Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TTV Dinakaran: ராஜ்யசபா எம்பி சீட்டுக்கு குறி வைக்கும் தினகரன்? தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லையாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அப்படியென்றால் அவர் ராஜ்யசபா எம்பியாகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என சொல்லப்படுகிறது. இதற்கான அறிவிப்புகள் பிப்ரவரி மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ttv dinakaran tamil nadu assembly election 2026 2026

தென் மண்டலம்

தென் மண்டலங்களில் செல்வாக்குடைய டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்பதை ஏற்க மறுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் (பாஜக தலைமையிலான கூட்டணி)இருந்து வெளியேறினார். இதையடுத்து அவரது நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

பாஜக கூட்டணி

அவரை பாஜக கூட்டணியில் இணைக்கவும் நிறைய முயற்சிகள் நடந்தன. இந்த நிலையில் அவர் திடீரென பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்த மதுராந்தகம் பொதுக் கூட்டத்தில் தினகரன் பேசுகையில், அண்ணன் எடப்பாடி பழனிசாமி " என்றார்.

அண்ணன் தம்பி

மேலும் இது அண்ணன் தம்பி சண்டை என்றும் பகையை மறந்து தமிழக மக்களின் நலனுக்காக அதிமுக இருக்கும் பாஜக கூட்டணியில் மனப்பூர்வமாக இணைந்துள்ளேன், எனக்கு எந்த அழுத்தமும் இல்லை என தெரிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி

அன்று எடப்பாடி பழனிசாமியை துரோகி என விமர்சித்து, அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றால் தற்கொலைக்கு சமம் என்றெல்லாம் பேசி பெஞ்சை உடைத்துவிட்டு தற்போது திடீரென யூடர்ன் அடித்து பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். தற்போது அவரை நம்பிய ஓபிஎஸ்ஸையும் டீலில் விட்டுவிட்டார்.

2026 தேர்தல்

இந்த நிலையில் நியூஸ் தமிழ் சேனலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தினகரன் கூறுகையில், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடவில்லை. தேசிய ஜனநாய கூட்டணியை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டேன். தவெகவுக்கு வருமாறு செங்கோட்டையன் என்னை அழைத்துக் கொண்டே இருந்தார்.

தவெகவுக்கு அழைப்பு

நான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்லும் ஒரு நாள் முன்பு கூட தவெகவுக்கு வந்துவிடுங்கள் என கேட்டார். ஆனால் நான் செல்லவில்லை. எந்த இடத்தில் தவெகவுடன் கூட்டணிக்கு செல்வேன் என நான் சொல்லவே இல்லை என தினகரன் கூறியிருந்தார்.

தவெகவுக்கு ஆதரவு

தவெகவுக்கு ஆதரவாக ஒவ்வொரு முறையும் தினகரன் பேசிய போதெல்லாம் அவர் அந்த கூட்டணிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நான் அப்படி சொல்லவே இல்லை என ட்விஸ்ட் கொடுத்துவிட்டார்.

தினகரன் போட்டியிடவில்லை

எல்லாவற்றுக்கும் மேலாக தினகரன் இந்த தேர்தலில் போட்டியில்லை என கூறிவிட்டார். காரணம் அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது அவருடைய ஆதரவாளர்களுக்கு பிடிக்கவில்லை. இந்த காரணத்தை சொல்லித்தான் தினகரனின் ரைட் ஹேண்ட்டாக இருந்த மாணிக்கராஜா அமமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்துவிட்டார்.

ராஜ்யசபா சீட்

இதனால் தனக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்குமோ கிடைக்காதோ என்ற அச்சம் தினகரனுக்கு எழுந்ததால்தான் அவர் போட்டியிடவில்லை என்கிறார்கள். இதனால் தினகரன் தனக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்குமாறு மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் கேட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

அதிமுக- அமமுக கூட்டணி இணைப்புக்கு காரணமே அமித்ஷா என தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் 2021 ஆம் ஆண்டே இருவரும் இணைய வேண்டும் என அமித்ஷா விரும்பியும் அது நடக்கவில்லை. ஆனால் இப்போது நடந்து விட்டதாக தினகரன் தெரிவித்திருந்தார்.

எம்பியாகிறாரா தினகரன்

எனவே அதிமுக கூட்டணியில் அமமுக இணைப்பு குறித்து அமித்ஷா பேசிய போது தினகரன் தனக்கு ராஜ்யசபா எம்பி சீட் வழங்குமாறு கேட்டிருக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே அவர் ராஜ்யசபா எம்பியாகிறாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+