சென்னையை போல தென் மாவட்டங்களிலும் மழை பாதிப்பு இருக்குமா? ஓபனாக சொன்ன பாலச்சந்திரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடாமல் பெய்து வரும் மழையால் சென்னை மாதிரி தென்மாவட்டங்களும் ஆகுமா என்ற கேள்விக்கு தென் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் பதில் அளித்துள்ளார்.

வங்க கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இதையொட்டி நெல்லை உள்பட 4 மாவட்டங்களிலும் நேற்று அதிகாலை முதல் தற்போது வரை விடிய, விடிய மழை பெய்துகொண்டிருக்கிறது. இந்த மழை ஒரு நொடி கூட இடைவிடாமல் தொடர்ந்து பெய்து கொண்டே இருருக்கிறது.

will-the-southern-districts-also-be-affected-by-rain-like-chennai-balachandran-explains

பகல் முழுவதும் கன மழை கொட்டிக் கொண்டே இருந்தது. நெல்லை, தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மிக கன மழை பெய்தது. மணிமுத்தாறு அணை மற்றும் அருவியின் மேல் பகுதியில் அமைந்திருக்கும் தேயிலை தோட்ட பகுதிகளான மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து மற்றும் காக்காச்சி பகுதிகளில் 30 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்தது.

பாலச்சந்திரன் பேட்டி: தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிவாரணப் பணி மேற்கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து சேதங்களை தவிர்க்கவும் அரசு பல்வேஎறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் விடாமல் பெய்து வரும் மழையால் சென்னை மாதிரி தென்மாவட்டங்களும் ஆகுமா என்ற கேள்விக்கு தென் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

மழை பாதிப்பு என்பது அந்தந்த இடங்களையும் மழையையும் பொறுத்துதான் சொல்ல முடியும். அந்தந்த நகரங்கள் எப்படி உள்ளது. அதனுடைய பாதிப்புகள் என்பது வேறு.. மழையின் அளவைத்தான் நாம் கணிக்க முடியும். ஏனென்றால் சென்னை போன்ற பெரு நகரம் இல்லை அது. அதனுடைய நகர அமைப்ப்பை பொறுத்து பாதிப்பு அளவு இருக்கும். மழையை பொறுத்துவரை அதிகனமழையாக நாம் பார்த்து கொண்டு இருக்கிறோம்.

மழை அளவு: அதி கனமழை பெய்யும் போது அதற்கு உரிய பாதிப்புகள் ஏற்படட்க்கூடிய சூழ்நிலையை பார்க்கிறோம். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதை பார்க்கிறோம். தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுகிறது. தொலைத்தொடர்பு மற்றவைகள் எல்லாம் பாதிக்கப்படுவதை பார்க்கிறோம். அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதைத்தொடர்ந்து படிப்படியாக குறைந்து மிதமான மழை பெய்யும்.

பொதுவாகவே கடந்த 2,3 தினங்களாக தென்பகுதியில் மழை தொடர்ந்து கொண்டு இருப்பதை பார்க்கிறோம். அதிலும் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவ மழையை பொறுத்தவரை கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து தற்போது வரை 89 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இயல்பு அளவு 55 செ.மீட்டர். இயல்பை விட 25 செமீட்டர் அதிகம் பெய்துள்ளது. நெல்லையிலும் 70 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.

அரபிக்கடல் நோக்கி: 47 செ.மீட்டர் சராசரி அளவு. 51 சதவீதம் இயல்பைவிட அதிகம். தென்காசியில் 59 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 44 செ.,மீட்டர் சராசரி அளவு மழையாகும். 31 சதவீதம் மழை அதிகம் பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்திலேயே இயல்பை விட அதிக மழை பெய்துள்ளதை பார்க்கிறோம். அடுத்து வரும் தினங்களில் 2, 3 தினங்களுக்கு இந்த கனமழை தொடர்ந்து அதன்பிறகு படிப்படியாக குறையக்கூடிய சூழலை பார்க்கிறோம்.

வளிமண்டல சுழற்சி கிழக்கில் இருந்து மேற்காக மெதுவாக நகர்ந்து செல்லும் சூழலை பார்க்கிறோம். இலங்கைக்கு தென் பகுதியில் நேற்று இருந்தது. குமரிக்கடல் பகுதியில் உள்ளது. மாலத்தீவை நோக்கி லட்சத்தீவுகள்.. அரபிக்கடல் நோக்கி நகர்ந்து செல்லும். இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+