன்றம் உருவானால், எதிர்க்கட்சிகள் ஒன்று இணைந்து ஆட்சி அமைக்கும். அப்படிப்பட்ட சமயத்தில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளும் ஒருவர் பிரதமராக வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஸ்டாலினை தேசிய அளவில் கட்சிகள் ஏற்றுக்கொள்ளும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர











Click it and Unblock the Notifications