அரசு ஊழியர்களுக்கு அடித்த லாட்டரி.. பாலை வார்க்க போகும் மோடி.. வருகிறது நிர்மலாவின் அந்த அறிவிப்பு?
சென்னை: இன்று தாக்கல் செய்யப்படும் மத்திய அரசின் முழு பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் தொடர்பான முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட அது பாதி பட்ஜெட்.. இப்போது தாக்கல் செய்யப்பட உள்ளது முழு பட்ஜெட். 2024 லோக்சபா தேர்தல் முடிந்து பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இந்த பட்ஜெட் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

2024 மக்களவை தேர்தலுக்கு பின் மோடி 3.0 அரசு தாக்கல் செய்யும் இறுதியான பட்ஜெட் என்பதால் இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்று தாக்கல் செய்யப்படும் மத்திய அரசின் முழு பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் தொடர்பான முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அரசு ஊழியர்கள்: 8வது வருமான கமிஷன் அமைப்பதற்கான பரிந்துரை அமைச்சரவை சார்பாக பிரதமர் மோடிக்கு நேற்று இரவு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த கமிஷன் அமைக்கப்பட்ட பின் அதன் முடிவின் பெயரில் வருமான வரி உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது மத்திய ஊதியக் குழுவை உருவாக்குவதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் பிற சலுகைகள் தொடர்பான பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு அதன் பரிந்துரைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும்.
7வது ஊதியக் குழு அமலுக்கு வந்ததில் இருந்து 10 ஆண்டுகள் இடைவெளியுடன், அடுத்த ஊதியக் குழுவை 2025 அமல்படுத்த வேண்டும். பொதுவாக இரண்டு வெவ்வேறு ஊதியக் கமிஷன்களை அமல்படுத்துவதற்கு இடையே 10 ஆண்டுகள் இடைவெளியை மத்திய அரசு பின்பற்றுகிறது.
ஆனால், அடுத்த ஊதியக் குழு அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை வாய் திறக்காமல் இருந்தது. லோக்சபா தேர்தல் முடிந்து, மோடி 3.0 தலைமையில், 8வது சம்பள கமிஷன் அமைப்பது குறித்த சலசலப்பு தற்போது வலுத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் 8வது வருமான கமிஷன் அமைப்பதற்கான பரிந்துரை அமைச்சரவை சார்பாக பிரதமர் மோடிக்கு நேற்று இரவு அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த கமிஷன் அமைக்கப்பட்ட பின் அதன் முடிவின் பெயரில் வருமான வரி உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி: ஏற்கனவே தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 9% உயர்வு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 46% இருந்து 50 % உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதன் மூலமாக மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 46 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயரும்.
இந்த அறிவிப்பால் மாநில அரசுக்கு 2846.16 கோடி செலவு ஏற்படும். இதன்மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். 46% அகவிலைப்படி 01.01.2024 முதல் 50% ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த அகவிலைப்படி உயர்வு தொகை அந்த மாதமே வரவு வைக்கப்பட்டு உள்ளது.
இரண்டாவது முறை: ஒரு வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டில் இப்போது மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 9% உயர்வு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2016ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்குபவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. 1.1.2024 முதல் அகவிலைப்படியை 9% உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசு; விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்த்தப்படும். அவர்களுக்கு இந்த ஆண்டு டிஏ உயர்வு 4 சதவிகிதம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 46 சதவிகிதமாக உள்ள டிஏ 50 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 18 மாதங்களுக்கான டிஏ அரியர் விரைவில் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இது போக இன்னொரு பக்கம் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.
தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்தது கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும்.
அதுவே பழைய ஓய்வூதிய முறையானது ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50% என்னவோ.. அந்த அளவிற்கு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்தது. இப்போது புதிய முறையால் கடைசி ஊதியத்தில் 38% என்னவோ.. அந்த அளவிற்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது. இந்த நிலையில்தான் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.
இது போக மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வோடு சேர்த்து எச்ஆர்ஏ உயர்வும் இருக்கும் என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி தற்போது எக்ஸ், ஒய், இசட் என்று மூன்று பிரிவுகளில் எச்ஆர்ஏ சம்பளம் தரப்படுகிறது.
இவை முறையே 27 சதவிகிதம், 18 சதவிகிதம், 9 சதவிகிதம் ஆகும். இந்த நிலையில்தான் இதில் எல்லா பிரிவிற்கும் தலா 3 சதவிகிதம் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக அகவிலைப்படி 50 சதவிகித்தை தொட்டால் மட்டுமே எச்.ஆர். ஏ உயர்த்தப்படும். இந்த முறை தேர்தலை மனதில் வைத்து அகவிலைப்படி 50 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்கிறார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு டிஏ உயர்வு 4 சதவிகிதம் வரை இருக்கும் என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 46 சதவிகிதமாக உள்ள டிஏ 50 ஆக வாய்ப்புள்ளது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications