சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"குறி" வெச்சாச்சு.. பதுங்கி காத்திருக்கும் பாஜகவும்.. எதிர்பார்ப்பில் தினகரனும்.. கப்சிப் சசிகலா!

ரிசல்ட்டுக்கு பிறகு பாஜகவுடன் தினகரன் நட்புறவை பேணுவாரா தெரியவில்லை

Google Oneindia Tamil News

சென்னை: அமமுக டிடிவி தினகரனின் அரசியலானது, சட்டசபை தேர்தலுக்கு பிறகு எவ்வாறு பயணப்பட போகிறது, அமமுக இந்த தேர்தலில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.. அத்துடன் அமமுக மீது பாஜகவின் குறியும் அழுத்தமாக விழுந்துள்ளதாக கூறப்படுகிறது..!

தினகரனை பொறுத்தவரை, மிக தேர்ந்த அரசியல்வாதி.. நுணுக்கம் தெரிந்தவர்.. இதுவரை இவர் தேர்தலில் போட்டியிட்டு வரும் நிலையில், 3 வது இடத்தை தன்னகத்தே வைத்துள்ளார்.

அன்று ஆர்கே நகர் தேர்தலில் எப்படி சசிகலா இல்லாமலேயே ஒரு தாக்கத்தை தமிழக அரசியலில் ஏற்படுத்தினாரோ, அதுபோலவே, இந்த முறையும் சசிகலா இல்லாமலேயே ஏற்படுத்துவார் என்கிறார்கள்.

இதென்ன கலாட்டா.... திமுக மாணவர் அணி செயலாளர் பதவிக்கு காய்நகர்த்தும் தயாநிதி மாறன்? இதென்ன கலாட்டா.... திமுக மாணவர் அணி செயலாளர் பதவிக்கு காய்நகர்த்தும் தயாநிதி மாறன்?

 3 காரணங்கள்

3 காரணங்கள்

அந்த வகையில், டிடிவி தினகரனின் அரசியல் அணுகுமுறைகளை கண்காணிக்கும்படி டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாம்.. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.. மொத்தம் 3 காரணங்கள் சொல்லப்படுகிறது. முதலாவதாக, இந்த முறை தினகரனின் அமமுகவின் ஓட்டுக்கள் யாருடைய ஓட்டுக்களை பிரிக்கிறது? அது அதிமுகவின் ஓட்டுக்கள் என்றால் எத்தனை சதவீதம் பிரிக்க வாய்ப்பு என்பது போன்ற நிலவரங்களை கேட்டுள்ளது.

 சிறுபான்மையினர்

சிறுபான்மையினர்

இந்த முறை கூட்டணியில் எஸ்டிபிஐ, ஓவைசி இருக்கும் பட்சத்தில் அமமுகவுக்கு ஓரளவு சிறுபான்மையினர் ஓட்டுக்கள் வழக்கத்துக்கு அதிகமாகவே விழக்கூடும் என்று தெரிகிறது.. சிறுபான்மையினர் ஓட்டுக்களை எவ்வளவுக்கெவ்வளவு அமமுக பிரிக்கிறதோ, அது அப்படியே திமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகள்தான் என்றும் சொல்லப்படுகிறது. இதைதான் பாஜகவும் எதிர்பார்க்கிறது. திமுகவையே குறி வைத்து கொண்டிருக்கும் பாஜகவுக்கு, திமுகவின் ஓட்டு பலத்தை குறைக்க அமமுக மூலம் கிடைக்க போகும் பெரிய பிளஸ் இதுவாகும்.

 அமமுக

அமமுக

அடுத்ததாக, ஓட்டு வங்கி, இந்த முறை அமமுகவுக்கு அதிகமாகும் என்கிறார்கள்.. கடந்த முறை தேர்தலில் 5 சதவீதம் வாக்கு வங்கியை தக்க வைத்துள்ளவர் தினகரன்.. அதுமட்டுமல்லாமல் உள்ளாட்சி தேர்தலில் 95 ஊராட்சிகளில் அமமுக வெற்றி பெற்றது.. கயத்தாறு, கண்ணங்குடி தொகுதியில் சேர்மன் பதவியையும் கைப்பற்றி அதிமுகவுக்கே டஃப் தந்தது.. வழக்கமாக உள்ளாட்சி தர்தல் என்றாலே, 90 சதவீதம் ஆளுங்கட்சிதான் அந்த தேர்தல்களில் வெற்றி பெறும் என்பது வழக்கமான ஒன்று.. இந்த நடைமுறையை உடைத்தது திமுக..

 தென்மண்டலம்

தென்மண்டலம்

அந்த வகையில், அமமுகவும் பல இடங்களில் 2வது இடத்தை தக்க வைத்ததை மறுக்க முடியாது. இதே பலம்தான், இந்த முறை தேர்தலிலும் கூடி உள்ளது. சசிகலா இல்லாத பட்சத்தில், தென்மண்டலங்களின் ஓட்டுக்களை பிரித்து, கொங்கு மண்டலத்திலும் ஓரளவு வாக்குகளை தனக்கு சாதகமாக டிரான்ஸ்பர் செய்ததாக தெரிகிறது.. எனவே, ஓட்டு வங்கி தினகரனுக்கு அதிகமானால், இதை வைத்து பாஜக வேறு விதமான காய்நகர்த்தலைகளை ஆரம்பிக்கும் என்கிறார்கள்..

பாஜக

பாஜக

இறுதியாக, டிடிவி தினகரனை ஒட்டி சில முக்கிய முடிவுகளை பாஜக எடுக்கலாம், அல்லது சில சாதகமான காரியங்களை செய்யலாம் என்கிறார்கள். இன்னும் வெளிப்படையாக சொல்லப்போனால், இபிஎஸ், ஓபிஎஸ்ஸை தனக்கு எதிராக திருப்பிவிடாமல் தடுத்து நிறுத்தும்படியான காரியத்தை பாஜக செய்யும் என்று தினகரனே பலமாக நம்புகிறாராம். அதனால்தானோ என்னவோ, தேர்தலுக்கு கொஞ்ச நாள் முன்பிருந்தே பாஜகவை விமர்சிப்பதை நிறுத்தி கொண்டவர் தினகரன்..

 என்ன பிளான்?

என்ன பிளான்?

"நமது குறி திமுகதான், எதிரியை, துரோகியை வீழ்த்துவதே நமது லட்சியம்" என்று சொல்லி, பாஜகவை விமர்சிக்காமலும் கண்டுகொள்ளாமலும், நாசூக்காக ஒதுங்கி கொண்டதையும், இங்கு குறிப்பிட வேண்டி உள்ளது. அப்படியானால், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பாணியில் இந்த இரு கட்சிகளின் பயணம் அமையுமா? அல்லது சசிகலாவை வைத்து பாஜக வேறு ஏதேனும் பிளானில் இறங்க போகிறதா என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!

English summary
Will TTV Dinakaran have good relations with BJP after the Election result
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X