சொந்த காசில் சூனியம்! கரண்ட் பில்லை குறைக்க இரவில் பிரிட்ஜ்ஜின் ஸ்விட்ச்சை ஆஃப் செய்யலாமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின்சார கட்டணத்தை குறைக்க பிரிட்ஜின் ஸ்விட்சை இரவு நேரங்களில் அணைத்து வைப்பது நல்லதா?

மின்சார கட்டணம் தற்போது 200 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் அதை எப்படியாவது குறைத்துவிட பலர் முனைப்பு காட்டி வருகிறார்கள். இதற்காக வீடுகளில் மின்விசிறி, மின் விளக்குகளின் பயன்பாட்டை தேவையான அளவுக்கு குறைத்துக் கொள்கிறார்கள்.

will switch off fridge at night time reduced EB bill?

ஆனாலும் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்டவைதான் அதிக மின்சார பயன்பாடுக்கு காரணமாகிறது. என்னதான் இன்வெர்ட்டர் ஏசி வாங்கினாலும் அதிலும் கரண்ட் செலவு நிறைய மிச்சப்படுத்த முடியவில்லை. இதனால் மின் கட்டணத்தை எப்படியெல்லாம் குறைப்பது என்பது குறித்து நம் மக்கள் ரூம் போட்டு யோசிக்காத குறையாக உள்ளார்கள்.

இதற்காக அவர்களுக்கு முதலில் தோன்றும் ஐடியா, ஏசி இல்லாமல் படுக்க முடியாது, பிரிட்ஜை இரவு நேரங்களில் நிறுத்தி வைத்துவிட்டால் என்ன, அதான் இரவில் குளிர்ச்சியாகத்தானே இருக்கிறது என யோசிக்க தொடங்கிவிட்டார்கள். மின் சிக்கனம், தேவை இக்கனம் என்பது நல்ல விஷயமென்றால் அதை எதற்கெல்லாம் செய்ய வேண்டும் என்ற ஒரு வெவஸ்தை இருக்கிறது அல்லவா

மின் சிக்கனத்தை செய்கிறேன் என கூறிக் கொண்டு இரவு நேரங்களில் பிரிட்ஜை பலர் அணைத்து வைக்கிறார்கள். இது அதன் உள்ளே இருக்கும் பொருட்களுக்கு நல்லதா என்ற கேள்வி எழுகிறது. இது போல் செய்வது சரியா என்பது குறித்த விவாதமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பிரிட்ஜ் என்பது உணவு பொருட்களையும் குளிர்பானங்களையும் கெட்டு போகாமல் பிரஷ்ஷாக வைத்திருக்கும்.

ஒரு வேளை பிரிட்ஜை இரவு நேரத்திலோ வெளியூர் செல்லும் போதோ அணைத்து வைத்தால் அதில் உள்ள உணவு பொருட்கள் கெட்டுவிடும். பிரிட்ஜை அணைத்தால் அதில் 2 முதல் 3 மணி நேரம் வரை உள்புற கூலிங் இருக்கும். அதே பிரிட்ஜை 5 அல்லது 6 மணி நேரத்திற்கு இரவு நேரத்தில ஆப் செய்து வைக்கலாம் என நீங்கள் கருதினால் அது உணவு பொருட்களை கெட்டு போக வைக்கும்.

பிரிட்ஜின் உள்ளே அதிக வெப்பநிலை காரணமாக பூஞ்சைகள் வளரத் தொடங்கும். இதனால் பூஞ்சை பாதித்த உணவு வகைகளை நாம் உட்கொண்டால் நமது உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும். சரி பொருளாதார ரீதியாக பார்த்தாலும் அது உங்களுக்கு நன்மையை செய்யாது. பிரிட்ஜை அணைத்தால் உள்புறத்தில் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கும். பிறகு பிரிட்ஜை ஆன் செய்யும் போது கம்ப்ரஸ்ஸர் பிரிட்ஜின் உட்புறத்தை கூலாக்க பல நேரம் எடுக்கும். அப்போது கரன்ட் பில் அதிகரிக்கும். எனவே இரவு நேரத்தில் பிரிட்ஜை அணைத்து வைத்தாலும் உங்களுக்கு எந்த பயனும் இல்லை.

தற்போது நவீன பிரிட்ஜ்கள் வந்துள்ளன. இவை தெர்மோஸ்டேட் ஆட்டோ கட் ஆப் ஆப்ஷனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பிரிட்ஜ் குறிப்பிட்ட வெப்பநிலையை அடைந்தவுடன் கம்பரஸ்ஸரை ஆஃப் செய்துவிடும். இதனால் உங்கள் பிரிட்ஜும் கூலாக இருக்கும். மின்சாரமும் சிக்கனமாக பயன்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+