2.0 ரெடியாகுதே.. திமுகவின் அந்த அஸ்திவாரத்தில் கை வைக்கும் விஜய்.. இது பயங்கரமான பிளான் ஆச்சே!
சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் நேரடி போட்டியாக இல்லாமல் போனாலும் கூட.. திமுகவின் முக்கியமான அஸ்தி வாரத்தில் அந்த கட்சி கை வைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
நடிகர் விஜய் தான் தொடங்கியிருக்கும் கட்சியின் பெயரை அறிவித்து வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் திமுக, அதிமுக, பாஜகவை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். அவரின் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் ஆணையத்தில் இந்த பெயர் முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கட்சி தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கைதான் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம் அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.
அரசியல் கட்சி அறிவிப்பு: தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் 'ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
அரசியல் மாற்றம் முக்கியம்: மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (பிறப்பால் அனைவரும் சமம் ) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும், என்றுள்ளார்.
திமுக அஸ்திவாரம் - போட்டி: 2026 சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் நேரடி போட்டியாக இல்லாமல் போனாலும் கூட.. திமுகவின் முக்கியமான அஸ்தி வாரத்தில் அந்த கட்சி கை வைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
1. 2026ல் விஜய் திமுக கூட்டணியை உடைக்க அல்லது குலைக்க வாய்ப்பு உள்ளது. விசிக சிபிஎம், சிபிஐ ஆகியவற்றை விஜய் தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கலாம்.
2. விசிக சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் விஜயை காரணம் காட்டி திமுக கூட்டணியில் கூடுதல் இடங்களை கேட்கலாம்.
3. 2026 சட்டசபை தேர்தலில் விஜய் தனியாக மக்கள் நலக்கூட்டணி போல புதிய 2.0 அமைக்கலாம். 2016ல் மக்கள் நலக்கூட்டணி திமுகவின் வாக்குகளை பிரித்தது.
4. விஜயின் பின்புலம் காரணமாக திமுகவிற்கு செல்லும் சிறுபான்மை வாக்குகள் சிதறும்.
5. திமுகவின் அஸ்திவாரமாக இருக்கும் 10-12% சிறுபான்மை வாக்குகள் சிதறும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications