விஜய்யின் கேரள பயணம் ரத்து? முதல்வர் விடி சதீஷன் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை? என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி ஆட்சியை அமைக்கும் நிலையில், முதல்வராக வி.டி. சதீசன் நாளை பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைய உள்ள நிலையில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். தமிழகத்தில் தவெக - காங்கிரஸ் கூட்டணியில் உள்ளதால் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

Vijay Skip Kerala CM Swearing-In Speculation Grows Ahead of VD Satheesan Oath Ceremony

கேரளாவில் முதல்வர் பதவியேற்பு விழா

கேரளத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 63 இடங்களை வென்றது. இதையடுத்து, அங்கு முதல்வர் யார் என்பதை முடிவு செய்ய காங்கிரஸ் மேலிடம் படாதபாடு பட்டது. ஒருவழியாக கடந்த இரு தினங்களுக்கு முன்பாக கேரளாவில் முதல்வராக வி.டி. சதீசனுக்கு ஓகே சொன்னது காங்கிரஸ் மேலிடம். இதையடுத்து, அவர் நாளை பதவியேற்க உள்ளார்.

வி.டி. சதீசனுடன் 21 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 பேரும், கூட்டணி கட்சியான இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்கில் இருந்து 5 பேரும் கேபினட்டில் பங்கேற்கிறார்கள். திருவனந்தபுரத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன.

பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், முதல்வர் விஜய்க்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

முடிவை மாற்றிய விஜய்?

இந்த அழைப்பை ஏற்று விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது முடிவை மாற்றியிருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் கேரளா செல்வதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்று விமான நிலைய வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால், விஜய் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வராக விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் இருவரும் எடுத்துக்கொண்ட செல்பி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தேசிய அளவில் டிரெண்டிங் ஆனது. இந்த சூழலில், நாளை தமிழக முதல்வர் விஜய்யும் ராகுல் காந்தியும் மீண்டும் ஒரே மேடையில் ஏறலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் பங்கேற்க மாட்டார் என்று வெளியாகியிருக்கும் தகவல் அவரது கேரள ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

விஜய் பங்கேற்பாரா இல்லையா?

எனினும், விஜய் பங்கேற்பாரா இல்லையா என்பது பற்றி இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய ஸ்டேடியத்தில் நாளை காலை 10 மணிக்கு கேரள முதல்வர் வி.டி. சதீசன் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் கேரள எதிர்க்கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர்.

விஜய் அடுத்த வாரம் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். பிரதமர் மோடியை சந்தித்து தமிழக வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாகவும் தமிழகத்திற்கு சேர வேண்டிய நிதியை கோருவது குறித்தும் விஜய் இந்த சந்திப்பின் போது வலியுறுத்த திட்டமிட்டுள்ளார். இந்த டெல்லி பயணத்தின் போது ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களையும் விஜய் சந்தித்து பேச இருப்பதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+