சல்லி சல்லியா நொறுங்கும் பிளான்கள்.. திமுகவுக்கு செக்.. மதுரை மண்ணில் "முதல் விதை"யை தூவும் அண்ணாமலை
திமுகவுக்கு செக் வைக்க பாஜக புது அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது.
சென்னை: திமுகவுக்கு செக் வைக்க பாஜக தயாராகிவிட்டதாம்.. இதற்கான முதல் விதையை மதுரை மண்ணில் இருந்து தூவ போகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
சமீப காலமாகவே, பாஜகவின் நடவடிக்கைகள் திமுகவுக்கு எரிச்சலை கிளப்பிவிட்டு வருகிறது.. திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டங்களையும் அறிவித்து, அதை நடத்தியும் வருகிறது..
அறிக்கைகள், ட்வீட் பதிவுகள் மூலமும் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்தும் வருகிறது.. இவைகள் எல்லாம் சேர்ந்து திமுக அரசுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாகவே தெரிகிறது.

காய் நகர்த்தல்கள்
இதற்கெல்லாம் சரியான பதிலடிகளையும், தர்க்க ரீதியான வாதங்களையும், புள்ளிவிவரங்களுடன் கூடிய தரவுகளையும், அமைச்சர்களும், திமுக நிர்வாகிகளும் அவ்வப்போது தந்து வருகிறார்கள்.. எனினும், எம்பி தேர்தலை குறி வைத்து பாஜக மேலிடம் காய் நகர்த்தல்களை தொடங்கி உள்ளது. அந்த வகையில், திமுகவுக்கு நெருக்கடி தந்து கொண்டே, பிற கட்சிகளையும், முக்கிய புள்ளிகளையும் டார்கெட் செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

ஒரே ரூட்
திமுக, அதிமுக இரு கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போது, ஒன்றையொன்றை தாக்கி கொள்வதும், மாநில அரசை கண்டித்து இன்னொரு கட்சி ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதும் அரசியலில் வழக்கம் என்றாலும், இந்த ரூட்டைதான் கடந்த 3 மாத காலமாகவே அண்ணாமலையும் கையில் எடுத்துள்ளார்.. அதாவது அதிமுக வாய் திறக்கிறதோ இல்லையோ, திமுகவை விமர்சித்து முதல் குரலை கொடுத்துவிடுவதுடன், கையோடு ஒரு ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்து வருகிறார்..

திமுக
போகிற வேகத்தை பார்த்தால், அதிமுகவை முந்திக் கொண்டு , தனித்து களமிறங்கினாலும் ஆச்சயரிப்படுவதற்கில்லை என்றும் சொல்கிறார்கள். கடந்த முறை எம்பி தேர்தலின்போது, தமிழகத்தில் ஒரு இடம்கூட கிடைக்காததால்தான், இந்த முறை கூடுதல் தனிக்கவனம் செலுத்த டெல்லி மேலிடம் முடிவு செய்து, அதன்படியே மேலிடத்தின் நேரடி செயல் திட்டப்படியே அண்ணாமலை மாநில தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

அமித்ஷா
சமீபத்தில் சென்னை வந்திருந்த அமித்ஷா, இந்த எம்பி தேர்தலில் 5 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்று கறாராக சொல்லிவிட்டு போனதாகவும் தகவல்கள் கசிந்தன.. அமித்ஷா வந்துபோனதில் இருந்தே, மாநில தலைமை செயல்பட்டு வருகிறது.. இதற்காக, மக்களின் கவனத்தை கவரும் வகையில், தன் பாணி அரசியலை மாற்றி கொண்டுள்ளது..

சுற்றுப்பயணம்
முதல்கட்டமாக, கட்சிக்குள் சரியாக செயல்படாத மாவட்ட தலைவர்களை கண்டறிந்து 29 மாவட்டங்களுக்கு சுறுசுறுப்பான புதிய மாவட்ட தலைவர்களை நியமித்திருந்தார். இதேபோல, மாநில நிர்வாகிகளிலும் சிலருக்கு பொறுப்புகள் மாற்றி தரப்பட்டது.. மேலும் புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் உள்பட பலருக்கு முக்கிய பதவிகளும் வழங்கப்பட்டன.

தேர்தல் வியூகம்
அடுத்ததாக, பிரதமர் மோடி அரசு தமிழ்நாட்டில் செயல்படுத்தி உள்ள திட்டங்கள் பற்றி மக்கள் மத்தியில் தீவிர பிரசாரம் மேற்கொள்ளும்படி அண்ணாமலை கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டுள்ளாராம்.. இதற்கு அடுத்தபடியாக, மொத்தமுள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் 25 தொகுதிகளை குறி வைத்து இந்த தேர்தல் வியூகம் வகுக்கப்படுகிறதாம்.. அதுமட்டுமல்லாமல், 4 எம்எல்ஏக்கள் தற்போது வெற்றி பெற்றிருக்கும் தொகுதிகளையும் யாருக்கும் விட்டுத்தராமல், இந்த முறையும் பாஜகவே கைப்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளாராம்.
Recommended Video

உத்தரவு
இறுதியாக, தேர்தலை எதிர்கொள்ள வசதியாக அனைத்து மாவட்டங்களுக்கும் மாநில தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணம் செய்ய முடிவெடுத்துள்ளாராம்.. இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காகத்தான், மதுரையில் நாளை அதாவது 10ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார் அண்ணாமலை.. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. அந்த வகையில், நாளை நடக்கும் கூட்டத்தில் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி செயல்திட்டம் வகுத்து கொடுக்கப்படுகிறது.. பாஜகவின் இந்த மூவ் மற்ற தமிழக கட்சிகளையும் உற்று நோக்க வைத்துவிட்டு வருகிறது..!
-
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
இந்த 7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தானா? ஒரே ஒருவர் பெயரில் மட்டும் வந்த விருப்பமனுக்கள்! -
சல்லி சல்லியா போகுதே என்டிஏ ஆசை.. டிடிவி தினகரன், அன்புமணி கறாரால் அதிரும் பாஜக! அமித்ஷா முடிவு என்ன -
அவினாசி எல்.முருகன், சாத்தூர் நயினார், பல்லடம் அண்ணாமலை.. கமலாலயத்தில் ரெடியான பாஜக வேட்பாளர் லிஸ்ட் -
அமித்ஷா ஒவ்வொரு முறையும் தமிழகம் வர முடியுமா? அதனால நாங்கள் டெல்லிக்கு போறோம்! என்ன தவறு? தினகரன் -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
அவிநாசியில் எல்.முருகன்..சிங்காநல்லூரில் அண்ணாமலை.. நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை..பரபரக்கும் கமலாலயம் -
ஐபிஎஸ் VS ஐபிஎஸ்.. பழனி தொகுதியில் அண்ணாமலை போட்டி? பாஜகவின் கையில் பெரிய பிளான் -
கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி!











Click it and Unblock the Notifications