Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 "தாமரைகள்".. மேட்டரை கையில் எடுத்த அமித்ஷா.. "பச்சை கொடி" காட்டிட்டாராமே.. திமுகதான் முதல் குறியே

தமிழகத்தில் 5 இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்றாராம் அமித்ஷா

Subscribe to Oneindia Tamil

சென்னை : வரப்போகும் எம்பி தேர்தலுக்கு தமிழக பாஜக இப்போதே தயாராகி உள்ளது.. அதற்காக 2 விதமான அதிரடிகளையும் கையில் எடுத்துள்ளது..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவின் எழுச்சி பாஜகவுக்கு, பெருத்த நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்து வருகிறது.

இந்த ரிசல்ட் வந்தபோதே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு போனை போட்டு பிரதமர் மோடி. பேசியதாக தகவல்கள் கசிந்தன.

 போன் போட்ட மோடி

போன் போட்ட மோடி

"எப்போதுமே தனித்து போட்டியிட்டால் தான், ஒவ்வொரு கட்சியின் முழுமையான பலம் தெரியும்... அப்போதுதான், அடுத்தடுத்த தேர்தல்களில் நம்மை பலப்படுத்தி கொள்ள, தேர்தல் வியூகங்களை அமைத்து கொள்ள முடியும்.. அடுத்த தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டாம்.. இப்போதுள்ள நிலைமையே தொடருங்கள்.. ஆனால் எம்பி தேர்தலில் கவனம் செலுத்துங்கள்" என்று அப்போது அண்ணாமலைக்கு அட்வைஸ் தந்திருந்தாராம்.

 2 வியூகங்கள்

2 வியூகங்கள்

இதற்கு பிறகு, தமிழக பாஜக துணிச்சலாக 2 விதமான வியூகங்களை கையில் எடுத்தது.. ஒன்று அதிமுகவை முந்திக் கொண்டு, திமுகவுக்கு டஃப் தருவது, மற்றொன்று, மாற்று கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை தன்பக்கம் இழுக்க தூண்டில்போடுவது என அடுத்தடுத்த நடவடிக்கையில் இறங்கியது... அதற்கேற்றபடி, முதலில் கண்ணில் சிக்கியது மதிமுகதான்.. சமீப காலமாகவே அக்கட்சியில் வாரிசு அரசியல் குறித்த அதிருப்திகள், குழப்பங்கள் ஏற்பட்டு வரவும், அந்த கட்சி பக்கம் தன் பார்வையை வீசியது பாஜக..

 விஜயகாந்த் தேமுதிக

விஜயகாந்த் தேமுதிக

திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்களை எப்படி தன் பக்கம் இழுக்க முயன்றுவருகிறதோ, அதுபோலவே மதிமுகவிடமும் தீவிரத்தை கையில் எடுத்துள்ளது.. அத்துடன், தேமுதிக, பாமகவில் உள்ள அதிருப்தியாளர்களையும் குறி வைத்து வருகிறது... இதற்கு காரணம், தென் மாவட்டங்களில் நாடார், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினரின் ஆதரவை பாஜக ஏற்கனவே ஓரளவு பெற்றுள்ள நிலையில்தான், வடமாவட்டத்திலும் செல்வாக்கை பெற முயன்று வருகிறது..

 வடமாவட்டங்கள்

வடமாவட்டங்கள்

அதனால்தான், வடமாவட்டங்களில் சமீபகாலமாகவே செல்வாக்கை இழந்து கொண்டிருக்கும் தேமுதிக, பாமக கட்சிகளின் அதிருப்தி தலைகளுக்கு வலைவீசப்பட்டு வருகிறதாம். இதுபோன்ற வியூகங்களை பாஜக கையில் எடுத்து வரும்நிலையில்தான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு என்ட்ரி தந்தார்.. முதலில் அவர் கவர்னர் மாளிகையில் தங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆவடியில் தங்கினார்...

 அமித்ஷா

அமித்ஷா

அங்கு நடந்த முக்கிய சமாச்சாரம்தான் தற்போது ஓரளவு கசிந்து வருகிறது.. அங்கு சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளனர் அண்ணாமலையும், சில முக்கிய மாநில நிர்வாகிகளும்... அப்போது அவர்களிடம் தமிழக நிலவரம் குறித்து நீண்ட நேரம் அமித்ஷா ஆலோசனை நடத்தியிருக்கிறார்.. சமீபகாலமாக நடந்த அரசியல் மாற்றங்கள், பாஜக ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தெல்லாம் காதுகொடுத்து கேட்டுள்ளார்.

 சீக்ரெட் பேச்சு

சீக்ரெட் பேச்சு

இறுதியாக அவர்களிடம் "பாஜவுக்கு திமுகதான் நம்பர் ஒன் எதிரி.. அதனால் தமிழக அரசை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டும்.. இதற்கு பாஜக தலைமை முழு ஆதரவு தரும்" என்று பச்சை கொடி காட்டி நம்பிக்கை தந்தாராம் அமித்ஷா... அதுமட்டுமல்ல, என்ன செய்வீங்களோ தெரியாது, வரப்போகும் எம்பி தேர்தலில் தமிழகத்தில் குறைந்தது 5 தொகுதிகளிலாவது பாஜக வெற்றி பெற வேண்டும் என்று கண்டிஷன் போட்டாராம்..

 5 தாமரைகள்

5 தாமரைகள்

இப்படித்தான் கடந்த முறை எம்பி தேர்தலின்போதும் அமித்ஷா, தமிழகத்தில் தாமரையை எப்படியாவது மலர வையுங்கள் என்று சொல்லிவிட்டு போனார்.. ஒரு தாமரைகூட மலரவில்லை.. இந்த முறை 5 தாமரை என்பதால், எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.. கடந்த சட்டமன்ற தேர்தலின்போதுகூட, 5 தாமரைகள் மலர வேண்டும் என்று அமித்ஷா சொல்லியிருந்தார்.. அதை கணக்கு செய்துதான், மற்ற தொகுதிகளைவிட, குறிப்பிட்ட 5 தொகுதிகளில் மட்டும் பாஜக கூடுதல் செலவுகளை ஏற்று, பிரச்சாரங்களில் தனிக்கவனம் செலுத்தியது..

 5 தாமரை மலருமா?

5 தாமரை மலருமா?

அந்த 5 தொகுதிகளிலுமே ஸ்டார் வேட்பாளர்களை களமிறக்கியது.. அந்த 5 தொகுதிகளுக்குமே பாஜக மேலிட தலைவர்கள் மறக்காமல் வந்து பிரச்சாரம் செய்துவிட்டு வாக்கு கேட்டு போனார்கள்.. இது முழுமையான பலன் தரவில்லை என்றாலும், ஓரளவு பலனை பெற்று தந்தது.. இதை மனதில் வைத்து, இந்த முறையும் 5 எம்பிக்கள் என்பது தமிழக பாஜகவுக்கு வைத்துள்ள சவாலாக பார்க்கப்படுகிறது.. வரப்போகும் எம்பி தேர்தலில் 5 தாமரைகள் மலருமா? அல்லது கருகுமா? தெரியவில்லை.. பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+