எம்ஜிஆர், சிவாஜியை சாய்த்த Cinema-Politics சென்டிமென்ட்..விஜய் தாங்குவாரா! வரலாறு முக்கியம் அமைச்சரே
சென்னை: வரும் பொங்கலை முன்னிட்டு, தமிழ் சினிமாவில் பெரிய போட்டி உருவாகியுள்ளது. நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படமும், சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் சினிமா அரசியலில் ஒரு சென்டிமென்ட் இருக்கிறதாம். சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகர்கள் அரசியலுக்கு வந்த போது அவர்களது கேரியர் காலியாகிவிடுமாம். அது விஜய்க்கும் பலிக்குமா? அல்லது அதனை விஜய் முறியடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசியலில் முழுமையாக கவனம் செலுத்தி வரும் தவெக தலைவர் விஜய், கடைசித் திரைப்படமாக அறிவித்துள்ள படம் தான் 'ஜனநாயகன்'. போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார்.
கேவிஎன் நிறுவனம் தயாரித்த இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் விஜய் உடன், பாபி தியோல், மமிதா பைஜூ, நரேன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்த்துள்ள நிலையில், அனிருத் இசையமைக்க இதுவரை 3 பாடல்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

விஜய்
இது ஒருபுறம் இருக்க பராசக்தி படத்துடன் விஜய் படம் மோதுவதால் தியேட்டர்கள் கிடைக்குமா? எதிர்பார்த்த வசூலை ஜனநாயகன் அள்ளுமா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இதுமட்டும் அல்லாமல் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் சினிமாவில் கேரியரை இழந்ததாக தான் வரலாறு என்கின்றனர் சினிமா ஆர்வலர்கள் அதற்கு உதாரணமாக எம்ஜிஆர், சிவாஜியையே கைகாட்டுகின்றனர். காரணம் அரசியலுக்கு வரும் போது இவர்கள் நடித்த படங்கள் அவ்வளவாக மக்களிடம் எடுபடவில்லை.
ஜனநாயகன்
எம்.ஜி.ஆரின் மீனவ நண்பன் (1977) மற்றும் சிவாஜியின் மக்கள் என் பக்கம் (1978) ஆகிய படங்கள் அவர்களின் அரசியல் பிரவேசத்திற்கு முந்தைய கடைசிப் படங்கள் என்றாலும், இரண்டுமே பெரிய வெற்றியைப் பெறவில்லை. எம்.ஜி.ஆர் அரசியலுக்குப் பிறகு படங்கள் நடித்தாலும், சிவாஜி கணேசன் அரசியலில் நுழைந்த பின் நடித்த படங்களும் வெற்றியைத் தேடித் தந்தன. ஆனால் அந்தப் படங்கள் அரசியலுக்குப் பிந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவை.
எம்.ஜி.ஆர் - சிவாஜி
மீனவ நண்பன் எம்.ஜி.ஆர் தமிழக முதல்வரான பிறகு 1977-ல் வெளியான படம் இது. படம் வெற்றிபெறவில்லை. மக்கள் என் பக்கம் சிவாஜி கணேசன் அரசியலில் இருந்தபோது வெளியான படம். இதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. என்பது குறிப்பிடத்தக்கதூ. இதேபோல், விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பிறகு அவரது படங்கள் வணிக ரீதியாக பெரிய வெற்றிகளைப் பெறவில்லை, பல படங்கள் தோல்வியடைந்தன. விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்பு நடித்த வானத்தைப்போல, ரமணா, சின்ன கவுண்டர், கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. 2005இல் அவர் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நடித்த பேரரசு, சபரி, அரசாங்கம், மரியாதை, உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
சினிமா சென்டிமென்ட்
விஜயகாந்த் மட்டுமல்ல.. டி ராஜேந்தர், சரத்குமார், பாக்யராஜ், ராமராஜன், அருண் பாண்டியன் என அரசியல் ஆசையால் சினிமாவை விட்டு, அரசியலுக்கு வந்து, அங்கும் அடி வாங்கி, இங்கும் அடி வாங்கிய நிலை தான் உள்ளது எனும் சினிமா ஆய்வாளர்கள், தனது கேரியரின் உச்சத்தை விட்டு அரசியலுக்கு வந்திருப்பதாக சொல்லும் விஜய், ஜனநாயகன் மூலம் இந்த பழைய சென்டிமென்டை உடைப்பாரா? என ஆர்வத்துடன் காத்திருப்பதாகச் சொல்கின்றனர்.












Click it and Unblock the Notifications