ஓபிஎஸ் அதிரடி மூவ்.. எடப்பாடி பிளானுக்கு ‘முட்டுக்கட்டை’..? - புட்டுப் புட்டு வைக்கும் எக்ஸ்பர்ட்!
ஓபிஎஸ் தரப்பின் வழக்கால் எடப்பாடிக்கு சிக்கலா என விளக்குகிறார் வழக்கறிஞர் தமிழ்மணி.
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்துள்ள வழக்கால், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவதில் என்ன மாதிரியான சிக்கல் ஏற்படும் என விளக்குகிறார் மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி.
ஈபிஎஸ் அணியினர் பொதுச் செயலாளர் தேர்தலை அறிவித்து வேட்பு மனு தாக்கலை இன்றே தொடங்கிய நிலையில், ஓபிஎஸ் அணியினர் இந்த தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு நாளை அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது. இது எடப்பாடி பழனிசாமிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் என்றும் வாக்குப்பதிவு 26ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை 27ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறும் என்றும் அதிமுக தலைமைக் கழகம் சார்பில் தேர்தல் ஆணையாளர்களான நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டனர். அதன்படி இன்று எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

முடிசூடும் பழனிசாமி
இந்த தேர்தல் அறிவிப்பு வெறும் சம்பிரதாயம் தான் என்றும், எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வாவார் என்றும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதற்குச் சான்றாக இன்று 38 விருப்பமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்துமே எடப்பாடி பழனிசாமி பெயரிலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, வேறு யாரும் விருப்ப மனு தாக்கல் செய்யாத பட்சத்தில், எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி ஏகமனதாக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

ஓபிஎஸ் அணி வழக்கு
இதற்கிடையே, ஓபிஎஸ் அணி இந்த அறிவிப்பு செல்லாது எனத் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். விடுமுறை தினமான நாளை அவசர வழக்காக விசாரிப்பதற்கு பொறுப்பு நீதிபதி அனுமதி அளித்துள்ளார். இந்த மனுவை நாளை நீதிபதி குமரேஷ் பாபு விசாரிக்க உள்ளார்.

ஓபிஎஸ் அணி முன்வைக்கும் பாயிண்ட்
ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கிறார். பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருந்தாலும், பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் இருக்கின்றன. இதனால், இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் உறுப்பினர் அட்டை வழங்கி பொதுச் செயலாளர் தேர்தலை ஈபிஎஸ் தரப்பு நடத்த முடியாது என்கிறது ஓபிஎஸ் அணி.

செல்லாது செல்லாது
ஓபிஎஸ் அணியினர் இந்த தேர்தல் குறித்து கூறுகையில், "அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்டப்படி செல்லாது. தேர்தல் ஆணைய பிரமாண பத்திரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் என்றுதான் இன்றுவரை உள்ளது. உச்ச நீதிமன்றம் பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்று சொல்லவில்லை. இடைக்கால பொதுச் செயலாளர் என கையெழுத்திட்டு உறுப்பினர் அட்டை கொடுப்பது மோசடி" என்கின்றனர். இந்நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்துள்ள வழக்கு எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆவதை தடுக்குமா என்பது பற்றி வழக்கறிஞர் தமிழ்மணி பேசியுள்ளார்.

வழக்கால் பாதிப்பு இல்லை
வழக்கறிஞர் தமிழ்மணி பேசுகையில், "பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுமா செல்லாதா என்பதற்கு இறுதி தீர்ப்பு வரவேண்டும். ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் காரணத்திற்காகவே ஒன்றை செயல்படுத்தவோ, தேர்தலை நடத்தவோ கூடாது என்று சொன்னால், இந்தியாவில் எந்த வேலையும், எந்த தேர்தலும் நடக்காது. ஒரு வழக்கைப் போட்டு எல்லாவற்றையும் முடக்கி விடலாம். தடை விதிக்கப்படாத வரை எல்லா தேர்தலும் நடக்கலாம். அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கைப் பொறுத்தவரை தடை விதிக்கப்படவில்லை. எனவே, பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தடை இல்லை.

8 மாதங்களாகி விட்டது
பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த வழக்கில் தடை கிடைக்க வாய்ப்பு இல்லை. அதிகபட்சம், இந்த பொதுச் செயலாளர் தேர்தலில் யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அது இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று வேண்டுமானால் வரலாம். ஓ.பன்னீர்செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டு 8 மாதங்களாகிவிட்டது. ஓபிஎஸ் கட்சியிலேயே இல்லாத காரணத்தால் இந்த வழக்கில் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்பே இல்லை. பொதுக்குழு எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் இருக்கிறது. தொண்டர்கள் என் பக்கம் தான் என்றார் ஓபிஎஸ்.

சட்டச் சிக்கல் இல்லை
இப்போது தொண்டர்களின் வாக்குகள் அடிப்படையில் தேர்தலை நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி. எனவே, ஓபிஎஸ்ஸுக்கு வேறு வாய்ப்புகளே இல்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பு தேர்தல் ஆணையத்தைக் கட்டுப்படுத்தும். தேர்தல் ஆணையத்திற்கு, ஒரு கட்சியின் உட்கட்சித் தேர்தலுக்கு தடை விதிக்கும் அதிகாரம் இல்லை. உட்கட்சி விவகாரத்தில் கருத்துச் சொல்வதற்கோ, தலையிடுவதற்கோ தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக வருவதற்கு எந்தச் சட்டச் சிக்கலும் இல்லை.
-
ஓபிஎஸ்ஸின் Ex ஆதரவாளர்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தர்மர் எம்பிக்கு பதவி! அப்போ காளியம்மாளுக்கு? -
விஜய்யின் தவெகவுடன் கூட்டணியா? அண்ணாமலையுடன் என்ன பிரச்சனை? மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி -
பணக்காரர்களுக்கு மட்டுமே சீட்? ₹10 கோடிக்கு லீடர் தந்த ஷாக்? திமுக, அதிமுக, தவெக கடைசி நேர கண்டிஷன் -
"தவெக உடன் அதிமுக எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை”.. பட்டென சொன்ன எடப்பாடி பழனிசாமி -
விசித்திரமா இருக்கே.. தமிழ்நாட்டிற்கு தாமதமாக தேர்தல் ஏன்? தேர்தல் ஆணையம் வைத்த பெரிய ‘ட்விஸ்ட்’ -
30 ஆண்டு மரபு உடைந்தது! புதுச்சேரி, தமிழ்நாட்டிற்கு.. வேறு வேறு தேதிகளில் தேர்தல்! ஏன் இந்த மாற்றம்? -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் LIVE: ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு.. மே 4ம் தேதி ரிசல்ட் -
அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை இடம்? கூட்டணி கட்சிகளுடன் பேச குழு அமைத்த எடப்பாடி -
டெல்டாவில்.. முக்கிய தொகுதியிலேயே அடிவாங்கும் திமுக.. சிக்கலில் பெரிய மீன்! இவருக்கே இந்த நிலைமையா? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
முழு கண்ட்ரோல்.. இனி பவர் ஐஏஎஸ்கள் கையில்! இன்று முதல் தேர்தல் விதிகள் அமல்! MCC என்றால் என்ன?












Click it and Unblock the Notifications