சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உண்மையிலேயே புலி வர போகுதா.. ஆட்சி கவிழ போகுதா.. ஸ்டாலின் முடிவெடுத்து விட்டாரா?

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    MK Stalin : ஸ்டாலின் இப்படி சொல்ல காரணம் என்ன?- வீடியோ

    சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமீப காலமாக பேசி வருவதைப் பார்த்தால், உண்மையிலேயே இந்த ஆட்சி கவிழ போகிறதா? அதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

    இந்த ஆட்சி விரைவில் கவிழும் என்று சமீப காலமாகவே ஸ்டாலின் சொல்லி வருகிறார். அதுவும் தேர்தலை சந்திக்காமலேயே விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்கிறார்.

    நேற்றுகூட மறைந்த விக்கிரவாண்டி எம்எல்ஏ ராதாமணியின் படத்தை, திமுக தலைவர் முக ஸ்டாலின் திறந்து வைத்து பேசினார். அப்போது, "சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தாமல் விட்டிருப்பது, புலி பதுங்குவது என்பது, பாய்வதற்காக தான், ஓடி ஒளிவதற்காக அல்ல" என்று தெரிவித்துள்ளார்.

    தமிழிசை சொன்னது பாயும் புலியை.. எச். ராஜா அதை சாப்பாட்டு புளியாக்கிட்டாரே.. ஏன் இந்த குழப்பம்?? தமிழிசை சொன்னது பாயும் புலியை.. எச். ராஜா அதை சாப்பாட்டு புளியாக்கிட்டாரே.. ஏன் இந்த குழப்பம்??

    தைரியம்

    தைரியம்

    ஸ்டாலின் இப்படி சொல்ல காரணம் என்ன? தேர்தல் பிரச்சார சமயங்களில் வாக்குகளை பெற இப்படி பேசலாம்.. பேசியும் இருக்கிறார். இன்னும் ஒன்றரை வருட ஆட்சி இருக்கும்நிலையில், எந்த தைரியத்தில் ஸ்டாலின் இப்படி கூறுகிறார் என்ற சந்தேகம் எழுகிறது.

    தங்க தமிழ்செல்வன்

    தங்க தமிழ்செல்வன்

    முதல் சந்தேகம், எம்எல்ஏக்களை பேரம் பேசும் விவகாரம் ஏதேனும் தொடங்கி உள்ளதா அல்லது தங்க தமிழ்செல்வன் விவகாரம் நடந்து முடிந்தவுடனேயே இந்த தெம்பு திமுகவுக்கு வந்துள்ளதா என்றும் தெரியவில்லை.

    அதிமுக நிர்வாகிகள்

    அதிமுக நிர்வாகிகள்

    இரண்டாவது சந்தேகம்,சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும்போதே ஆட்சி கவிழ்ப்பு நடக்கும் என்றால், அதிருப்தி எம்எல்ஏக்கள் திமுகவுக்கு ஆதரவு தர தயாராகி விட்டார்களா என்றும் புரியவில்லை. தாங்கள் அதிமுகவுக்குதான் ஆதரவு என்று சொல்லியும், நடந்து முடிந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்துக்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாததும் இந்த சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துவதாக உள்ளது.

    அடி போடுகிறதா

    அடி போடுகிறதா

    மூன்றாவது சந்தேகம்.. இப்போதைக்கு அதிமுகவின் தயவு பாஜகவுக்கு தேவைப்படாத பட்சத்தில், பெரும்பான்மை எம்பிக்களை பெற்றுள்ள திமுகவை அடுத்த தேர்தலை மனதில் வைத்து, கணக்கு போட்டு பாஜக தரப்பு ஏதேனும் அடி போடுகிறதா என்றும் தெரியவில்லை.

    உதயநிதி பேச்சு

    உதயநிதி பேச்சு

    நான்காவது சந்தேகம், 2 நாளைக்கு முன்னாடி போரூரில் வாக்காளர்களுக்கு நன்றி சொல்லும் கூட்டத்தில் பேசிய உதயநிதியும், "சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வலியுறுத்தப்படாது என்று தலைவர் கூறி உள்ளார். ஆனால் இந்த ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவார் என நினைக்கிறேன்" என்றார்.

    நம்பிக்கை இல்லா தீர்மானம்

    நம்பிக்கை இல்லா தீர்மானம்

    அப்படியானால் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை கொண்டு வந்து அதை நிறைவேற்றத் தேவையான அளவுக்கு அதிமுக தரப்பில் வாக்குகளை அதாவது எம்எல்ஏக்கள் ஆதரவை திமுக திரட்டி விட்டதா? அப்படி பெற்றுவிட்டால் அது டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களா? அல்லது அதிருப்தி எம்எல்ஏக்களா? விலைபோகும் எம்எல்ஏக்களா? .. நிறைய கேள்விகள் எழுகின்றன.. ஆனால் விடைதான் தெரியவில்லை.

    English summary
    There will definitely be regime change in Tamil nadu said DMK Leader MK Stalin in Vikkiravandi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X