காய்ச்சல் மருந்துக்கு கூட.. திண்டாட போகும் அமெரிக்கா மக்கள்.. இந்தியாவை சீண்டி.. மாட்டிய டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்து உள்ள வரிகள் 50% காரணமாக, அமெரிக்காவில் ஹெல்த்கேர் சிஸ்டம்.. அதாவது சுகாதாரத்துறை மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அவரின் வரிகள் சுகாதாரத்துறை ஏற்றுமதிக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் மீது மேலும் 25% கூடுதல் வரிகளை விதிப்பதாக அறிவித்து உள்ளார். நேற்று இரவு டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.

USA Donald Trump Visa

இந்த உத்தரவுக்குப் பிறகு, இந்தியப் பொருட்களுக்கான மொத்த வரி 50% ஆக உயரும். ஆரம்ப வரிகள் ஆகஸ்ட் 7 அன்று அமலுக்கு வரும் நிலையில், கூடுதல் வரி 21 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வரும். இது அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து இந்தியப் பொருட்களுக்கும் பொருந்தும்.

அமெரிக்கா வரி டிரம்ப் இந்தியா

அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்து உள்ளது. இதன் மூலம் இந்தியா நேரடியாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதிக்க உள்ள வரிகள் காரணமாக, அமெரிக்காவில் ஹெல்த்கேர் சிஸ்டம்.. அதாவது சுகாதாரத்துறை மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவிற்கு இந்தியாவின் மருந்துகள் வருடா வருடன் 300 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதோடு அங்கே பயன்படுத்தப்படும் 10 மருந்துகளில் ஒன்று இந்திய மருந்து ஆகும். தற்போது இதன் ஏற்றுமதி பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் அங்கே மருந்துகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. காய்ச்சல் மருந்துக்கு கூட மக்கள் அங்கே திண்டாடும் நிலை ஏற்படும்.

இந்தியா அமெரிக்காவிற்கு சிக்கல்

அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்து உள்ளது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் இதனால் 4 சதவிகிதம் ஏற்றுமதி சரிந்து உள்ளது என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த வருடம் மட்டும் சுமார் 7 பில்லியன் டாலர் சரிவு இந்தியாவிற்கு ஏற்படும் என்று இந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவிற்கு சிக்கல்

பரஸ்பர வரிகளை விதிக்கும் அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டத்தால் இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள்தான் அதிக ஆபத்துகளை சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் மார்கன் ஸ்டான்லி முதல் நோமுரா ஹோல்டிங்ஸ் இன்க் ஆகியோர் எச்சரித்து உள்ளனர்.

இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய இரண்டு நாடுகளும் அமெரிக்க மீது அதிக வரிகளை விதிக்கின்றன. 10-25 சதவிகிதம் வரை பல பொருட்கள் மீது இரண்டு நாடுகளும் அமெரிக்கா மீது விதிக்கின்றன. இப்போது பரஸ்பர விதிகள் காரணமாக இதே அளவிலான விதிகளை இந்தியா , தாய்லாந்து மீது அமெரிக்கா விதிக்கும். இப்போது 10%க்கும் கீழ்தான் இந்தியா , தாய்லாந்து பொருட்கள் மீது அமெரிக்கா விதிக்கிறது. அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியா விதிக்கும் சராசரி விகிதம், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கும் வரியை விட 10 சதவீத புள்ளிகளுக்கும் அதிகம் ஆகும்.

டிரம்ப்பின் விதி காரணமாக இந்தியா , தாய்லாந்து பொருட்கள் விற்பனை குறையும் . இதனால் இப்போதுதான் ஏற்றுமதியில் வேகம் எடுக்கும் இரண்டு நாடுகளும் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும். நாங்கள் மற்ற நாடுகளை சமமாக நடத்த விரும்புகிறோம், என்று டிரம்ப் எச்சரித்து உள்ளார். இறக்குமதி - ஏற்றுமதி வரியில் டிரம்ப் கண்டிப்பானவர். இந்தியா இறக்குமதி வரியை குறைக்கவில்லை என்றால்.. டிரம்ப் வரியை ஏற்றுவார். இதனால் இந்தியாவில் பொருட்கள் உயரலாம். .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+