தமிழ்நாடு அரசு மட்டும்.. இந்த முடிவை எடுத்தால்! அரசு ஊழியர்கள் துள்ளி குதிக்க போறாங்க! என்ன நடக்குமோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு ஒருங்கிணைந்து ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்துள்ள நிலையில் .. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சட்டசபைத் தேர்தலில் திமுக கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. உதாரணமாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பால் விலை குறைப்பு நிறைவேற்றப்பட்டுவிட்டது.

பல்வேறு திட்டங்கள்: இன்னொரு பக்கம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 கொடுக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதே சமயம் இன்னும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. உதாரணமாக பெட்ரோல் விலை குறைப்பு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

jobs job old pension scheme pension

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் இடையே பழைய ஓய்வூதிய திட்டம் மிக முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் இதை செயல்படுத்த முடியாது என்று முன்பு நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையிலேயே தெரிவித்து இருந்தார்.

பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் கடந்த 2022 வருடம் பேசுகையில், தனிநபர் ஒருவருக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது. அதேநேரம் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தனிநபர் ஒருவருக்கு ரூ.50,000 தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது"என்று தெரிவித்தார். அவரின் இந்த பேச்சு அரசு ஊழியர்கள் இடையே பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது.

வாக்குகள் கிடைக்கவில்லை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 95 சதவீத ஆதரவு எப்போதுமே திமுகவுக்குத்தான் கிடைக்கும். ஆனால், ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

அதனால் கடும் அதிருப்தியடைந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து இந்த தேர்தலில் திமுகவுக்கு எதிராக முடிவெடுக்க வேண்டும் என தீர்மானித்திருந்தனர். அந்த வகையில் அவர்களின் ஆதரவு பாஜகவுக்கு கிடைத்திருக்கிறது.


தங்கம் தென்னரசு: இதையடுத்தே தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தொழிற் சங்கங்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில்தான் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல்வர் உறுதி: இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின், பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி முன்னதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில், இது தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்துள்ளது. அரசு ஊழியர்களின் நலனில் மாநில அரசு எப்போதும் கவனமாக இருக்கும்.இது தொடர்பாக பலர் எங்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். தேவையான நடவடிக்கையை நாங்கள் விரைவில் எடுப்போம் என்று கூறி உள்ளார்.


மத்திய அரசு: உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் உறுதியளிக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியத்திற்கு வழி ஏற்படுத்தும் விதமாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யுபிஎஸ்) மத்திய அரசு சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. பென்ஷன் திட்டத்தில் பெரிய அளவில் இதன் மூலம் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

யுபிஎஸ் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களிலிருந்து சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவார்கள் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்திற்கு சமமான இந்த முழு ஓய்வூதியத்திற்கு தகுதி பெற, ஊழியர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருக்க வேண்டும்.

அடுத்த நிதியாண்டிலிருந்து, தேசிய ஓய்வூதியத் திட்ட சந்தாதாரர்கள், உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத்தை வழங்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மாறுவதற்கான ஆப்ஷன் வழங்கப்படும். புதிய ஓய்வூதியம், யுபிஏ இரண்டில் ஒன்றை அவர்கள் தேர்வு செய்யலாம். யுபிஎஸ் ஓய்வூதிய திட்டத்தில்.,. புதிய ஓய்வூதிய திட்டத்தை விட அதிக பென்ஷன் கிடைக்கும்.

எப்போது வரும்: மத்திய அரசு ஒருங்கிணைந்து ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்துள்ள நிலையில் .. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் வரும் பட்ஜெட்டில்.. அதாவது பிப்ரவரி மாதம் பழைய பென்ஷன் பற்றிய அறிவிப்பு வரும். அதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடக்கின்றன. பட்ஜெட்டில் பழைய பென்ஷன் பற்றி கூறுவார்கள் என்று கூறப்படுகிறது. அப்படி இல்லையென்றால் புதிய ஓய்வூதியத்தில் மாற்றங்களை செய்து அதை கொண்டு வர தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறதாம். லோக்சபா தேர்தலில் அரசு ஊழியர்களிடம் இழந்த ஆதரவை பெறும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+