இது சரியில்லையே.. திமுகவில் "கன்பியூஷன்".. இவங்க யாரு சுமதி? பாஜக வேற பாய ரெடியா இருக்கு: தென்சென்னை
சென்னை: தென்சென்னை தொகுதியின் திமுக வேட்பாளருக்கு, புதிய சிக்கல் ஒன்று ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.. என்ன காரணம்? என்ன நடந்தது?
தென்சென்னையில் மீண்டும் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் தமிழச்சி தங்கபாண்டியன்.. கவிதை, பேச்சாற்றல் என பன்முகை திறமையை கொண்டிருக்கும் இவரது இயற்பெயர் சுமதி ஆகும்.. தென்சென்னையில் நடக்க போகும் அந்த சிக்கலை பற்றி சொல்வதற்கு முன்பு, சுமதி எப்படி தமிழச்சி தங்கபாண்டியன் ஆனார்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்: ஒரு குட்டி ஃபிளாஷ்பேக் பார்ப்போம்.. முதல்வர் ஸ்டாலின் ஒருமுறை, தமிழச்சி தங்கபாண்டியன் வீட்டு திருமணத்தில் பேசும்போது, இந்த பெயர் விளக்கம் குறித்து பேசியிருக்கிறார். அதன் சுருக்கம்தான் இது:
"நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன் இயற்பெயர் சுமதி. அவர் சுமதியாக இருந்தபோது, கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
நெல்லை: 2007-ம் ஆண்டு திமுக இளைஞர் அணியின் முதல் மாநில மாநாடு நெல்லையில் நடத்தினோம். அந்த மாநாட்டிற்கு யார் தலைமை வகிப்பது? அந்த மாநாட்டை திறந்து வைப்பது? அதில் யார் யார் பங்கேற்பது? என்பதையெல்லாம் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் அடையாளம் காட்டி எங்களுக்கு குறித்து கொடுத்தார். அப்போது அந்த மாநாட்டின் கொடியேற்று விழா நிகழ்ச்சியை தங்கபாண்டியனின் மகள் சுமதியை அவர்களை அழைத்து நடத்துங்கள் என்று எங்களுக்கு உத்தரவிட்டார்.
அதற்கு அடுத்த நாள் எங்களை அழைத்து, "சுமதி என்று பெயர் அச்சிட வேண்டாம். நான் பெயர் சொல்கிறேன், அந்தப் பெயரைப் போட்டு விளம்பரப்படுத்துங்கள்" என்றார். அதற்கு பிறகு அவர்களை அழைத்து அனுமதி கேட்க சொன்னார்.
மாநாடு கொடி: அப்போது சுமதி அவர்களை அழைத்து, "தலைவர் நீங்கள் மாநாடு கொடியை ஏற்ற வேண்டும் என்று விரும்புகிறார். நீங்கள் ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அந்தப் பணிக்கு ஏதேனும் இடையூறு வந்துவிடுமா?" என்ற கேள்வியைக் கேட்டபோது, "நான் எந்த இடையூறைப் பற்றியும் கவலைப்படவில்லை. தலைவர் சொன்னதை அவ்வாறே நான் ஏற்றுக்கொள்கிறேன். உடனடியாக என்னுடைய பெயரைப் போடுங்கள். நான் மகிழ்ச்சியுடன் வந்து கலந்து கொள்கிறேன்" என்றார்.
அதற்குப் பிறகு அவர் ஒப்புக்கொண்டார் என்று தலைவரிடத்தில் சொன்னபோது, "நான் மகிழ்ச்சி அடைகிறேன். மிக மிக சந்தோஷப்படுகிறேன். அதே நேரத்தில் அவருடைய பெயரை மாற்றி தமிழச்சி தங்கபாண்டியன் என்று வெளியிடுங்கள்" என்று விளம்பரப்படுத்தச் சொன்னார்கள்.
சுவாரஸ்யம்: அதற்குப் பிறகுதான் அவர் தமிழச்சி தங்கபாண்டியனாக மாறினார்" என்று சுமதியாக இருந்தவர் தமிழச்சியாக மாறியதை சுவாரஸ்யத்துடன் அப்போது எடுத்து சொல்லியிருந்தார் ஸ்டாலின்.
எனினும், தேர்தலில் போட்டியிடுவது என்று வரும்போது, இந்த பெயரில் குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது.. கடந்த 2021ம் ஆண்டு, திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர், சென்னை ஹைகோர்ட்டில் ஒரு கேஸ் போட்டிருந்தார்.
வேட்பாளர்கள்: அவரது மனுவில், "மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரையே வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும். ஆனால், வாக்காளர் பட்டியலில் சுமதி என்ற பெயரில் இடம்பெற்றிருந்த தென்சென்னை திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், 2019 தேர்தலில், தனது வேட்பு மனுவில், சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது வேட்புமனுவைத் தேர்தல் அதிகாரி ஏற்றிருக்கக் கூடாது. அந்த மனுவில், திமுக எம்.பி.யின் பெயரை சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியன் என்பதை சுமதி என மாற்ற வேண்டும்" என கோரியிருந்தது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழச்சி தங்கபாண்டியன்: சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியன் என்றே பெயர் அச்சிடப்படுகிறது.. தேர்தல் விளம்பர போஸ்டரில் உள்ளது தமிழச்சி தங்கபாண்டியன் என்ற பெயர் அச்சடிக்கப்பட்டாலும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் சுமதி என்றே இருக்கும். இதுதான் தென்சென்னை தொகுதி மக்களுக்கு குழப்பத்தை தந்துவிடும் என்கிறார்கள்.
அதாவது, சின்னத்தை பார்த்து ஓட்டு போட்டால் திமுகவுக்கு சாதகம்தானாம்.. ஆனால், பெயரை பார்த்து ஓட்டளிக்க நேர்ந்தால், வீண் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதுகிறார்கள்.
புது குழப்பம்: கடந்த முறையே 2 பெயரையும் போட்டு பிரச்சினைக்குள்ளானது... இந்த முறை சுமதி என மட்டுமே போட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, இந்த பெயர் குழப்பத்துக்கு ஒரு முடிவு கட்டினால், தென்சென்னை தொகுதிக்கு மட்டுமல்ல, திமுகவுக்கும் லாபம்தான் என்கிறார்கள் உடன்பிறப்புகள்... பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி!












Click it and Unblock the Notifications