அரசியலுக்கு வருகிறாரா வைகோ மகன் துரை வையாபுரி
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி அரசியலுக்கு வரவுள்ளதாக ஒரு தகவல் பரவியுள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை பொறுத்தவரை தமிழக பிரச்சனைகளுக்காக சுற்றி சுழன்று பம்பரமாக பணியாற்றக்கூடியவர். அரசியலுக்கு அவசியமான ஒன்று சுறுசுறுப்பு. அந்த சுறுசுறுப்பு தான் வைகோவின் அதீத பலம் .

கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக பொதுவாழ்வில் ஈடுபட்டு வரும் வைகோ, தன்னை தவிர தனது குடும்பத்தினர் யாரையும் கட்சியிலும் சரி, பொது இடங்களிலும் சரி முன்னிலைப்படுத்தியதில்லை. இந்நிலையில் அவருக்கு வயது ஏறத்தாழ 70-ஐ கடந்து விட்டதால், கட்சியை வழிநடத்த, குறிப்பாக கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்ச புதுமுகம் தேவைப்படுவதாக கூறுகின்றனர் மதிமுக சீனியர்கள்.
இந்நிலையில், வைகோவின் மகன் துரை வையாபுரியை கட்சிப்பணிகளில் களமிறக்க அவர்கள் விரும்புகிறார்களாம்..இது தொடர்பாக வைகோவிடம் சிலர் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால், வைகோ தனது மகனை அரசியலில் திணிக்க விரும்பவில்லையாம்.
வாரிசு அரசியல் பற்றி ஊரே விமர்சனம் செய்துவிட்டு தானும் அந்த காரியத்தை செய்தால் நல்லா இருக்காது என நினைக்கிறாராம். ஆனால் கட்சியினர் விடுவதாக இல்லையாம். எப்படியாவது வைகோவின் மனதை கரைத்து துரை வையாபுரியை கட்சிப்பணிகளில் ஈடுபடுத்த வைக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார்களாம்.
தமிழக அரசியல் தலைவர்களிலேயே தனது குடும்பத்தினரை அரசியலுக்குள் திணித்து அக்கப்போர் செய்யாத ஒரே அரசியல் தலைவர் வைகோதான். இந்த நிலையில் அவரது மனதையும் கரைக்கும் வேலையில் மதிமுக நிர்வாகிகள் சிலர் இறங்கியிருப்பதால் துரை வையாபுரி அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பர்ப்பு எழுந்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications