சத்தமே இன்றி சம்பவம் செய்யும் நாம் தமிழர்.. சின்னமே இல்லைனாலும்.. கவனிச்சீங்களா? அப்போ அதிமுக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் போய் மைக் சின்னம் வந்தாலும் கூட அந்த கட்சி நிர்வாகிகள் துவண்டு போகாமல் தீவிரமாக பணிகளை செய்து வருகின்றன.

சீமான் கட்சி கடந்த முறை போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம் இம்முறை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

Will the symbol change affect Naam Tamilar party in Tamil Nadu Lok Sabha election


கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 'கரும்பு விவசாயி' சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதி இருந்தார். அதேபோல் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து இருந்தார்.

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையே அறிவித்துவிட்டார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். விரைவில் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வேட்பாளர்கள் பெயருடன், கரும்பு விவசாயி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை முதல் கட்சியாக நாம் தமிழர் கட்சி தொடங்கிவிட்டது.

ஆனால் இப்படிப்பட்ட நேரத்தில்தான் அந்த கட்சியின் கரும்பு சின்னம் பறிபோய் உள்ளது. நாம் தமிழர் கட்சியின் அடையாளமாக கிட்டத்தட்ட மாறி இருந்த இந்த சின்னம் தற்போது கர்நாடகாவில் இருக்கும் கட்சிக்கு சென்றுவிட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் கூட, சீமானின் நாம் தமிழர் கட்சி என்பது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால், கரும்பு விவசாயி சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கி தர வேண்டும் என அக்கட்சியால் கோர முடியாது என கூறியுள்ளது.

சின்னம் போனாலும் கவலை இல்லை: ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் போய் மைக் சின்னம் வந்தாலும் கூட அந்த கட்சி நிர்வாகிகள் துவண்டு போகாமல் தீவிரமாக பணிகளை செய்து வருகின்றன. சின்னம் போனாலும் கவலை இல்லை என்று மைக் சின்னத்தை வைத்து அக்கட்சி பிரச்சாரம் செய்கிறது.

சின்னம் மாற்றம் காரணமாக நாம் தமிழருக்கு சிக்கல் இல்லை. கடந்த முறை எடுத்த 4 சதவிகித வாக்குகளிலுக்கு ஊறு ஏற்படாது. அது கண்டிப்பாக அப்படியே கிடைக்கும் என்று அக்கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிலவரம் என்ன?: நாம் தமிழர் கட்சி சில முக்கியமான தொகுதிகளில் கேம் சேஞ்சராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக எம்பி சீட்டுகளை பெறவில்லை என்றாலும் பல இடங்களில் இரண்டாம் இடம் பிடிக்க போகும் கட்சிகளை நாம் தமிழரே தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சமீபத்தில் சென்னை பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.

மொத்தம் 20 ஆண்கள், 20 பெண்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் சீமான் போட்டியிடாத நிலையில் பல முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

1. திருவள்ளூர் - மு.ஜெகதீஷ் சந்தர்,

2. வடசென்னை - டாக்டர் அமுதினி

3. தென் சென்னை - முனைவர் சு.தமிழ்ச்செல்வி

4. மத்திய சென்னை - முனைவர் இரா.கார்த்திகேயன்

5. திருப்பெரும்புதூர் - டாக்டர் வெ.ரவிச்சந்திரன்

6. காஞ்சிபுரம் (தனி) - வி.சந்தோஷ்குமார்

7. அரக்கோணம் - பேராசிரியர் அப்சியா நஸ்ரின்

8. வேலூர் - தி.மகேஷ் ஆனந்த்


9. தருமபுரி - டாக்டர் கா.அபிநயா

10. திருவண்ணாமலை - டாக்டர் ரா.ரமேஷ்பாபு

11. ஆரணி - டாக்டர் கு.பாக்கியலட்சுமி

12. விழுப்புரம் - இயக்குநர் மு.களஞ்சியம்


13. கள்ளக்குறிச்சி - இயக்குநர் ஆ. ஜெகதீசன்

14. சேலம் - டாக்டர் க. மனோஜ்குமார்

15. நாமக்கல் - க.கனிமொழி

16. ஈரோடு - டாக்டர் மு.கார்மேகன்

17. திருப்பூர் - மா.கி. சீதாலட்சுமி

18. நீலகிரி(தனி) - ஆ.ஜெயகுமார்

19. கோயம்புத்தூர் - ம. கலாமணி ஜெகநாதன்

20.பொள்ளாச்சி - டாக்டர் நா.சுரேஷ் குமார்

21. திண்டுக்கல் - டாக்டர் கைலைராஜன் துரைராஜன்

22. கரூர் - டாக்டர்ரெ.கருப்பையா

23. திருச்சி - ஜல்லிக்கட்டு ராஜேஷ்

24. பெரம்பலூர் - இரா. தேன்மொழி

25. கடலூர் - வே.மணிவாசகன்

26. சிதம்பரம் - ரா. ஜான்சி ராணி

27. மயிலாடுதுறை - பி.காளியம்மாள்

28. நாகப்பட்டினம் - மு.கார்த்திகா

29. தஞ்சாவூர் - ஹூமாயூன் கபீர்

30. சிவகங்கை - வி.எழிலரசி

31. மதுரை - முனைவர் மோ.சத்யாதேவி

32. தேனி - டாக்டர் மதன் ஜெயபால்

33. விருதுநகர் - டாக்டர் சி.கௌசிக்

34. ராமநாதபுரம் - டாக்டர் சந்திர பிரபா ஜெயபால்

35. தூத்துக்குடி - டாக்டர் ரொவினா ரூத் ஜேன்

36. தென்காசி - சி.ச. இசை மதிவாணன்

37. திருநெல்வேலி - பா.சத்யா

38. கன்னியாகுமரி - மரிய ஜெனிபர்

39. கிருஷ்ணகிரி - வித்யா வீரப்பன்

40. புதுச்சேரி - டாக்டர் ரா.மேனகா என மொத்தம் 40 பேர் போட்டியிட உள்ளனர்.


10 தொகுதிகள்: 2024 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் சில முக்கியமான தொகுதிகளில் கேம் சேஞ்சராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக எம்பி சீட்டுகளை பெறவில்லை என்றாலும் பல இடங்களில் இரண்டாம் இடம் பிடிக்க போகும் கட்சிகளை நாம் தமிழரே தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் சென்னை - முனைவர் சு.தமிழ்ச்செல்வி

அரக்கோணம் - பேராசிரியர் அப்சியா நஸ்ரின்

தருமபுரி - டாக்டர் கா.அபிநயா

கள்ளக்குறிச்சி - இயக்குநர் ஆ. ஜெகதீசன்

திருப்பூர் - மா.கி. சீதாலட்சுமி

நீலகிரி(தனி) - ஆ.ஜெயகுமார்

கோயம்புத்தூர் - ம. கலாமணி ஜெகநாதன்

திருச்சி - ஜல்லிக்கட்டு ராஜேஷ்

தஞ்சாவூர் - ஹூமாயூன் கபீர்

விருதுநகர் - டாக்டர் சி.கௌசிக்

இந்த 10 தொகுதிகளில் ஏற்கனவே திமுக - பாஜக - அதிமுக இடையே கடுமையான போட்டிகள் உள்ளன. இதில் நாம் தமிழர் கட்சிக்கும் சில இடங்களில் கணிசமான வாக்கு வங்கி உள்ளது.

இதனால் சில இடங்களில் முடிவுகளை தீர்மானிக்கும் கட்சியாகவும், சில இடங்களில் இரண்டாம் இடங்களை தீர்மானிக்கும் கட்சியாகவும் நாம் தமிழர் இருக்க போகிறது.

2019 தேர்தல்: திமுக கூட்டணி 53.15% திமுக 33.52% காங்கிரஸ் 12.61%. அதிமுக கூட்டணி 30.57% அதிமுக 19.39% பாஜக 3.66% பாமக 5.36% தேமுதிக 2.16% நாம் தமிழர் கட்சி 3.90% வாக்குகளை எடுத்தது.

நாம் தமிழர் வாக்கு ரீதியாக 4 சதவிகிதம் வரை வைத்து இருந்தாலும் சில இடங்களில் தனியாக முடிவுகளை மாற்றும் சக்தியாக உருவெடுக்க வாய்ப்புள்ள்ளது.

சாதகமான விஷயங்கள்;

அதிமுகவிற்கு சென்ற வாக்குகள் கட்சி பிளாவால் கொஞ்சம் நாம் தமிழர் பக்கம் செல்ல வாய்ப்புள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணி இல்லாததால் எதிர்க்கட்சி வாக்குகளை நாம் தமிழர் பிரிக்கும்

திமுக மீது நேரடி அட்டாக் காரணமாக திமுக அதிருப்தி வாக்குகள் சில நாம் தமிழருக்கு செல்லும்

சிறுபான்மையினர், தலித் மக்கள் சிலர் திமுகவிற்கு மாற்றாக நாம் தமிழரை கருதுவது சாதகமாக அமையும்.

பாதகமான விஷயம்:

கரும்பு விவசாயி சின்னத்தை இழந்தது.

சில தொகுதிகளில் வேட்பாளர்கள் அவ்வளவு பிரபலம் இல்லை.

தமிழ்கூட தெரியாத வெளிநாட்டில் வளர்ந்த வேட்பாளர்கள் பிரச்சனை.

புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் சிக்கல்.

கட்சிக்கு கரைப்பட கூடிய சில ஆடியோக்கள் சமீபத்தில் வெளியானது சிக்கலாக மாறலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+