0.90 சதவீதம் வாக்கு வங்கி வைத்துள்ள டிடிவி தினகரன்.. அதிமுக-பாஜக கூட்டணிக்கு உதவுவாரா?
சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பார்கள். அதுபோல நேற்று வரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து வந்த, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் அதிமுக - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார்.
அவரின் வருகை அந்தக் கூட்டணியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும், கடந்த காலங்களில் தினகரன் கட்சி பெற்ற வாக்கு சதவீதம் எவ்வளவு என்று பார்க்கலாம்.
சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை புரியவுள்ளார். அதற்குள் அதிமுக - பாஜக கூட்டணியை இறுதி செய்யும் பணியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஈடுபட்டுள்ளது. மத்திய அமைச்சரும், பாஜக தமிழ்நாடு பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தமிழ்நாடு வந்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் தினகரன்
சமீபத்தில் அன்புமணி தலைமையிலான பாமகவினர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்திருந்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியிருந்தனர். தினகரன் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து வந்தார்.
அவர் இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என்று கூறி வந்தார். இந்நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் இன்று மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார் தினகரன். தமிழ்நாட்டின் நலனுக்காக பங்காளி சண்டையை ஓரங்கட்டிவிட்டோம். விட்டுக் கொடுப்பதால் கெட்டுப் போக மாட்டோம் என்றும் தினகரன் கூறியுள்ளார்.
அமமுக வாக்கு சதவீதம்
தினகரனை தங்களின் கூட்டணியில் வரவேற்று எடப்பாடி பழனிசாமியும் பதவி போட்டுள்ளார். தினகரன் வருகை அந்தக் கூட்டணிக்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பேசு பொருளாக உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் டி.டி.வி தினகரன் கை ஓங்க தொடங்கியது. 2017ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு அதிமுக, திமுக இருவரையும் வீழ்த்தி தினகரன் வெற்றி பெற்றார்.
முன்னதாக 2016 தேர்தலில் ஜெயலலிதா 39,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் (ஜெயலலிதாவை விட அதிக வாக்குகள்) வெற்றி பெற்று கவனம் ஈர்த்தார். சுமார் 50.32 சதவீதம் வாக்குகளை பெற்றார். 2018 ஆம் ஆண்டு அவர் அமமுக கட்சியை தொடங்கினார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் முதல்முறையாக தேர்தலை சந்தித்தனர்.
படிப்படியாக சரிவு
தனித்து போட்டியிட்ட அமமுக 5.38 சதவீதம் வாக்கை பெற்றது. 2021 சட்டமன்ற தேர்தலில் அமமுக - தேமுதிக கூட்டணி அமைத்து சந்தித்தனர். அந்தத் தேர்தலில் அமமுக 2.3 சதவீதம் வாக்கை பெற்றார்கள். அப்போது சிட்டிங் அமைச்சரான கடம்பூர் ராஜூவை எதிர்த்து கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டு, தினகரன் தோல்வியடைந்தார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்டோர் விலகி திமுகவில் இணைந்தனர்.
பிறகு பாஜகவுடன் நெருக்கம் காட்ட தொடங்கினார் தினகரன். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக போட்டியிட்டது. அதில் அமமுக 0.90 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்றது. தேனி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ் செல்வனை எதிர்த்து போட்டியிட்ட தினகரன் தோல்வியடைந்தார். இருப்பினும் அதிமுகவை 3 ஆம் இடத்திற்கு பின் தள்ளி, 2 ஆம் இடம் பிடித்தார்.
என்ன தாக்கம்
வாக்கு சதவீத அடிப்படையில் அமமுகவின் வாக்கு குறைந்து வந்தாலும், அந்த தேர்தல்களில் அதிமுகவின் வெற்றியை அமமுக பெரியளவுக்கு தடுத்ததாக விமர்சனம் எழுந்தது. தேவர் சமுதாய வாக்குகளும் தற்போது அவர் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்திருப்பதால் அந்த பிரச்சனையை சரி செய்திருப்பதாக அதிமுக, பாஜக சீனியர்கள் கருதுகிறார்கள்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது












Click it and Unblock the Notifications