ரிட்டயர் ஆகும் அரசு ஊழியர்கள்.. 8வது ஊதியக்குழுவின் பயன்களை பெற முடியுமா? வெளியான முக்கிய தகவல்!
சென்னை: 8வது ஊதியக்குழு அமலாக்கம் செய்யப்படுவது தள்ளிப்போய் கொண்டு இருக்கிறது. 2026 ஜனவரி 1ம் தேதி தொடங்கப்பட வேண்டிய ஊதியக்குழு தாமதமாக தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.
ஜனவரி 1ம் தேதி 8வது ஊதியக்குழு அமலாக்கம் செய்யப்படாத பட்சத்தில், ஏப்ரல் மாதம் செய்யப்படுகிறது என்றால்.. அந்த இடைப்பட்ட காலத்தில் ரிட்டயர் ஆகும் அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதியக்குழு பயன்கள் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதாவது ஜனவரிக்கு பின் 8வது ஊதியக்குழு அமலாக்கம் செய்யப்படும் முன் ஓய்வு பெறுபவர்களுக்கு அதன் பலன்கள் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பு வட்டாரங்கள் வெளியிட்ட தகவலில், ஜனவரி 1ம் தேதிக்கு பின் ஓய்வு பெற கூடிய எல்லா ஊழியர்களும் 8வது ஊதியக்குழுவின் கீழ்தான் பயன் பெறுவார்கள்.
8வது ஊதியக்குழுவின் கீழ் என்ன மாதிரியான பென்ஷன் திட்டங்கள், வசதிகள் இருக்கிறதோ.. அதன் அடிப்படையிலேயே அவர்களுக்கு பலன்கள் கிடைக்கும். புதிய விதிகள் அமல் ஆன பின் அந்த பலன்கள் அவர்களுக்கு கிடைக்கும் என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

ஊதியக்குழு உயரும்
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழுவில் வழங்கப்படும் வீட்டு லோன் கடன் புதிய உயரத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 7வது ஊதியக்குழுவின் கீழ் 25 லட்சம் வரை 7.44 சதவிகித வட்டியில் வழங்கப்படுகிறது. இது 30 லட்சத்திற்கு மேல் வீட்டு கடன் வழங்கப்படலாம். ஆனால் அதே வட்டி சதவிகிதம் நிலவும் என்று கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
8வது ஊதியக் குழு நியமனங்கள் தொடங்கிவிட்டன. 8வது ஊதியக் குழுவில் ஆலோசகர்கள் உட்பட 42 காலியிடங்கள் மற்றும் தலைவர் பதவியை நிரப்புவதற்கான செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளது, இது அடுத்த மாத இறுதியில் இவர்களின் நியமனம் பற்றிய அறிவிப்பு வெளியாகும். சிலரின் நியமனம் தேர்வாகி முடிந்துவிட்டது. ஆனால் எல்லோரின் நியமனம் முடிந்த பின்பே அறிவிப்பு வெளியாகும்.
8வது ஊதியக்குழு காரணமாக அரசு ஊழியர்களின் சம்பளம் பல மடங்கு உயரும். எந்த அளவிற்கு அரசு ஊழியர்கள் சம்பளம் உயரும் என்று இங்கே பார்க்கலாம்.
விடுமுறை அதிகரிக்கும்
அதேபோல் அரசு ஊழியர்கள் பல்வேறு வகையான விடுப்புகளை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள், அவற்றில் Paid Leave எனப்படும் ஈட்டிய விடுப்பு, பாதி சம்பள விடுப்பு மற்றும் தற்செயல் விடுப்பு ஆகியவை அடங்கும்.
குறிப்பாக, அவர்களுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு, 20 நாட்கள் பாதி சம்பள விடுப்பு (இதை மருத்துவ விடுப்பாக மாற்றலாம்) மற்றும் 8 நாட்கள் தற்செயல் விடுப்பு ஆகியவை வழங்கப்படும். கூடுதலாக, தேசிய, மாநில மற்றும் அரசிதழில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரபூர்வ விடுமுறைகள் என்று 19 விடுமுறை நாட்கள் அளிக்கப்படும்
மேற்கண்ட விடுமுறை அமைப்பு 7வது ஊதியக்குழுவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில்தான் புதிய உயர்வு மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. 8வது ஊதியக்குழுவின் கீழ் paid leave 35 ஆக உயரும் என்று கூறப்பட்டு உள்ளது. அதேபோல் பாதி சம்பள விடுப்பு 25 நாட்களாக உயரும் என்று கூறப்பட்டு உள்ளது. தற்செயல் விடுப்பு 10 ஆக அதிகரிக்கும் என்கிறார்கள். பல தனியார் நிறுவனங்கள் இந்த கொள்கையை பின்பற்றுவதால் அதே முறையை மத்திய அரசு கொண்டு வரலாம் என்கிறார்கள்.
8வது ஊதியக் குழுவில் பல்வேறு ஊழியர்கள் சங்கங்கள் வைத்த கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க போவதாக செய்திகள் வருகின்றன. அதாவது 18 அம்ச கோரிக்கைகளை பல ஊதிய குழுக்கள் சமீபத்தில் வைத்தன. இந்த கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொள்ள போவதாக செய்திகள் வருகின்றன.
ஊழியர்களின் சம்பளம் 180 - 210 சதவிகிதம் வரை உயரப்போகிறது. பென்சன் 100 சதவிகிதம் உயரப்போகிறது. அகவிலைப்படி பிட்மென்ட் காரணி 2.7 சதவிகிதத்திற்கு மேல் நிர்ணயிக்கப்படும். அரசு ஊழியர்களின் விடுமுறை தினங்கள் அதன் சலுகைகள் மாற்றப்படலாம். விடுப்பு காலத்திற்கான ஊதியத்தை கேஷ் செய்து கொள்ளும் விதிகள் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications