குலுங்குது சென்னை.. பழுத்தது கோரிக்கை? ஸ்டாலினின் மெசேஜ் வேற..திமுகவில் இன்று விசேஷம் நடக்குதா? பரபர
சென்னை: உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவியை வழங்க, திமுக மேலிடம் உறுதி செய்துள்ளதாக தெரிகிறது. அடுத்த 10 நாட்களில் துணை முதலமைச்சராக அறிவிக்கப்படுவார் என்று மூத்த அமைச்சர்கள் தரப்பில் சொல்லப்பட்டுள்ள நிலையில், இன்றே கூட அதற்கான அறிவிப்புகள் வரலாம் என்றும் சலசலக்கப்படுகிறது. இதனால் திமுக வட்டாரமே பரபரத்து காணப்படுகிறது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்போவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.. இந்த தகவலை இதுவரை எந்த தமிழக அமைச்சர்களும் மறுக்கவில்லை. மாறாக, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கினால், அதை வரவேற்பதாகவே பேட்டிகளை தந்து வருகிறார்கள்.

பொறுப்புகள்: ஆனால், "பொறுப்புகள் மாறுவது குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார்" என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டபோது, "கோரிக்கைகள் வலுத்திருக்கிறதே தவிர இன்னும் பழுக்கவில்லை" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விருதுபெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், "உங்களுக்கும் மேடையில் இருக்கும் தலைவர்களுக்கும் ஏன் இன்னும் தயக்கம், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டாமா?" என்ற கேள்வியை எழுப்பியிருந்த நிலையில், இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை கிளப்பிவிட்டது.
இன்று அறிவிப்பா?: இதுகுறித்து நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசியிருந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்,"விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் அடுத்த 10 நாட்களில் துணை முதலமைச்சராக அறிவிக்கப்படுவார். சொல்லப்போனால் அறிவிப்பானது நாளை கூட (இன்று) வந்தாலும் வரலாம், நாங்கள் அனைவரும் அதற்காக தயாராக உள்ளோம்" என்று கூறியிருந்தது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது.
இதற்கு நடுவில், உதயநிதியை துணை முதல்வராக்கும் முடிவிற்கு ஸ்டாலின் வந்துவிட்டதாகவும், சீனியர்களையும், அமைச்சர்கள், எம்பிக்களையும் இன்று அதாவது 20ம் தேதி சென்னையில் இருக்க வேண்டும் என்று அவசர மெசேஜ் அனுப்பியிருப்பதாகவும் தகவல் கசிந்தது, அதற்கு மேல் ஆர்வத்தை ஏற்படுததி வருகிறது.
எதிர்பார்ப்பு: நேற்று முன்தினமும், உதயநிதிக்கு பொறுப்பு தரப்போவதாக இப்படித்தான் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், நாள் சரியில்லை என்று சிலர் கருதியதால், வெள்ளிக்கிழமை அதாவது இன்றைய தினமே வைத்துக்கொள்ளலாம் என்றும் முடிவானதாம். இப்படி ஏகப்பட்ட தகவல்கள் "இன்றைய 20ம் தேதியையே" சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது.
அதனால், இன்றே உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வரப்போகிறதா? என்று தெரியாததால், திமுகவினர் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்களாம்..!!












Click it and Unblock the Notifications