10 ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்குவதை ஊழியர்கள் நிறுத்தாவிட்டால் டாஸ்மாக் தனியார் மயம்? வலுக்கும் குரல்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் விக்னேஷ் டாஸ்மாக்கில் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுப்பதற்காக சம்பளத்தை அதிரடியாக உயர்த்தினார். அதன்பின்னர் அவர் கூறுகையில், "இனிமேல் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால் அரசு மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும். இனிமேல் ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்தால் கூட டாஸ்மாக் பணியாளர்கள் 3 மாதங்கள் தற்காலிக நீக்கம் செய்யப்படுவார்கள். இதே தவறை மீண்டும் செய்தால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார்கள்" என்றார்.

என்ன தான் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் கூறினாலும், நேற்று பல கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கினார்கள் என்பது கசப்பான உண்மை. இது பல ஊடகங்களில் ஒளிபரப்பானது. இந்த விவகாரத்தை முடிவுக்கு கொணடுவர டாஸ்மாக்கை தனியார் மயமாக்க வேண்டும் என்று குரல்கள் வலுத்து வருகின்றன.

Will TASMAC be privatized if employees do not stop charging an extra 10 rupees

டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் எம்ஆர்பியைவிட அதிகம் வாங்குவது பல ஆண்டுகளாக தொடர்கிறது. டாஸ்மாக் ஊழியர்கள் குறைவான சம்பளம் வாங்குவது ஒரு புறம் எனில், அவர்கள் மின் கட்டணம், கடையின் பராமரிப்பு செலவு போன்றவற்றையும் பார்க்க வேண்டியதிருந்தது.இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க சம்பளம் உயர்த்தப்பட்டது. அரசும் ஓரளவு கணிசமான நிதி ஒதுக்கியது.ஆனாலும் பிரச்சனை குறைந்தபாடில்லை.. ஆட்சி மாறிய நிலையில், தவெக ஆட்சியிலும் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்குவது தொடர்ந்து. கரூரில் இன்றைய முதல்வர் விஜய், பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று பாட்டுப்பாடியிருந்தார். ஆனால் அவரது ஆட்சியிலும் பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் அதிகமாக வாங்குவது தொடர்ந்தது.

இதையடுத்து இந்த பிரச்சனையை மனிதாபிமான அடிப்படையில் அணுகிய தவெக அரசு அவர்களின் சம்பளத்தை அதிரடியாக அதிக அளவில் உயர்த்தியது. சட்டசபையில் அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பில், "23 ஆண்டுகளாக 'டாஸ்மாக்' கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு 1-ந்தேதி முதல் சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33023, விற்பனையாளர்களுக்கு ரூ.30284, உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28680 ஆகவும் ஊதியமாக வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.486.90 கோடி செலவு ஏற்படும்.
பண்டிகை முன்பணமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.ஆண்டுதோறும் 3 சீருடைகள் துணி மற்றும் தையல் செலவுக்காக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்.

'டாஸ்மாக்' கடைகளில் தூய்மை பணி மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதற்காக மாதந்தோறும் மாநகரங்களில் இயங்கும் கடைகளுக்கு ரூ.5 ஆயிரமும், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் இயங்கும் கடைகளுக்கு ரூ.4 ஆயிரமும், கிராமப்புறக் கடைகளுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும்.
'டாஸ்மாக்' கடைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் 8 மணி நேரப் பணி ஒதுக்கீடு, வாரத்தில் ஒரு நாள் விடுமுறை மற்றும் மாதத்தில் 2 நாள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுமுறை ஆகியவை வழங்கப்படும். டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் தகுதியுடைய 250 பணியாளர்களை சிறப்புத் தேர்வு மூலம் இளநிலை உதவியாளர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருந்தார்.

அத்துடன், "இனிமேல் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால் அரசு மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும். இனிமேல் ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்தால் கூட டாஸ்மாக் பணியாளர்கள் 3 மாதங்கள் தற்காலிக நீக்கம் செய்யப்படுவார்கள். இதே தவறை மீண்டும் செய்தால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் விக்னேஷ் எச்சரித்தார்.

ஆனால் அமைச்சரின் எச்சரிக்கையை தொடர்ந்து நேற்று பல்வேறு கடைகளில் ஊடகங்கள் தமிழ்நாடு முழுக்க ஆய்வு செய்தன. அந்த ஆய்வில், பல கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிப்பது தொடர்ந்தது. குடிமகன்கள் பலர், பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிப்பது தொடர்கிறது. எதுவும் மாறவில்லை. எதுவும் மாறப்போவது இல்லை என்று விரக்தியுடன் கூறியபடி வாங்கி சென்றனர். இதுபற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் விக்னேஷ், இனி தயவுதாட்சணை இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

இந்த சூழலில், 10 ரூபாய் பாட்டிலுக்கு எக்ஸ்ட்ரா வாங்குவதை ஊழியர்கள் நிறுத்தாவிட்டால் டாஸ்மாக் நிறுவனத்தை தனியார் மயம் ஆக்க வேண்டும் என்று தவெக அரசுக்கு பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். மாதம் ஒரு லட்சம் சம்பளம் கொடுத்தாலும் பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ராவாங்குவதை இவர்கள் நிறுத்தப்போவது இல்லை .. எனவே இந்த பிரச்சனையில் அரசுக்கு கெட்ட பெயர் வராமல் இருக்கவும், கூடுதல் வருமானம் மற்றும் தரமான சேவைகள் வழங்கவும், டாஸ்மாக்கை தனியார் மயம் ஆக்குவதே தீர்வு என்று அமைச்சர் விக்னேஷை டேக் செய்து பலரும் பதிவிட்டு வருகிறார்கள். இப்படியே தொடர்ந்தால், ஒருவேளை அரசு கெட்ட பெயரை தடுக்க இந்த முடிவுக்கு தள்ளப்படவும் வாய்ப்பு உள்ளதாவும் சொல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+