இதான் திமுக.. இவ்வளவு தொகுதிகளில் போட்டியா?.. பாஜகவுக்கு வெறும் 3 தானாமே.. அப்ப கூட்டணி..?
திமுக, அதிமுக உள்ளாட்சி தேர்தலுக்கான வேலைகளில் மும்முரமாகி வருகின்றது
சென்னை: தமிழகத்தில் அடிக்கடி மிரட்டி விட்டு போகும் மழை, ஒமிக்ரான் தொற்று ஒழிப்பு, என பல்வேறு பிரச்சனைகளில் திமுக அரசு தீவிரம் காட்டி வந்தாலும், மிக முக்கியமான ஒரு விஷயம் கட்சிக்குள் சைலண்ட்டாக நடந்து வருகிறதாம்.. விடுமா அதிமுக? அந்த கட்சியும் தன் பங்குக்கு பட்டைய கிளப்ப ஆரம்பித்துவிட்டது.. எல்லாம் உள்ளாட்சி தேர்தல் பற்றின விஷயம்தான்..!
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது.
ஜனவரி 31-ந்தேதிக்குள் இந்த தேர்தலை நடத்துமாறு சுப்ரீம்கோர்ட்டும் ஏற்கனவே கெடு விதித்துள்ளதால் அனேகமாக பொங்கலையொட்டி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக
இதையொட்டி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்களிடம் ஒவ்வொரு கட்சியிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.. அந்த வகையில், திமுக, அதிமுக கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.. இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த திமுகவினரிடம் நேர்காணலை நடத்தி வருகிறார்கள் திமுக மாசெக்கள்.. இன்று சென்னையில் மாவட்ட அலுவலகங்களில் சத்தமில்லாமல் நேர்காணலும் துவங்கியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
இதையடுத்து, அதிமுகவும் படுபிஸியாகிவிட்டது.. பேச்சுவார்த்தையையும் ஆலோசனையையும் முக்கிய தலைவர்கள் நடத்தி வருகிறார்கள்.. தேர்தல் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோரிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தி உள்ளார்.. அப்போது, முனுசாமியும், சிவி சண்முகமும், 90-95 சதவீத இடங்களில் திமுக போட்டியிட திட்டமிட்டுள்ளதால், நாமும் அப்படியே போட்டியிடலாம், ஆனால் வழக்கம்போல் பாஜகவுக்கு அள்ளி தந்துவிட்டால், அங்கெல்லாம் திமுக ஜெயித்து விடும்... நமக்குதான் கஷ்டம்.. அதனால், 3 சதவீத இடங்களை பாஜகவுக்கு விட்டுத்தரலாம்... அதுக்கு ஒத்து வரவில்லையெனில் தனித்து போட்டியிடுவோம்" என்று சொல்லி உள்ளனராம்.

கமலாலயம்
இதுதான் அதிமுக கூட்டணிக்குள் புயலை வீச ஆரம்பித்துள்ளது.. இதுகுறித்து பாஜக தரப்பில் விசாரித்தபோது அவர்கள் சொன்னதாவது: "அதிமுக கூட்டணியில் எங்களை தவிர வேறு பிரதான கட்சிகள் எதுவும் கிடையாது. அந்த வகையில், 25 சதவீத இடங்களை அதிமுகவிடமிருந்து எங்கள் தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்... குறிப்பாக சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் இருக்கின்றன. இதில் 50 வார்டுகளை பாஜக கேட்கிறது. இதற்கு ஒப்புக்கொண்டால் கூட்டணி தர்மம் ஆரோக்கியமாக இருக்கும். அதிக இடங்களில் போட்டியிடும் போதுதான் அதிக இடங்களில் ஜெயிக்க முடியும் என்ற கணக்கீட்டின் படி 25 % இடங்களை கேட்கிறது பாஜக" என்கிறார்கள் கமலாலய நிர்வாகிகள்.

கூட்டணி
இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.. சமீப காலமாக நடந்து முடிந்த தேர்தல்களில் பாஜகவுடனான கூட்டணியால்தான், அதிமுகவுக்கு வெற்றிவாய்ப்புகள் சரிவர கிடைப்பதில்லை என்ற பேச்சு உள்ளது.. இதை அதிமுக சீனியர் தலைவர்களே பல முறை வெளிப்படையாக சொல்லி உள்ளனர்.. இப்போதும் அப்படியான எண்ணங்களும், கருத்துக்களும் அதிமுகவுக்குள் இருக்கத்தான் செய்கின்றன.. பாஜக இல்லாமல் தனித்து போட்டியிடும் அளவுக்கு அதிமுக இன்றும் வலிமை பொருந்தியே இருக்கிறது என்பதை மறுக்க முடியாது..

ஒரே நாடு ஒரே தேர்தல்
ஆனால், அதேசமயம் பாஜகவை பகைத்து கொள்ள அதிமுக மேலிடம் தயாராக இருக்குமா? என்ற கேள்வியும் எழுகிறது... காரணம், மத்திய அரசின் முக்கிய அறிவிப்பான, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடிவுக்கு வரும்" என்று சொல்லி கொண்டே இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. அதாவது, ஒரே நேரத்தில் பாராளுமன்றத்திற்கும் அனைத்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் இதனால் கோடிக்கணக்கான பணம் மிச்சமாகும் என்றும் மத்திய அரசு தெரிவித்ததை சமீப காலமாக எடப்பாடி பழனிசாமியும் சொல்லி வரும் நிலையில், பாஜகவை தவிர்த்து போட்டியிட அதிமுக தயாராகுமா என்பது சந்தேகம்தான்.

கூட்டணி
ஆனால், இவ்வளவு பேசும் பேச்சும் தமிழக பாஜக, தனித்து நிற்க தயார், 60 இடங்களில் வென்று காட்டுவோம் என்று சொல்கிறதே தவிர, இதுவரை தனித்து போட்டியிட்டது கிடையாது என்ற விமர்சனம் தமிழகத்தில் இருக்கவே செய்கிறது.. இந்த முறையும் தமிழக பாஜக தனித்து போட்டியிட போவதாக சொல்லப் போகிறதா? அல்லது கூட்டணி தலைமை எவ்வளவு சீட் தருகிறதோ அதை பெற்றுக் கொள்ள முன்வருமா? அல்லது டிமாண்ட் வைக்குமா? என்றெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்.
-
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி












Click it and Unblock the Notifications