தமிழக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலுக்கு சான்ஸே இல்லை!??
சென்னை: தமிழக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன. அந்தத் திட்டத்தை பாஜக கைவிட்டுள்ளதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.
லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளது. அத்தோடு சேர்த்து தமிழக சட்டசபைக்கும் முன்கூட்டியே தேர்தல் நடத்தலாம் என்ற ஒரு பேச்சு நீண்ட மாதங்களாக அடிபட்டு வந்தது. குறிப்பாக ஜெயலலிதா மறைந்த சில மாதங்களிலேயே இந்தப் பேச்சு கிளம்பி விட்டது.
லோக்சபா தேர்தல் வரைதான் தமிழக அரசு நீடிக்கும். லோக்சபா தேர்தலோடு, தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
[அலைமகளும்.. கலைமகளும்.. கொலுவிருக்கும் ராத்திரி... நவராத்திரி.. சுப ராத்திரி!]

தேர்தல் தள்ளிப் போகும்
தமிழக சட்டசபைக்கு தேர்தல் தள்ளிப் போகும் என்று சொல்கிறார்கள். அதாவது முழு பதவிக்காலத்தையும் இந்த சட்டசபை முடிக்காது. அதேசமயம், லோக்சபா தேர்தலோடு சேர்த்தும் தேர்தல் நடைபெறாது. லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு சில மாதங்களிலேயே தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் என்றும் சொல்கிறார்கள்.

ஏன் இந்த முடிவு
ஏன் இந்த திடீர் மாற்றம் என்று தெரியவில்லை. ஆனால் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்பது ஒரு காரணமாம். காரணம் தமிழகத்தில் முதுபெரும் அரசியல் தலைவர்கள் யாரும் இல்லாத இந்த நேரத்தில் சரியான முறையில் திட்டமிட்டு செயலாற்றி துல்லியமாக வெற்றியைப் பறிக்க பாஜக தலைமை தீவிரமாக உள்ளது, கவனமாகவும் உள்ளது.

இரு தேர்தலும் தேவையில்லை
எனவே இரு தேர்தலையும் ஒரே நேரத்தில் வைத்தால் குழப்பம் ஏற்படும், போட்டிகளும் கடுமையாக இருக்கும். கவனம் சிதறும் என்பதால் லோக்சபா தேர்தலோடு தமிழக சட்டசபைத் தேர்தலை இணைக்க வேண்டாம் என்று டெல்லி வட்டாரம் நினைக்கிறதாம். இதனால்தான் சட்டசபைத் தேர்தல் தள்ளிப் போகும் என்று கூறுகிறார்கள்.

ரஜினிக்கு அப்பாடா
இப்படி தேர்தல் தள்ளிப் போவதால் ரஜினி தரப்பு மிகவும் ரிலாக்ஸ் ஆகியுள்ளதாம். காரணம், இன்னும் தேர்லை சந்திக்கும் அளவுக்கு அவர்கள் தயாராகவில்லை. கட்சி இன்னும் தொடங்கவில்லை. மன்ற அளவில்தான் உள்ளது. அதிலும் கூட ஏகப்பட்ட குழப்பங்கள். நிர்வாகிகள் மாற்றம் என்று உழன்று கொண்டுள்ளதால், இரு தேர்தலையும் சந்திக்க ரஜினிக்கு தயக்கம் உள்ளதாம். தேர்தல் தள்ளிப் போனால் சற்று பரவாயில்லை என்று அவர் நினைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கமல் ஹேப்பி அண்ணாச்சி
அதேசமயம், கமல் ஹாசன் தரப்பு எந்த மாதிரி தேர்தல் வந்தாலும் சரி ஒரு கை பார்த்து விடுவது என்று உற்சாகமாக காத்திருக்கிறதாம். கமல் போகும் இடமெல்லாம் நல்ல கூட்டம் வருவதாலும், மக்கள் ஆர்வத்துடன் அவர் பேசுவதைக் கேட்பதாலும், கட்சிப் பெயர் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆகி விட்டதாலும், நிச்சயம் வரும் தேர்தலில் மகத்தான வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கமல் உள்ளாராம்.
பார்க்கலாம் யார் கணக்கு பலிக்கப் போகிறது என்று.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications