EV பைக் பேட்டரியுடன் லிப்டிற்குள் சென்றால் உயிருக்கு ஆபத்தா? வெடித்து சிதறுமா? இதோ விளக்கம்!
சென்னை: மின்சார பைக்கின் பேட்டரியை லிப்டிற்குள் எடுத்து செல்வது பாதுகாப்பானது இல்லை என்ற மேசேஜ் உடன் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது. உண்மையில், லிப்டிற்குள் பேட்டரியை எடுத்து சென்றால் இப்படி நடக்குமா? என்பது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மின்சார வாகனங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் தற்போது அதிகரித்து விட்டது. அதவேளையில் மின்சார வாகன்ங்களின் பாதுகாப்பு , பராமரிப்பு பற்றி மக்கள் மத்தியில் கொஞ்ச்சம் தயக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கிடையேதான், கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்று பரவி வருகிறது.

அந்த வீடியோவில், மின்சார பைக்கிற்கான பேட்டரியை கையில் எடுத்துக்கொண்டு வரும் நடுத்தர வயது மதிக்கத்தக்க நபர் அடுக்கு மாடி குடியிருப்பின் லிப்ட் ஒன்றிற்குள் செல்கிறார். லிப்ட்க்குள் சென்று கதவை மூடிய அடுத்த நொடி மின்சார வாகனத்தின் பேட்டரி பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறுகிறது. இந்த சத்தம் கேட்டு அடுக்கு மாடி குடியிருப்பு வாசிகள் ஒடி வந்து லிப்டை திறந்து பார்த்த போது பலத்த தீக்காயங்களுடன் அந்த நபர் மீட்கப்படுகிறர்.
பார்ப்பவர்களை பதற வைக்கும் விதமாக இந்த வீடியோ இருந்தது. இந்த வீடியோவில் கேப்ஷனாக, இவி வாகனங்களின் பேட்டரியை லிப்டிற்குள் கொண்டு சென்றால், லிப்ட் கதவு மூடப்பட்டவுடன் பேட்டரியின் எலக்ட்ரோ சார்ஜ், மொத்த லிப்டையும் மேக்னெட் பேட்டரியாக மாற்றிவிடும். எனவே மிக கவனம்..உங்கள் நண்பர்களுக்க்கு இந்த வீடியோவை பகிருங்கள் என்று கூறப்படு இருந்தது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்கள் உறவினர்கள், நண்பர்க்ளுக்கு பகிர்ந்தனர். பலரும் தங்களின் வாட்ஸ் அப் ஸ்டேட்டசாக கூட வைத்து விழிப்புணர்வு பதிவாக போட்டு இருந்தார்கள். இவி பேட்டரியை லிப்டிற்குள் எடுத்து சென்றால் வெடித்து சிதறுமா? இந்த வீடியோ உண்மையானதுதான என நெட்டிசன்கள் விவாதித்துக் கொண்டனர்.
இந்த நிலையில் தான், உண்மையில் இவி பேட்டரியை லிப்டிற்குள் கொண்டு சென்றால் வெடித்து சிதறும் ஆபத்து உள்ளதா என்பது பற்றி Engineering Facts என்ற பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், எலக்ட்ரோ சார்ஜ் என்ற கான்செப்டே கிடையாது. எலக்ட்ரிக் சார்ஜ் என்பதுதான் உள்ளது. மேக்னடிக் பேட்டரி- மேக்னடிக்க் ஃபீல்டு சொல்கிறார்கள் என்றால்.. பேட்டரியில் மேக்னடிக் ஃபீல்டு உருவாகாது.
எலக்ட்ரான் நகரும் இடத்தில் தான் மேக்னெட்டிக் ஃபீல்டு உருவாகும். பேட்டரியில் எலக்ட்ரான் சேர்ந்துதான் இருக்குமே தவிர அதில் எந்த நகர்வும் இருக்காது. இந்த சம்பவத்திற்கும் பேட்டரி அதிக வெப்பம் அடைதல், over Charger, over dishcharger என பல காரணங்கள் இருக்கலாம்.. லிப்ட் கதவு மூடியதற்கும் வெடித்ததற்கும் எந்த காரணமும் கிடையாது. கதவு மூடியதும் வெடித்ததால் அதை காரணமாக எடுத்துக் கொண்டார்கள்" என்று கூறியுள்ளார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications