"சப் ஜூனியர்".. 26ம் தேதி கச்சேரி இருக்கு.. பாஜக தலைவருக்கு போனை போட்ட விசிக புள்ளி.. ஹாட் கமலாலயம்
அண்ணாமலையுடன் விவாதிக்க விசிக நேரம் கேட்டுள்ளது
சென்னை: 24ம் தேதி உங்களை நேரில் சந்திக்க முடியுமா? என்று விசிக பிரமுகர் ஒருவர் அண்ணாமலைக்கு போனை போட்டு பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
கடந்த சில தினங்களாகவே, இளையராஜா கருத்து குறித்து சர்ச்சைகள் கிளம்பி வந்து கொண்டிருக்கும் நிலையில், அது தொடர்பான விவாதங்கள், கண்டனங்கள் பறந்து கொண்டிருக்கின்றன,.
ஒருவரை பாராட்டுவதும், புகழ்வதும் அவரவர் தனிப்பட்ட உரிமை என்றாலும், அம்பேத்கருடன் எப்படி மோடியை ஒப்பிடலாம்? என்ற பொதுப்படையான கேள்வியை பெரும்பாலானோர் இளையராஜாவிடம் எழுப்பி வருகிறார்கள்...

திருமாவளவன்
ஆனால், விசிக தலைவர் திருமாவளவன் மட்டும், இளையராஜா பாவம் என்று விடாமல் சொல்லி வருகிறார்.. காரணம், "சமூகத்தில் யார் மக்களோடு நெருக்கமாக இருக்கிறார்களோ, அவர்களை சந்திப்பது தான் ஆர்எஸ்எஸ்கார்களின் நோக்கம்... ஆர்எஸ்எஸ்காரர்கள் அப்படி இளையராஜாவை சுற்றிவளைத்து இருக்கக்கூடும்.. இளையராஜா போன்றவர்களை குறி வைப்பதே ஆர்எஸ்எஸ்ன் முக்கிய நோக்கம்... இளையராஜா பாவம்" என்று மிக நீண்ட விளக்கத்தை செய்தியாளர்களை சந்திக்கும்போதெல்லாம் சொல்லி வருகிறார்.

திருமா சுளீர்
திருமா இப்படி பேசியிருந்தது வழக்கம்போல் பாஜகவுக்கு டென்ஷனை ஏற்படுத்திவிட்டது.. இதுகுறித்து அண்ணாமலை பேசியபோது, "இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டதில் என்ன தவறு இருக்கிறது? ஆர்எஸ்எஸ் குறித்து அம்பேத்கர் கூறிய கருத்து தொடர்பாக என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க திருமாவளவன் தயாராக இருக்கிறாரா? நான் இதுவரை 2000 புத்தகங்கள் படித்துள்ளேன். அருந்ததியர் சமூகத்தில் மிகப்பெரும் தலைவரான வி.பி.துரைசாமி அம்பேத்கர் கொள்கையை பாஜக பின்பற்றுவதால்தான் பாஜகவில் இணைந்தார்" என்று சவால் விட்டிருந்தார்.

திருமாவளவன் பதிலடி
இந்த சவாலுக்கு திருமாவளவன் உடனடியாக பதிலடி தந்திருந்தார்.. "பெரியார், அம்பேத்கர் விமர்சனத்துக்கு உட்பட்டவர்கள் தான் என்றபோது மோடி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. மோடியின் அக்கறை எல்லாம் அதானி, அம்பானி மீது மட்டுமே. அவர் வறுமை ஒழிப்புக்கு என்ன செய்திருக்கிறார். அதனால் அவரை விமர்சிப்பதில் என்ன தவறு. விளையாட்டில் பல்வேறு படிநிலை உண்டு. ஜூனியர், சப் ஜூனியர் என்று அழைப்பார்கள். அதுபோல் அரசியலில் அண்ணாமலை ஒரு சப் ஜூனியர். அவருடன் விவாதிக்க விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து ஒரு சப்-ஜூனியரை வேண்டுமென்றால் அனுப்பி வைக்கிறோம்" நெத்தியடி பதிலை சொன்னார்.

நாராயணன் ட்வீட்
இதற்கு நடுவில், பாஜகவின் நாராயணன் திருப்பதியும், "அப்துல் நாசர் மதானியை சந்தித்த காரணத்தால், திருமாவளவன் பாவம் அல்ல. அம்பேத்கர் செய்ததையும் பிரதமர் மோடி செய்ததையும் ஆதாரப்பூர்வமாக எடுத்து வைத்து விவாதிக்க நான் தயார், அதற்காக அண்ணன் திருமாவளவனை அழைக்கிறேன்... அவர் சொல்லும் இடத்தில் அவர் சொல்லும் நேரத்தில் விவாதிக்கலாம் என்று சவால் விடுத்திருந்தார்..

வன்னியரசு
ஆனால், இதற்கு விசிகவின் பொதுச்செயலாளர் வன்னியரசு சுளீர் என ஒரு ட்வீட் போட்டார். அதில், "புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து விவாதிப்பதற்கு முன் #இந்துமதத்தின்புதிர்கள் (Riddles in Hinduism) நூலை தங்களிடம் கொடுத்து அதில் 10 பக்கம் மட்டும் படித்து காட்ட விரும்புகிறோம். நாளை கமலாலயத்தில் இருந்தால் நேரம் கொடுக்க இயலுமா?" என்று அண்ணாமலையிடம் வன்னியரசு கேள்வி எழுப்பியதுடன், அண்ணாமலையையும் அந்த ட்வீட்டில் டேக் செய்திருந்தார்.

சங்கத்தமிழன்
இப்படி புகைந்து கொண்டிருக்கும் நிலையில், விசிகவின் முக்கிய நிர்வாகி சங்கத்தமிழன், அண்ணாமலைக்கு போனை போட்டு நேரடியாகவே பேசிவிட்டார்.. அவர் போனில் பேசிய வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அதில் பேசிய சங்கத்தமிழன், '' 24ம் தேதி உங்களை நேரில் சந்திக்க முடியுமா? நேரில் விவாதம் செய்ய வேண்டும்.. அதற்குள் அம்பேத்கரின் தொகுப்பு நம்பர் 8 என்ற புத்தகத்தை படித்து வைத்திருங்கள்" என்று கூறுகிறார்.

நேரடி விவாதம்
அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, '' நான் ஏற்கெனவே அம்பேத்கரின் புத்தகத்தை படித்திருக்கிறேன்.. 24ம் தேதி பிஸியாக இருக்கிறேன்.. 26ம் தேதி நேரில் சந்திக்கலாம்" என்று சொல்கிறார்.. இந்த ஆடியோ & வீடியோதான் அரசியல் களத்தில் பரபரப்பாக ஷேர் ஆகி வருகிறது.. ஆக மொத்தம், இரு தரப்பிலும் விவாதத்துக்கு அழைத்து கொண்டிருக்கிறார்களே தவிர இன்னும் உட்கார்ந்து விவாதம் நடத்தியபடி தெரியவில்லை.. 26ம் தேதி நாள் குறித்திருப்பதால், அன்றைக்காவது இவர்களின் நேரடி விவாதம் நடக்குமா என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின்












Click it and Unblock the Notifications