Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2026ல் அதிமுக வென்றால் கூட்டணி ஆட்சி? "எடப்பாடியின் அந்த வார்த்தையை கவனியுங்க.." ஆ ராசா நறுக் பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 2026 சட்டசபைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. 2026ல் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி என அமித் ஷா கூறியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே இது தொடர்பான கேள்விக்கு திமுக எம்பி ஆ ராசா அளித்த பதில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் இருக்கிறது. ஆனால், இப்போதே மாநிலத்தில் அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது. குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிப் பல மாற்றங்கள் அரசியல் களத்தில் நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தான் 2026 தேர்தலுக்கான அதிமுக பாஜக கூட்டணி இறுதியானது.

Will Tamil nadu see ADMK- BJP coalition govt in 2026 DMK A Raja answers

கூட்டணி ஆட்சி?

ஏப்ரல் மாதம் அமித்ஷா சென்னை வந்திருந்தபோது கூட்டணி உறுதியானது. அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி இணைந்து பிரஸ் மீட் கொடுத்தனர். அப்போது அமித் ஷா முதலில், "நாங்கள் இணைந்து தான் ஆட்சியை அமைக்கப் போகிறோம். கூட்டணி ஆட்சி தான் இருக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் நிச்சயம் கூட்டணி ஆட்சி நடைபெறும்" என்று கூறியிருந்தார்.

தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்ததே இல்லை. 2006ல் திமுக பெரும்பான்மை பெறாத போதும் கூட காங்கிரஸ் வெளியில் இருந்தே ஆதரவு கொடுத்திருந்தது. இந்தச் சூழலில் அமித்ஷாவின் பேச்சு அப்போது பேசப்பட்டது. இதற்கிடையே நேற்று அமித் ஷா மதுரையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தார். மதுரை ஒத்தக்கடையில் பாஜக மாநில மாவட்ட மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்திலும் அப்போது தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறியிருந்தார்.

ஆ ராசா தந்த பதில்

அமித் ஷாவின் இந்த பேச்சு மீண்டும் தமிழக அரசியல் அரங்கில் பேசுபொருள் ஆகியுள்ளது. இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆ ராசா, இது தொடர்பான கேள்விக்கு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அமித் ஷா கூட்டணி ஆட்சி என்கிறாரே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆ ராசா, "அதை நீங்கள் எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.

எடப்பாடி சொன்ன வார்த்தை

அவர் மேலும் பேசுகையில், "இது அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி என்கிறார் அமித் ஷா.. அப்போது அதிகார பகிர்வு இருக்குமா என்று எடப்பாடியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இல்லை என மறுப்பதற்குப் பதிலாகத் திரும்பத் திரும்ப அதே கேள்விக்கு ஏன் வருகிறீர்கள் என மட்டும் சொல்கிறார். இப்போது நான் சொல்கிறேன். இந்த கேள்வியை நீங்கள் திரும்பத் திரும்ப எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும்.

திமுக தான் வெல்லும்

நீங்கள் எந்த கூட்டணி வேண்டும் என்றாலும் அமைக்கலாம்.. அந்த கூட்டணியை எதிர்கொள்ளும் தகுதியும் ஆற்றலும் எங்கள் முதல்வருக்கு இருக்கிறது. மக்கள் இந்த ஆட்சியை எப்படி அங்கீகரித்துள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். எம்பி, எம்எல்ஏக்கள் தொகுதிக்குச் சென்றால் மக்கள் வரவேற்கவே செய்கிறார்கள். வெறுப்பதோ விரட்டுவதோ இல்லை. எனவே, 2026ல் திமுக தான் வெல்லும்.!

எப்போதும் எங்குப் போனாலும் மோடி- அமித் ஷா என ஒன் மேன் ஷோ தான் காட்டுவார்கள். இங்குத் தமிழ்நாட்டில் தான் தான் முதல்முறையாகத் தோல்வியை ஒப்புக்கொண்டு மக்கள் பார்த்துக் கொள்வார்கள் எனச் சொல்லியிருக்கிறார். நான் சொல்கிறேன்.. அதே மக்கள் உங்களைப் பார்த்துக் கொள்வார்கள்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+