உள்ளதும் போச்சா? சொல்ல சொல்ல கேட்கலயே.. பாஜகவுடன் வாசன் கூட்டணி.. இப்ப த.மா.கா.வுக்கே வாய்ப்பூட்டு?
சென்னை: 2024 மக்களவை தேர்தலில் கிடைத்த, அதிர்ச்சி தோல்வியிலிருந்து தமாகா இன்னும் மீளவில்லை போல் தெரிகிறது. இதுகுறித்த பிரத்யேகமான செய்தி ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின்போது, அதிமுகவுடன் கூட்டணி வைப்பதா? பாஜகவுடன் கூட்டணி வைப்பதா? என்பதை முடிவுசெய்ய முடியாமலேயே இருந்தார் தமாகா தலைவர் ஜிகே வாசன்..

தமாகா கூட்டணி: ஆனால், பாஜக, அதிமுக இரு தரப்பையும் சமாதானம் செய்ய எடுத்துக்கொண்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில், இறுதியில் பாஜகவுடனேயே தமாகா கூட்டணி என்று அறிவித்துவிட்டார்.
இதைக்கேட்டு தமாகா நிர்வாகிகளே அதிர்ச்சியாகிவிட்டனர். பாஜகவை காலம் காலமாக கடுமையாக எதிர்த்து அரசியல் செய்யும் தமாகா, பாஜகவுடனேயே இணைந்து கொள்வதா? என்று தமாகா நிர்வாகிகள் பலர் அதிருப்தி அடைந்தனர்.
எடப்பாடி பழனிசாமி: இதனிடையே எடப்பாடி பழனிசாமியும் வாசனிடம், "அதிமுக கூட்டணியில் எங்களுடன் இருங்கள்" என்று பேசினாராம்.. எனினும், மத்தியில் மீண்டும் பாஜகதான் ஆட்சிக்கு வரும் என நினைத்தும், பல்வேறு கணக்குகள் போட்டுப்பார்த்தும், எடப்பாடியுடன் செல்லாமல் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டார் ஜிகே வாசன்...
பாஜக கூட்டணியில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், டிடிவி தினகரன் தினகரன் போன்றோருக்கெல்லாம் 1 சீட் மட்டுமே தந்தநிலையில், வாசன் மட்டும் 3 சீட்டை பெற்று, மூன்றிலுமே தோற்று போனது தமாகா... ஒருவேளை அதிமுகவுடன் தமாகா கைகோர்த்திருந்தால், நிலைமை இந்த அளவுக்கு மோசமாகியிருக்காது என்று தமாகா நிர்வாகிகளே தேர்தல் ரிசல்ட்டின்போது புலம்பி தள்ளிவிட்டார்களாம்.
மோடி அமைச்சரவை: இதற்கு பிறகு, மோடியின் 3வது மத்திய அமைச்சரவையில் தனக்கு இடம் கிடைக்கும் என எவ்வளவோ எதிர்பார்த்தார் வாசன். ஆனால், அது நடக்கவில்லை. இதனால், வாசனுடன் இருக்கும் கொஞ்சநஞ்ச த.மா.கா.வினரும், இனியும் இலவு காத்த கிளி மாதிரி அமைச்சர் பதவிக்கு தலைவர் காத்திருக்கக்கூடாது என வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துவிட்டார்களாம்.
இப்போது ஜிகே வாசனுக்கும், சீச்சீ... இந்த பழம் புளிக்கும் என்கிற சலிப்பு பாஜக மீது வர துவங்கிவிட்டதாம். ஆனாலும் அதனையெல்லாம் வெளிக் காட்டிக்கொள்ளாமல், கட்சியின் செயற்குழுவை கடந்த வாரம் நடத்தியிருக்கிறார் வாசன். ஆனால், இந்த கூட்டம் குறித்து எந்த பரபரப்பும் ஏற்படவில்லை, பலருக்குமே தெரியவில்லை..
கண்ணோட்டம்: இந்த கூட்டத்தில் பேசிய அனைவருமே பாஜகவுடன் கூட்டணி வைத்தது தவறு என்கிற கண்ணோட்டத்திலேயே கருத்துக்களை தெரிவித்தார்களாம்.. அத்துடன், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும், அதற்கான நட்புறவை இப்போதிலிருந்தே மெல்ல மெல்ல துவக்க வேண்டும் என்றும் வாசனிடம் சொன்னார்களாம்..
அதற்கு வாசன், "அதிமுகவுடன் மீண்டும் எப்படி பேசுவது என யோசிக்க வேண்டியதிருக்கிறது. இருப்பினும் கூட்டணி குறித்து இப்போதே சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம். தேர்தல் சமயத்தில் விவாதிக்கலாம், அப்போது விரிவாக பேசலாம்" என்று கட்சியினருக்கு வாய்ப்பூட்டு போட்டுவிட்டாராம் தமாகா தலைவர் ஜி கே வாசன்.
-
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications